பஹ்ரைனில் மக்கள் ஆர்பாட்டங்கள் தொடர்கின்றது சவூதி மன்னர் ஆயிரம் பேரை கொண்ட இராணுவத்தை கடந்த திங்கள் கிழமைபஹ்ரைனுக்கு அனுப்பியுள்ளார் துபாயும் 500 பேரை கொண்ட படை ஒன்றை அனுப்பியுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிகின்றன பஹ்ரைன் பாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒரு தீவு கூட்டம் இந்த சிறிய தீவு கூட்டம் 33 தீவுகளை கொண்டுள்ளது இதன் பெரிய தீவு 55 கி.மீ நீளத்தையும் 18 கி.மீ அகலத்தையும் கொண்டுள்ளது இங்கு உள்நாட்டு மக்களை விடவும் வெளிநாட்டு மக்கள் அதிகம் வாழ்கின்றனர் இந்த நாட்டின் மக்கள் தொகை 12 இலட்சத்தி 35 ஆயிரம் என்ற மிகவும் சிறிய மக்கள் தொகையை கொண்டுள்ளது.
ஆனால் மக்கள் தொகையில் 54 வீதமானவர்கள் வெளிநாட்டவர்கள் இதில் இலங்கையர் , இந்தியர் பிலிபைன் போன்ற நாடுகளை சேர்ந்தவர்களை அதிகம் கொண்டுள்ளது. அதிகம் வெளிநாட்டவர்களை கொண்டுள்ளமையால் முஸ்லிம்களின் வீதம் 81.2 ஆக குறைந்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது கிறிஸ்தவர்கள் 8 வீதமும் ஏனைய மதத்தவர்கள் 9.8 வீதமும் உள்ளனர் இவார்களில் கணிசமான யூதர்களும் , இந்துக்களும் உள்ளனர் இந்தியர்கள் 3 இலட்சம் பேர் அங்கு தொழில் புரிந்து வருகின்றனர்.
பஹ்ரைன் மக்கள். அந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். ஆனால் அறவழியில் போராட முயன்ற மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் பலியாகினர்.அவசரநிலை : பஹ்ரைனில் கலவரம் கட்டுக்கு அடங்காமல் சென்று கொண்டிருப்பதால் அங்கு 3 மாத காலத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ...
பெரும்பான்மை மக்கள் ஷியா கொள்கையை பின்பற்றுபவர்கள். நாட்டை ஆள்பவரோ சுன்னி இஸ்லாமிய கொள்கையை பின்பற்றுபவர். பிரச்னையின் அடிப்படையே இதுதான். மேலும் அங்குள்ள இந்திய மக்கள் மன்னருக்கு ஆதரவாக களம் இறங்கி உள்ளதையும் பார்க்கையில் மன்னர் ஆட்சி தொடர்வதே அங்குள்ள வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு என்பது தெளிவாகிறது.
ReplyDelete/மன்னர் ஆட்சி தொடர்வதே அங்குள்ள வெளிநாட்டவருக்கு பாதுகாப்பு என்பது தெளிவாகிறது/
ReplyDeleteபெரும்பான்மையினர் சிறுபான்மையினர் பிரசினை சுமுகமாக தீர்க்கப் பட வேண்டும்.ஆட்சி அதிகாரம் மக்களுடையது.சவுதி ,இரான்,தங்களாதிக்கத்தை நிலை நாட்ட நடக்கும் அரசியலே இது
.
குடியுரிமை அற்ற வெளிநாட்டவரின்[இந்தியர்] விருப்பம் என்பது இங்கு தேவையற்றது