Saturday, August 27, 2011

Flat Earth Society




Introduction To Flat Earth Theory





Why the Flat Earth Idea Wasn't Dumb





Thursday, August 25, 2011

சமரசம் உலாவும் இடமே!!!!: ரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...

சமரசம் உலாவும் இடமே!!!!: ரிச்சர்ட் டாக்கின்ஸின் மத சார்பற்ற ஐரோப்பாவிற்கான ...: ரிச்சர்ட் டாக்கின்ஸ் பற்றி அனைவரும் அறிவோம்.இப்போதைய குறிபிடத்தக்க பரிணாம் உயிரியலாளர்,இறை மறுப்பாளர். வரலாறு படித்தவர்களுக்கு ஐரோப்பாவின...

Tuesday, August 23, 2011

பிரபஞ்ச ஒழுங்கமைக்கப் பட்ட(fine tuning) படைப்புக் கொள்கை சரியா?


இணையத்தில் மத விளம்ப்ர பிரச்சாரம் நடைபெறுவது நாம் அறிந்ததே.விவாதத்தில் சகலத்தையும் விள‌க்குவோம் என்பதே கொள்கையாக கொண்டவர்கள்.இவர்களை கண்டு கொள்ளாமல் செல்வதே நல்லது என்றாலும் என்ன சொல்கிறார்கள் அதற்கு நாமும் பதில் சொல்லி பார்ப்போமே என்ற சிறு முயற்சிதான் இது.

இந்த பதிவில் பார்த்த கேள்விகளுக்கு பதில் இது

மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த விஷயம்.ஒருவருக்கு பிடித்த மதத்தை பின்பற்றும் உரிமை அனைவருக்கும் உண்டு. உண்மையான அன்மீகம்,இறைமறுப்பு என்பது முடிவற்ற தேடம் என்பதை பல பதிவுகளில் அலசி இருக்கிறோம்.ஆனால் நாங்கள் அனைத்தும் அறிந்து புரிந்து விளக்குவோம் எனில் விளக்கத்டையு பார்த்து விடுவோம்.இது ஒரு பதிவுக்கு இன்னொரு பதிவு அவ்வளவுதான்.
இது முழுக்க முழுக்க நகைச்சுவை பதிவு.
 சிவப்பு நண்பரின் கேள்விகள்.கருப்பு நம் பதில்கள்

____________
நாத்தீகரா நீங்கள்? அப்போ இந்த கேள்விகளெல்லாம் உங்களை பார்த்துதான்..

இதுதான் இப்பதிவு எழுத காரணமான் வரிகள்.

இந்த பிரபஞ்சம்,இந்த பூமி,அதில் உள்ள உயிரினங்கள்(மனிதன் உட்பட),அதுவல்லாது,உயிர் வாழத்தேவையான நீர்,காற்று ஒளி,இவைகளின் வடிவமைப்பு என ஆதி முதல் அந்தம் வரை அத்துனையும் இயற்கையாகவே உருவானதாக கருதுகிறீர்களா???

பிரபஞ்ச‌த் தோற்றத்தை விளக்க இறைவன் தேவையில்லை.இயற்பியல் போதும்.இத்னை ஸ்டீஃபன் ஹாக்கிங் விள்க்குகிறார்.தவறு என்றால் ஒரு மின்னஞ்சல் அல்லது  இதே மாதிரி படைப்புக் கொள்கையில் இந்த சான்றுகளை எல்லாம் விளக்கி ஒரு புத்தகம் எழுதலாம்.அறிவியல் கொள்கை என்பது சான்றுகளுக்கு விளக்கம் அளிக்கிற‌து.மதக் கொள்கை புத்தக்த்தின் கூற்றுகளுக்கு சான்று ஏற்படுத்த பார்க்கிரது.

இப்போதைய அறிவியல் கருத்தியலின் படி பல பிரபஞ்சங்க்ள்.நமது பிரபஞ்சம்  மிகப் பெரியது அதாவது 46 மில்லியன் ஒளி வருடங்கள்.இது 13.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியது.அதில் கண்டுபிடிக்கப்ப்ட்ட வரை உள்ள் 200 பில்லியன் கேலக்ஸிகளில் நமது காலக்ஸியும் ஒன்று,இதன் பெயர் பால் வீதி மண்டலம்.இதனை ஒரு வட்டமாக வரையறுக்கிறார்கள்.விட்டம் 10,000 ஒளி வருடங்கள்.இதன் கன அளவு 7.85 ட்ரில்லியன் ஒளி வருடம் .

.இதில் உள்ள 200_400 நட்சத்திரங்களுல் ஒன்றுதான் நம் சூரியக் குடும்பம்.சூரியக் குடும்பத்தின் மொத்த எடையில் 99.86% சூரியன் ஆகும்.பிற கோள்கள் எல்லாம் மிச்சம் மீதி மட்டுமே.இதில் நம் பூமி ஒரு தூசு. நமது நம்து பூமி 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியடு.இதன் விட்டம் சுமார் 12,000 கி.மீ.இந்த உருவாதலுக்கு இயற்கை விதிகள் மீது விளக்கம் அளிக்கப் படுகின்ற‌ன்.


இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாகவே பிரபஞ்சங்க்ள்  உருவாதல் நடந்திருக்கிறது.இன்னும் பல விஷயங்கள் உள்ளது படைப்பு இன்னும் நடந்து கொண்டே இருக்கிறது.புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதும்,பழையவை அழிவதும் நடந்து கொண்டே இருக்கின்ற‌ன.


இது அனைத்தையும் இறைவன் இயற்கை விதிகளுக்கு மாறாமல் மெதுவாஆஆஆஆஆஆஆஅகாஆஆஆஆஅ படைத்துக் கொண்டே இருக்கிறாஆஆஆஆஆஆர் என்றால் என்று நீங்கள் நம்பினால் அது உங்கள் உரிமை.கடவுளும் இயற்கை விதிகளுக்கு கட்டுப் பட்டவர் என்றால் அவர் ஒரு ஓரமாக இருந்து விட்டு போகட்டும்.இயற்கை விதிகளை மீறும் கடவுள்(கள்) தேவையில்லை.

ஆனால் பாருங்கள் பிரபஞ்ச படைப்பு என்பது மத புத்தகங்களின் படி முடிந்து போன விஷயம்.
**********
ஆம்! பகுத்தறிவு...அல்லவா? எந்த ஒரு பொருளும் ஒரு படைப்பாளி இல்லாது தானாக வந்துவிடாது என்ற அறிவு.வீடல்ல,ஒரு குருவிக் கூடானாலும், எறும்பு தங்கும் புற்றானாலும்,அதை ஒருவர் உருவாக்காமல் வந்து விடுவதில்லை என்பதில் திண்ணமாக இருக்கும் நீங்கள்....முழு மனித சமுதாயமும் முயன்றாலும் முடிந்திடாத,கற்பனைக்கும் எட்டிவிடாத டிஸைனில் இந்த உலகத்தை ஒரு படைப்பாளன் இல்லாது தானாக உருவாகிவிட்டது என வாதிடுவது விந்தையாகவும்,கருத்துமுரணாகவும், பின் முட்டாள்தனமாகவும் இருக்கிறதே

இதற்கு பெயர் முதல் காரணி கொள்கை.(first cause argument) கடவுளுக்கு மட்டும் பொருந்தாது.ஒரெ கடவுள் எப்போதும் எதுவும் இலாமல் இருப்பார் என்பதை விட இயற்கை எப்போதும் இருக்கிற‌தே அறிவார்ந்த சிந்த்னையாக தெரிகிறது.கடவுள் வடிவமைப்பு என்பது இயற்கை விதிகளுக்கு கட்டுப்பட்டதால் கடவுளும் இயற்கையின்(உண்மையில் மனிதனின் படைப்பு) படைபாகவே இருக்க முடியும். 

இறை மறுப்பாளர்களாகிய நாங்கள் தேடியவரை இயற்கை விதிகளுக்கு மேலான சக்தி எதையும் கண்டறிய முடியவில்லை என்று ஆய்வு பூர்வமாக் கூறுகிறோம்.

உங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் இயற்கையாக உருவானது என சொன்னால் நம்பி விடுவீர்களா?? ம்ம்ஹும் இல்லை..இதை யாராவது உருவாக்கி இருக்க வேண்டும் என எதை வைத்து ஆணித்தரமாக சொல்கிறீர்கள்?

உங்கள் வீடு என்றாலே உங்களால் உருவாக்க‌ப் பட்டது.தானே.மனிதர்கள் வாழ்வது கடந்த 2 இலட்சம் ஆண்டுகள் மட்டுமே.பிரபஞ்சம் தோன்றி 99.9999% காலம் கடந்து ஒரு வீட்டை உருவாக்க கூடிய மனித்ன உருவானான்.பல விலங்குகள் இல்லாமல் போய் விட்டன.அது போல் மனிதன் இல்லாமல் போகும் காலமும் வரும் அப்போதும் பூமி இருந்தால் பிற உயிர்கள் வாழும்.

பூமி மனிதனுக்காக‌ படைக்கப் பட்டது என்பதை இக்கூற்றுகளின் மேல் நம்ப முடியுமா?

இயற்கையாகவேதான், இந்த பூமி 100% பெர்ஃபெக்‌ஷனுடன் வந்துவிட்டது என உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறதா???ஒன்றும் இல்லை..கையில் பத்துவிதமான பொருட்களை வைத்துக்கொள்ளுங்கள்.ஒவ்வொன்றும் உங்களின் மேசையில் இன்ன இன்ன இடத்தில் இன்னின்னவாறு இருக்க வேண்டும் என முடிவு செய்து கொள்ளுங்கள் பின் அதை மேசையில் சிதரவிட்டுவிடுங்கள்... அவையாவும் தாங்கள் விரும்பிய பெர்ப்க்‌ஷனை பூர்த்தி செய்யும் சதவிகிதம் எத்தனை என நீங்களே யூகித்துக்கொள்ளவேண்டியதுதான்...அது ஒன்றில் இருந்து ஐந்து சதவிகிதத்தை கூட எட்டமுடியாது என்பது உறுதி..இதுதான் நீங்கள் சொல்லும் இயற்கையால் கொடுக்கப்பட முடிந்த பெர்ஃபெக்‌ஷன்...நீங்கள் விரும்பிய, அல்லது, குறைந்த பட்ச ஒழுங்கை எட்டவேண்டும் என்றால் கூட உங்களின் கைவைக்கப்படாமல் அங்கு ஒன்றும் நடக்காது.

