புவி அளவியலின்(geodesy) தந்தை அல் பைரூனி
அல் பைரூனி என்பவர் ஒரு பெர்ஷிய நாட்டு அறிஞர்.இவர் அறிவியல்,கணிதம், உள்ளடங்கிய பல் கலைகளில் தலை சிறந்த மேதை. இவர் 973 ல் காத்,உஸ்பெக்கிஸ்தானில் பிறந்தவர். இந்தியாவின் பல்வேறு கலைகள்,வானவியல் போன்றவறை பற்றி கூட ஆய்வு செய்து 146 புத்தகங்கள் எழுதியவர்.கிரேக்க தத்துவம்,அறிவியல் முதலியவற்ரை பெர்ஷிய மொழி பெயர்ப்பு செய்தவர்.
இவரை பற்றி ஏன் இந்த பதிவு என்றால். இவர்தான் முதன் முதலில் உலக் உருண்டையின் ஆரத்தை எளிதாக கணக்கிடும் முறையை உருவாக்கியவர். இவர் கண்டுபிடித்த முறை சிறிது மாற்றங்களுடன் இன்னும் பயன் படுத்தப்படுகிறது.
இப்பதிவு பூமியின் ஆரத்தை கண்டுபிடிக்கும் அவரது முறையை பற்றித்தான்.
இதற்கு முதலிலும் சில முயற்சிகள் நடை பெற்றாலும் பூமி உருண்டையானது என்ற கருத்தின் அடிப்படையிலேயே இவரது ஆய்வு மேற்கொண்டது எனக்கு முகவும் சிறப்பான ஒரு விஷயமாக தெரிகிறது.பூமி உருண்டையானது என்ற கருத்தை த்தை கி.மு 300ல் கிரேக்க அறிவியலாளர் எரோஸ்தனிஸ் கூறி பூமியின் சுற்றளவை தோராயமாக கண்டுபிடித்தார்.
அல் பைருனியின் செயல் முறை.
1.இதற்கு ஒரு கடல் அருகில் உள்ள ஒரு மலை தேவைப்படுகிறது.
2. மலையின் கீழ் இருந்து அடிவாரத்தில் இரு இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.மலை மற்றும் தேர்ந்தெடுக்கும் இடங்கள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.இரு இடங்களௌக்கும் உள்ள தூரம் அளக்க வேண்டும்.
3.அல் பைரூனி கண்டுபிடித்த ஒரு கருவி(ஸ்பெக்ட்ரொ மீட்டர் மாதிரி) மூலம் இரு இடங்களில் இருந்தும் மலை உச்சியின் கோணம் அளக்க வேண்டும்.
இடங்களுக்கிடையே உள்ள தூரம்,இரு கோணங்கள் மூலம் மலையின் செங்குத்து உயரம் கணக்கிடப் படுகிறது.
4.பிறகு மலையுச்சிக்கு சென்று கடலை நோக்கி அந்த கருவிஅயை திருப்பி கடலும் மேககமும் சந்திக்கும் மிக அதிக கோணத்தை அளக்க வேண்டும்.
மலையின் செங்குத்து உயரம் ,மற்றும் இப்போது அளவிட்ட கோணம் ஆகியவற்றுடன் எளிதாக பூமியின் ஆரம் கணக்கிடலாம்.
அல் பைரூனியின் இந்த கணக்கிடும் முறை மிகவும் பாராட்டத்தக்கது என்றாலும்.இவரது கண்டுபிடிப்புகளை மத வாதிகள் தங்களுக்கு சாதகமாக கூறி வருவதை தவிர்ப்பதும் இப்பதிவின் நோக்கமாகும்.
இஸ்லாமியர்களிலும் சில அறிவியலாளர்கள் இருப்பதும் இயல்பான விஷயமே அறிவியலில் மததலையீடு இல்லாத்தால்தான் இவரால் செய்ய முடிந்தது என்பதற்கும் ஆதாரம் தருகிறேன்.
இவருக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் சோதிடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு உண்டு.இதனை பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்பது இவர் மேல் குத்தப்படும் மத முத்திரையை உஅடைத்துவிடும் என்று கருதுகிறேன்..
அறிவியலாளர்கள் இயற்கையை அறிந்து கொள்வதிலும்,ஆய்வுகள் மூலமே முடிவுகளை எடுப்பவர்கள். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் மதத்தை அறிவியலில் கலக்கும் செயலை செய்ய மாட்டார்கள்.ஆய்வின் முடிவை ஆண்டவன் கூறியதாக கூற மாட்டார்கள்.
No comments:
Post a Comment