பிப்.22: 2002-ம் ஆண்டு கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அக்மதாபாத் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் பிப்ரவரி 25-ம் தேதி அறிவிக்கப்படும். மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோத்ரா ரயில் எரிப்பு தொடந்து நடந்த கலவரங்களில் 1200 பேர் உயிரிழந்தனர்,இலட்சக் கணக்கானோர் வீடு சொத்துகளை இழந்தனர்.
தீர்ப்பின்போது சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் எரிப்பு சம்பவத்தின் பின்னணியில் திட்டமிட்ட சதி இருந்ததை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. முன்னதாக ரயில் எரிப்பு சம்பவம் ஒரு விபத்து என்று சில தரப்பினரும். திட்டமிட்ட சதி என்று மற்றொரு தரப்பினரும் கூறிவந்தனர்.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக காட்ட்ப் பட்ட மெளல்வி உமரை போதிய ஆதாரம் இல்லாததால் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்தது. சபர்மதி எக்ஸ்பிரஸில் கரசேவகர்கள் இருந்த எஸ்-6 பெட்டியை எரிக்குமாறு ஒரு கும்பலுக்கு உமர் உத்தரவிட்டதாக சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றம்சாட்டியிருந்தது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் 2/3 பேரை நிதிமன்றம் விடுதலை செய்தது சிறப்பு புலனாய்வு குழுவிற்கு நெருக்கடியை உருவாகியுள்ளது.இதில் விடுதலை செய்யப்பட்டவர்களில் 63 பேர் சுமார் 9 வருடம் சிறை தண்டனை அனுபவித்து விட்டாடர்கள்.
தீர்ப்பின் முழு விவரமும் வந்த பின் மேல் முறையீடு செய்யப் படும் என தெரிகிறது..
கோத்ரா சம்பவமும் அதைத்தொடர்ந்து நடந்தவையும் மிகவும் வருந்தத்தக்கவை.இனியும் இது மாதிரி நடக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteகோத்ரா சம்பவத்துக்குப்பின் உடனடியாக நடத்தப்பட்ட கலவரம் மிகக்கவனமாக திட்டமிடப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று. அதனால் இது இஸ்லாமிய பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட ஒன்றாக இருக்கமுடியாது. மேலும் குஜராத்தில் காவல்துறையும் நீதித்துறையும் இந்துத்துவமயமாகிவிட்டது என்றுதான் கருதுகிறேன். இந்தத்தீர்ப்பு அக்கருத்தை உறுதிப்படுத்துவதாகக்கூட இருக்கலாம்.
ReplyDelete