இந்த மத்வாதிகளிடம் பிடிக்காத ஒன்ரே ஒரு விஷயத்தை தாங்களே யோசித்தது போல் கூறுவது , இந்த வாதத்தின் பெயர் ஃபைன் ட்யூனிங் வாதம்(fine tuning argument) உல்கம் தோன்றிய போதே இப்படி வாழவதற்கு ஏற்றதாக இருந்தது என்றால் மட்டுமே இக்கூற்று சரி.ஆனால் அப்ப்டி இல்லை.






நண்பர்களே மதவாதிகள் இம்மாதிரி விதண்டாவாதம் செய்து மூளை சல்வை செய்வதில் இருந்து விலகுங்கள்.மதத்தில் உள்ள நல்ல விஷயங்களை பின்பற்றலாம்.சர்சசைகுறிய நடைமுறைகளை நியாயப் படுத்தாதீர்கள்.இது நமது வேண்டுகோள்.

Sunday, August 14, 2011

பிரபஞ்சம் தோன்றிய விதம்:ஸ்டீபன் ஹாக்கிங்


முதல் காணோளியில் 20 நிமிடங்களில் பிரபஞ்ச தோற்றம் பற்றிய பல விஷயங்களை அறிவியலின் அடிப்படையில் எளிதாக் விளக்கிகிறார்.

இரண்டாம் காணொளி அவருடைய க்ராண்ட் டிசைனின் மீது வந்த விமர்சன்த்திற்கு பதில் அளிக்கிறார்.இப்புத்தக்த்தில் பிரபஞ்ச தோற்றத்தை விளக்க கடவுள் தெவையில்லை என்று கூறியிருந்தார்.இது பலமாக‌ விமர்சிக்க்கப் பட்டது. கடவுள் இருக்கிறதா இல்லையா என்பதை விட பிரபஞ்ச தோற்றம் என்பது இயற்கை நிகழவாக எளிதில் விளக்கப் பட முடியும் என்பதே உண்மை.பல பிரபஞ்சங்கள் இருப்பதும், பிரபஞ்ச தோற்றம் என்பதும் ஒரு சாதாரண‌ இயற்கை நிகழ்வே என்பதே இப்போதைய அறிவியல் கருத்து.வரும் காலங்களில் பிற பிரபஞ்சங்கலை ஆய்வு செய்து அதில் விரிவடையும்(தோன்றும்!!!!!!!) பல பிரபஞ்சங்களின் தனமையில் இருந்து இன்னும் பல பதில்கள் கிடைக்கலாம்.

காணொளி 1


காணொளி 2



The Thinking atheist

























Friday, August 12, 2011

மதங்களை கண்டறிவோம்:ஆவணப் படம்


இந்தஆவணப்படம் சில விவரங்களை அலசுகிறது.பெரும்பாலான மதங்கள் இந்த விஷயங்களை கூறுகின்றன.

1.பிரபஞ்சம்,உயிரினங்கள் ஆகியவற்றை கடவுள்(கள்) படைத்தார்(கள்).

2. மத புத்தக்ங்களையும் இறைவனே வழங்கினார்.

3.பிரபஞ்சத்தின் முடிவு நியாயத் தீர்ப்பு அனைவருக்கும்(மனிதர்களு மட்டுமா?) உண்டு.இறைவனின் முடிவின் மீது ஒவொருவரும் சொர்க்கம்,நரகம் என்னும் அழியாப் பெருவாழ்வு அடைகின்றனர்.

இதில் இந்து ,பவுத்த மதங்கள் வேறுபடுகின்றன என்பது அறிந்ததே.இது குறித்து பிறகு விவாதிப்போம்.

பிரபஞ்சம் தோன்றி 13.6 பில்லியன் ஆண்டுகள் ஆனதும்,பூமி 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதும,மனித 2 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் பரிணாம் வளர்ச்சியில் தோன்றியதும் அறிவியலால் உறுதிப்படுத்தப் பட்ட கருத்துகள்.இதில் பரிணாம்ம் மட்டும் ஆபிரஹாமிய மதவாதிகளால் கடுமையாக் எதிர்க்கப்படுகிறது.மற்ற விஷயங்களை ஏதாவது வார்த்தை ஜாலத்தின் மூலம் மத புத்தக்த்திலும் அதுதான் இது என்று கூறி வருகிறார்கள்.

