மதங்களை நாம் விமர்சிப்பது மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம் என்பதை உணர்த்தவும் அதன் எல்லைகளை அறிந்து கொள்ளவற்கே. எல்லா மதங்களும் அடிப்படையில் ஒன்றே. இறைவனை பற்றி ஒரு கொள்கையாக்கமும் அதனை நிறுவ பல புத்தகங்களும்,அழிவில்லாப் பெரு வாழ்வை அடைய கூறப்படும் வழிமுறைகளுமாக எல்லா மதங்களும் ஒன்றே.மக்கள் வாழும் இடம் ,சூழ்நிலை காரணமாக சில வித்தியாசமான நடைமுறைகள் மதங்களுக்கு உண்டு.
ஏன் மதத்தின் எல்லைகளை அறியவேண்டும் என்று கேட்கும் நண்பர்களுக்காக எல்லை மீறி வன்முறை வெறியாட்டம் ஆடிய ஒரு வரலாற்று கால கட்டத்தை பற்றி இப்பதிவு எழுதுகிறேன்.
நமக்கு கிறித்தவம் என்றாலே அன்பின் திரு வடிவம்,அமைதியின் மறு வடிவம் என்று ஒரு பிம்பம் உண்டு. ஆனால் வரலாறு அவ்விதமாக கூறவில்லை .இந்த அன்பு,அமைதி பேசும் மத வாதிகள் யூதர்கள்,பிற பிரிவு கிறித்தவர்கள், பிற மதத்தினர், மற்றும் சூனியக்காரர்கள்(அப்படி நம்பப் பட்டவர்களை) கூட்டம் கூட்டமாக பல நூற்றாண்டுகளாக கொன்று குவித்தார்கள்.
இந்த மத வன்முறைகளில் மிக கொடுமையானது ஸ்பானிஸ் மத வன்முறை(1478_1614).இதை பற்றிய ஒரு புத்தகம் அனைவரும் பதிவிறக்கம் செய்து படிக்கவும்,பகிர்ந்து கொள்ளவும்.
இன்னும் ஒரு புத்தகத்தில் சூனியக் காரர்களை எப்படி விசாரணை செய்வது ,தண்டிப்பது என்றெல்லாம் ஒரு செய்முறைன விளக்க்மே போட்டு இருக்கிறார்கள்.
அவர்கள் செய்வதற்கு இப்போது உள்ள கிறித்தவர்ம் எப்படி பொறுப்பாக முடியும் என்றும்,கிறித்தவ மதத்தின் கொள்கைகளுக்கு விரோதமாகவே இப்படி எல்லாம் நடந்தது என்று கூறும் நண்பர்களுக்கு ஒரு சின்ன விளக்கம்.
கொள்கையில் அன்பிருப்பதாக நீங்கள் நம்பும் ஒரு மதமே இப்படி மத அடிப்படைவாதிகளால் வழி நடத்தப்படும் வாய்ப்பு மதம் சார்ந்த அரசியலில் அதிகம் என்பதையே புரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
இந்த புதகங்களை படித்து மதத்தின் மீதான நம்பிக்கை எல்லை மீறும் போது
மதவாதி மிருகமாக மாறுவான் என்பதை அறிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
உங்கள் பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளிலும் இணையுங்கள்.
ReplyDeleteநிறைய ஹோம் வொர்க் கொடுத்துட்டீங்க ..
ReplyDeleteபடிச்சிட்டு வர்ரேன்........
saarvaakan சார்,
ReplyDeleteஇன்னும் சில தகவல்கள் குறித்து உரையாட வேண்டியுள்ளது. உங்களுடைய மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? பொதுவில் வைக்க விரும்பவில்லையெனில், தருமி அய்யாவுக்கோ, வால்பையனுக்கோ மெயில் அனுப்புங்கள். பெற்றுக் கொள்கின்றேன். நன்றி.
நண்பர் சங்கர்,
ReplyDeleteமிகத்தாமதமாகவே உங்களின் இத்தளம் பற்றிய அறிதல் கிடைத்தது. சிறப்பான பணி, தொடர்க.
என்னைப் போல் ஆங்கிலப் புலமை குறைந்தவர்களுக்காக நல்ல கட்டுரைகளையும் குறு நூல்களையும் மொழிபெயர்த்து அல்லது கருத்துப் பெயர்த்து வெளியிட்டால் பலனடைவோம்.
செங்கொடி