இந்த ஆவணப்படம் மதங்களின் படைப்புக் கொளகைகளையும் அது எவ்வாறு அறிவியலுக்கு முரண்படுகிரது என்பதை விவாதிக்கிறது.அறிவியலின் கருத்துகளையும் சான்றுகளையும் அளிப்பது மிகவும் சிறப்பு.இந்த ஆவணப்படம் ஆபிரஹாமிய மதங்களின் படைப்புக் கொளகைகளையும் அது எவ்வாறு அறிவியலுக்கு முரண்படுகிறது என்பதை விவாதிக்கிறது.

இக்காணொளியின் முக்கிய சாராம்சங்கள்

1.இளைய பூமிக் கொள்கை(பூமி 6000 ஆண்டுகளுக்கு முன் அனைத்தும் படைக்கப்ப்ட்டது ).

2.நோவாவின் வெள்ள‌ப் பெருக்கும்,உலக் அழிவும்

3.படைப்புக் கொள்கையாளர்களின் கொள்கையாக்கங்கள்

4.பரிணாமத்தின் சான்றுகள்

5.மதச்சார்பின்மை

6.ஒழுக்க கோட்பாடுகள்

7.மத வன்முறைகள்

அறிவியலின் கருத்துகளையும் சான்றுகளையும் அளிப்பது மிகவும் சிறப்பு. இன்னும் மதங்களின் கொள்கையாகத்தினால் ஏற்படும் நிகழ்கால் சிக்கல்களையும் ஆவண‌ப் படுத்துகிற‌து.கண்டு களியுங்கள்.

http://discoveringreligion.net/

Part 1
Part 2

Part 3
Part 4

Wednesday, August 10, 2011

The.Life.of.Muhammad.-BBC

Part 1



சமச்சீர் கல்வியும் ஜனநாயக சிக்கல்களும்



ஒரு வழியாக தமிழகத்தில் சமச்சீர் கல்வி பிரச்சினை தீர்ந்து மாணவர்களுக்கு பாட புத்தகம் வழங்க ஆரம்பித்து விட்டார்கள்.தமிழகத்தின் பல கல்விமுறைகளை ஒன்றாக்கி பொதுவான கல்வி முறையாக்கியது சமச்சீர் கல்வி என்றழைக்கப் படுகிறது.இது மிகவும் சிறப்பானதா இல்லையா என்பதும் சிலரால் விவாதிக்கப்பட்டும் வருகிறது.எந்த ஒரு செயலுமே எடுத்தவுடன் மிக சிற‌ப்பாக அனைத்து நடைமுறை சிக்கல்களையும் தீர்க்கும் என்று எதிர்பார்க்க முடியாது.ஏற்கெனெவே இருந்த கல்வி முறையை விட சிறப்பாக இருக்கும் என்றே பெரும்பாலோனவர்களின் கருத்தாக உள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மெட்ரிக்,ஆங்லோ இந்திய கல்வி முறைத் திட்டத்திற்கு ஆதரவானவர்கள் மட்டுமே என்பதும் தெரிந்த விஷயம்.இம்முறை பாடத்திட்டம் படித்தால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்க்கும் என்ற கருத்து மாயை பல நடுத்தர ,மேல் தட்டும் மக்களிடம் நன்றாக் ஊன்றி விட்டது.எப்படியாவது தன் மகன்/மகள் 12வது வகுப்பில் நல்ல மதிப்பெண் வாங்கி ,பொறியியல் அல்லது இணையான் படிப்பு படித்து,ஒரு மேலைநாட்டில் மேற்படிப்பு+ நல்ல சம்பளத்தோடு வேலை+குடியுரிமை என்று வாழ ஆசைப்ப்டும் மேட்டுக்குடி பெற்றோர்களின் வேலைதான் இந்த சம்ச்சீர் கல்வி எதிர்ப்பு. 

ஒரு நாட்டில் கல்வி பயிலும் அனைவருக்கும் சிறப்பான கல்வி இலவசமாக் வழங்கப் படவேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு.ஆகவே பொதுவான கல்வி அனைவருக்கும் அளிக்கப்பட்டால் மட்டுமே கல்வியில் முன்னேற்றம் அனைவருக்கும் வரும். .ஒரு கிராமத்து அரசு பள்ளியில் படிக்கும் மாணவனும் சென்னையில் புகழ்பெற்ற "அஆஇஈ' பள்ளியில் படிக்கும் மாணவனும் ஒரே பாடத்திட்டம் படிக்கும் போது என்ன நடக்கும்?.மதிப்பெண் அடிப்படையிலேயெ போட்டி என்பதால் நன்றாக படிக்கும் எவரும் அதிக மதிப்பெண் பெறுவார்கள்.இதுவரை நடந்த 10,12 வகுப்பு தேர்வுகளில் கிராமப் புற‌ மாணவர்களும் அதிக சாதனை நிகழ்த்தியதும் அறிந்ததே.  

அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி என்பதற்கு முதல்படி இந்த சமச்சீர் என்றால் மிகையாகாது. கல்வியை வியாபாரமாக்குவதை நிறுத்த இதுவே சரி.இன்னும் கூட மத்திய அரசு பாடத் திட்டம் என்று மாறும் தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு ,தேவையான எண்ணிக்கையில் ,தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் இருக்கிறதா என்ற அடிப்படையீல் மட்டுமே வழங்க வேண்டும்.சமச்சீரை இந்த அரசு மேம்படுத்த விரும்பினால் செய்யட்டும்.ஒவ்வோரு இரு அல்லது 3 ஆண்டுகளுகொருமுறை பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யலாம்.

இந்த பிரச்சினை ஒருவழியாக தீர்ந்து விட்டாலும் கடந்த இருமாதங்களாக அரசுக்கும் மக்களுக்கும் ஒரு யுத்தமே சம்ச்சீரினால் நடந்தது. உயர் நீதிமன்றம் சொல்லியும் கெட்காமல், உச்ச நீதிமன்றம் வரை சென்று திர்ர்ப்பு எதிரான பிற்கே வேறு வழியில்லை என்ற ஒரே ஒரு காரணத்தினால் மட்டுமே இந்த அரசு இக்கல்வி முறையை இந்த ஆண்டு அமல் படுத்துகிறது.என்ன செய்யப் போகிறார்கள் என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.

இதில் மாணவர்களின் 2 மாதம் படிப்பு கெட்டதும்,அரசின் பல செயல்பாடுகள், பொருள் இதற்காக வீணடிக்கப் பட்டது.இவைகளை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதே இப்பதிவு.ஒரு அறுதிப் பெரும்பான்மை கொண்ட தேர்ந்தெடுக்கப்ப்ட்ட அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாமா என்பதே நம் கேள்வி.இதனை தவிர்க்க நீதிமன்றம் செல்வது மட்டும்தான் தீர்வா? .அரசின் தான் தோன்றித்தனமான முடிவுகளை தவிர்க்க முடியாதா?

இதற்கு பதில் இப்போதைய நமது ஜனநாயக முறையில் தீர்வு இல்லை. இப்போதைய அரசுக்கு மூன்றி இருபங்கு உறுப்பினர்கள் இருப்பதும்,எதிர்க் கட்சி அதன் கூட்டணியாக் இருப்பதால் சட்ட மன்றம் என்பது ஆளும் தரப்பின் கொள்கையையே எதிர் ஒலிக்கும்.எந்த எதிர்ப்பும் பயன் தராது.

                  ஊடகங்கள் கூட இப்போது அரசியல் நிலை சார்ந்தே செய்தி வெளியிடுகின்றன.பல் நாடுகளின் முக்கிய விஷயங்களின் அரசின் முடிவுக்கு மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தியே முடிவெடுக்கிறார்கள்.இம்மாதிரி ஒன்று இருந்திருந்தால் செய்யப்போகும் முன் இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கும்.நம் நாட்டின் மக்கள் தொகை அதிகம் என்பதால் (வாக்காளர் சுமார் 4.6 கோடி).4.6 கோடி மக்கள் தொகையை 234 சட்டமன்ற உறுப்பினர் மட்டுமே தீர்மானிப்பது.சரியா?.விகிதாச்சார பிரதிநிதித்துவம் நமது நாட்டில் இல்லை.ஒரு தொகுதியில் அதிக வாக்குகள் பெற்றவர் வெற்றி பெறுகிறார். ஆளும் கட்சியினர்& கூட்டணி கட்சியினர் அரசின் செயலை விமர்சிக்க மாட்டார்கள் என்பதால்   அரசை தட்டிக் கேட்க ஆள் இல்லை.
இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு

1.நாட்டின் முக்கிய பிரச்சினைகள் துறை ரீதியாக ஒவ்வோவ்ன்றும் தெளிவாக வரையறுக்க படவேண்டும்.சுமார் 100 பிரச்சினைகள் என்று வைத்துக் கொள்வோம். தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும் 5 ஆண்டுகளில் இப்பிரச்சினைகள் குறித்து நிலைப்பாடு, தீர்க்கும் விதம் பற்றி ஒரு ஐந்தாண்டு  கால் அளவு நிகழ்ச்சி நிரல் திட்டம் சமர்ப்பிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப் படும் அரசு அவர்கள் கொடுத்த திட்டத்தில் இருந்து கூடுமான்வரை விலக கூடாது.

2.அப்படி ஒரு அவசர சூழ்நிலைக்காக் வேறு நிலைப்பாடு எடுக்க வேண்டும் எனில் எளிதில் கருத்து கணிப்பு நட்த்த ஒரு முறை.ஒவ்வொரு தொகுதியிலும் சட்டமன்றத் தேர்த்லிலும் குறைந்த பட்சம் 10% ஓட்டு வாங்கிய வேட்பாளருக்கும் ஜனநாயக் ரீதியாக சில உரிமைகள் வழங்கலாம்.ஒவ்வொரு தொகுதியிலும் குறைந்த படசம் 2 ல் இருந்து 9 வேட்பாள‌ர் வரை தேர்வாகலாம்.அதிக வாக்குகள் பெற்றவ்ரே மட்டுமே அரசமைக்கும்(இப்போது உள்ளது போல்) முழு உரிமை பெற்றவர் என்றாலும் மற்றவர்கள் இம்மதிரி கருத்துக் கணிப்பின் போது சம் உரிமை கொண்ட உறுப்பினர்கள் ஆகின்றனர். இப்போது எந்த ஒரு குறிப்பிட்ட கட்சிக்கும் அதிக அளவு உறுப்பினர் இருக்க வாய்ப்பே இல்லை.தமிழகத்தில் ஒவொரு தொகுதிக்கும் சுமார் 5 உறுப்பினர்கள் என்று வைத்தால் சுமார் 1070 உறுப்பினர்கள் வருகிறார்கள்.இதில் ஆளும் கட்சிக்கு 300 இருபதே பெரிய விஷயம்.எல்லோரையும் அனுசரித்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறுவது எளிதே இம்முறையில் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை கொண்டு வருவது கட்சிகளுக்கு மிக கடினம்.

கட்சிகள் தங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாத செயல்களை மட்டும் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம்..ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரித்தோ,எதிர்த்தோ வாக்களிக்கலம்,அது வெளிப்படையாக் மக்களுக்கு தெரிவிக்கப் படவேன்டும்.அதற்கான காரணத்தை உறுப்பினர்கள் தொகுதி மக்களுக்கு அறிவிக்க வேன்டும்.ஒரு இணைய தளம் இருந்தாலே போதும்,இதனை நடைமுறை படுத்தி விடலாம்.. சட்டமன்றத்தில் அனைத்து உறிப்பினர்களுக்கும் விவாதிக்கும் வாய்பு அளிக்கலாம்.இவர்களுக்கு எவ்வளவு ஆட்சி அதிகாரம் பங்கு அளிப்பது என்பது யோசித்து செயல்பட வேண்டிய விஷயம்.இம்முறையில் ப்ல சிறுபானமையினரின் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் பட வழி வகுக்கும்.கூட்டணிகளை பல் கட்சிகள் விரும்ப மாட்டார்கள்.அர்சு தன் நிகழ்ச்சி நிரலில் இருந்து மக்களுக்கு தொல்லை தரும் இம்மாதிரி பிரச்சினைகளை நெருங்காது.நிகழ்ச்சி நிரலின் படி சொன்னவற்றை நிறைவேற்றுவதே அரசுக்கு பெரிதாக் இருக்கும்.

இக்காணொளியில் கூட ஜனநாயக்த்தின் பல அம்சங்கள்,பிரச்சினைகள்,தீர்வுகள் என்று ஆய்வு செய்கின்றனர்.பாருங்கள்.
                                                                                                        


Monday, August 8, 2011

எண்ணெய் இல்லா உலகம் எப்படி இருக்கும்?


சில குறிப்பிட்ட சூழ்நிலைகள் நடக்க வாய்ப்பே இல்லாதது போல் தெரிந்தாலும் அது நடந்தால் எப்படி இருக்கும் என்று கணிப்பதும் ஒருவித ஆச்சர்யமான‌ விஷயமே..இப்பதிவில் உள்ள காணொளியில் உலகில் உள்ள அனைத்து எண்ணெய் வளமும் திடிரென்று மறைந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை படமாக்கி உள்ளார்கள். எந்த ஒரு விபத்தும் உடனடியாக நடக்கும் போது அதன் விளைவுகள் கடுமையாக் இருப்பது போல் உடனடியாக மனித வாழ்வே பெரும் சிக்கல்களை சந்திக்கிறது. இருக்கும் எண்ணெய் வைத்து சில நாட்களை ஓட்டுகின்ற‌னர். சமையல் எண்ணெய் மூலம் டீசல் வண்டிகள் இயக்கப் படுகின்ற‌ன.

மக்களின் வாழ்வு முறை மாறுகின்ற‌து.கிராமப் புறங்களுக்கு குடி பெயருகின்ற‌னர்.நாடுகளுக்கிடையேயான அரசியல்,பொருளாதார தொடர்புகள் குறைகின்ற‌ன. கொஞ்சம் கொஞ்சமாக சோயா,சோள‌ம் இவற்றில் இருந்து மாற்று எண்ணெய் எரி பொருள் தயாரிக்கப் படுகின்றது.மின்சார சேமிப்பின் பேட்டரி தயாரிக்க உதவும் லித்தியம் மிக முக்கியத்துவம் பெருகிறது.லித்தியம் அதிகம் கிடைக்கும் பொலிவியா பணக்கார நாடு ஆகிற‌து. மக்கள் 40 வருடங்களில் எண்ணெய்,ப்ளாஸ்டிக் இல்லாத, இயற்கையோடு இணைந்த வாழ்வு முறைக்கு வந்து விடுகின்ரனர்.விவசாயம் மிக முக்கியமான தொழில் ஆகின்றது.சுற்றுச் சூழல் மேம்ப்டுகின்றது.

கார்கள் மிக இலேசான வடிவமைப்பில்,மின்சாரத்தில் இயங்குகின்றன.ஆனால் விலை மிக அதிகம்.மிதிவண்டி அதிகம் பயன் படுத்தப் படுகின்ரது.சுமார் 40 வருடங்கள் கழித்து மீண்டும் ஆகாய விமானங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன.மனிதர்கள் எண்ணெய் ஒன்று இருந்ததையே மறந்து வாழ்க்கையை தொடர்கின்ற‌னர்.

சென்ற பதிவு படித்து இருந்தால் இம்மாதிரி சூழ்நிலை இன்னும் 50 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக் நிச்சயம் வரும் என்று அறியலாம்.வருமுன் காக்க என்ன செய்யப் போகிறோம் என்பதே இப்போதைய கேள்வி.

Sunday, August 7, 2011

The Story of Bottled Water (2010)

எண்ணெய் பொருளாதாரத்தின் சிக்கல்கள்


உலகில் எண்ணெய் மற்றும் அது சார்ந்த எரிபொருள் தொழில்நுடபம் அதிக பயன் பாட்டில் உள்ளதும் ஒரு நாட்டின் பொருளாதாரமே இதன் மூலம் நிர்ணயிக்கப் படுவதும் அனைவரும் அறிந்ததே.அது குறித்த சில புள்ளி விவரங்களை இப்பதிவில் பார்க்கலாம்.உலகின் ஒரு நாளின் மொத்த எண்ணெய் உற்பத்தி தேவைப்படும் அளவு.சுமார் 80 மில்லியன் பேரல்கள். .உற்பத்தி சுமார் 73 மில்லியன் பேரல்கள்(2010 கண்க்கீடு). 2010 ல் பல எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் தன்னுடைய அதிக பட்ச உற்பத்தியை எட்டியதாக பல தகவல்கள் உண்டு.
**************
எண்ணெய் அதிகம் உற்பத்தி செய்ய்யும் முதல் 10 நாடுகள்
1 Russia                        10,120,000   2010 est.
2 Saudi Arabia                  9,764,000 ,2009 est.
3 United States                  9,056,000,2009 est.
4 Iran                                  4,172,000,2009 est.
5 China                          3,991,000,2009 est.
6 Canada                          3,289,000,2009 est.
7 Mexico                          3,001,000,2009 est.
8 United Arab Emirates        2,798,000,2009 est.
9 Brazil                          2,572,000,2009 est.
10 Kuwait                         2,494,000,2009 est.
****************
எண்ணெய் அதிகம்  பயன்படுத்தும் முதல் 10 நாடுகள்

1 United States               18,690,000 2009 est.
2 European Union       13,680,000 2009 est.
3 China                         8,200,000 2009 est.
4 Japan                         4,363,000 2009 est.
5 India                         2,980,000 2009 est.
6 Russia                         2,740,000 2010 est.
7 Brazil                         2,460,000 2009 est.
8 Germany                         2,437,000 2009 est.
9 Saudi Arabia                 2,430,000 2009 est.
10 Korea, South                 2,185,000 2010 est.


 *********************



மேலே உள்ள படம் இனி எண்ணெய் உறத்தி குறைந்து கொண்டே வரும் என்பதை விளக்குகிறது.எணெய் என்பது மின் உற்பத்தி,போக்குவரத்து ஆகிய இரு செயல்களுக்கு அதிகமாக் தேவைப்படுகின்றது.மாற்று எரிபொருள் தொழில் நுட்பத்தின் தேவை மிக அதிகமான கால்த்தில் வாழ்கிறோம் என்றால் மிகையாகாது.இந்தியாவின் எண்ணெய் தேவை அதிகரித்துக் கொண்டே போவதை பாருங்கள்.
Country                 2001                           2003       2004                    2007            2009
India(barrels/day) 2,130,000 2,320,000 2,450,000       2,722,000 2,980,000



           அதிகமாக் எதிர்பார்க்கப் பட்ட காற்றாலை,சூரிய சக்தி தொழில் நுட்பங்கள்  கை கொடுக்கவில்லை.எண்னெய் மீது சார்ந்த பொருளாதாரம்,வாழ்வு முறை மிக நெருக்கடிக்கு உள்ளாக்கும்,ஆகவே அரசும் ,மக்களும் இது குறித்த விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.இது குறித்து பல அறிவியல் ஆய்வுகளை செய்யும் படி நமது அரசு ஊக்குவிப்பது அவசியம்.

Crude oilprice chart, 2000-2009
2000 முதல் 2011 வரை எண்ணெய் விலை உயருவதை இப்படம் விளக்குகிறது.

எண்ணெயின் பயன் பாட்டை குறைப்போம்,மாற்று சக்தி வழிமுறைகளை ஊக்குவிப்போம்.2011ன் கண்க்கீட்டின் படி உலக என்ணெய் வள இருப்பு நிலவரம்.படத்தின் மீது அழுத்தி பெரிது படுத்தலாம்.


வருமுன் காத்தலே சிறந்தது. 



Peak Oil - Club of Rome



Thursday, August 4, 2011

மனிதன் இல்லா உலகம் எப்படி இருக்கும்?


உலகம் தோன்றி பல(4.6 பில்லியன்)  ஆண்டுகளுக்கு பிறகே மனித இனம் தோன்றியது(2இலட்சம்) என்பது அனைவருக்கும் தெரியும்.கடந்த 200 ஆண்டுகளில் இயற்கையின் மீது பல அழுத்தங்களை அறிவியல் முன்னேற்றம் என்ற‌ பெயரில்  மனிதன் செய்து வருகிறான்.இந்த காணொளியில் ஒரு வேளை மொத்த மனித இனமும் உலகில் இருந்து ஒரே சம்யத்தில் மறைந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை இந்த ஆவணப் படம் அலசுகிறது.
முதல் 30 ஆண்டுகள் அணு உலைகள்,மின் தயாரிப்பு நிலையங்கள் போன்றவற்றின் விளைவுகளினால் பாரிய அழிவுகள் ஏற்படுகின்றன.பிறகு இயறகை  கொஞ்சம் கொஞ்சமாக் நிலைமையை சரி செய்கிறது..புதிய உணவு சங்கிலிகள் உருவாகின்றன.இயற்கைத் தேர்வு[natural selection] ஆட்சிக்கு வருகிறது.நாட்டு,காட்டு விலங்குகள் பல் மாற்றங்களுக்கு ஆளாகின்றன.இப்படியே துணக்கோள்கள் கூட செயல் இழந்து பூமியில் விழுகின்றன.அணைகள் ,அமெரிக்க சுதந்திர தேவி சிலை,ஈஃபில் டவர் போன்ற வரலாற்று சின்னங்கள் கூட மண்ணோடு மண்ணாகிறது. ஒரு 1000 வருடங்களுக்கு பிறகு சில துருப்பிடிக்காத இரும்பு சாமான்கள்,ப்ளாஸ்டிக் தவிர மனிதன் வாழ்ந்த சுவடே இல்லை.

 சந்திரனின் இயற்கை சூழலை மனிதன் பாழ் படுத்தவில்லையாதலால்.அங்கு மனிதன் விட்டு சென்ற சில நினைவு சின்னங்கள் மட்டும் அப்ப்டியே இருக்கின்றன‌ என்பதை இறுதியில் சொல்கிறது இப்படம். 

இயற்கை கொஞ்சம் கொஞ்சமாக் மனிதனின் அழிவு செயல்களுக்கு தீர்வு கொண்டு வருவது மிக அருமை.மனிதன் இல்லாமல் உண்மையிலேயே உலகம் மிக அற்புதமாக் இருப்பதாக எனக்கு படுகிறது. நாம் இயற்கையை எந்த அள்விற்கு மாசு படுத்துகிறோம் என்பதை மிக அற்புதமாக் சொல்கிற‌து இப்படம்.கண்டு களியுங்கள்.!!!!!!!!!




Wednesday, August 3, 2011

Flock Of Dodos: The Evolution-Intelligent Design Circus


The Future of Food



We Feed The World




Food Matters


A "New" Approach to Health from Jamie Simko on Vimeo.

பாகிஸ்தானின் சிந்தனை கட்டுபாட்டு கல்வி அரசியல்


இக்கட்டுரை பாகிஸ்தானின் புகழ்பெற்ற ஆங்கிலப் பத்திரிக்கையான The Dawn ல் வெளிவந்தது.  அத்னை எழுதிய Ms. மஹீன் உஸ்மானி என்னும் பத்திரிக்கையாளரின் பல கருத்துக்கள் இந்தியர்களுக்கும் பொருந்துவது பொல் இருந்ததால் அத்னை தமிழில் மொழியாக்க்ம் செய்துள்ளேன்.இதில் மத அடிப்படைவாதமும்,கண்மூடித்தனமான மத நம்பிக்கையும் ,அரசின் குறிப்பிட்ட‌ கொள்கையாக்க பாட புத்தகங்களும் எப்படி பாகிஸ்தானிய  சமுதாயத்தை மாற்றியது என்பது பற்றி கூறுகிறார்.அரசின் பாடத்திட்டங்கள் மாணவர்களை நாம் பாகிஸ்தானியர்கள் என்று கூறுவதை விட இஸ்லாமியர்கள் என்றே வரையறுப்பது பல சிக்கல்களுக்கு வழி வகுப்பதாக கூறுகிறார்.

இனி Ms உஸ்மானியின் கட்டுரை.
___________________________________

முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது என்ற பழமொழி போல் பாகிஸ்தானியர்கள் எதார்த்த சூழ்நிலையை மறந்து ஒரு மத பெருமித மாயவலைக்குள் கல்வி, அந்தஸ்து வித்தியாசமில்லாமல் ஈர்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்...இந்த மத பெருமித சிந்த்னாவாதத்திற்கு வரலாற்று ஆதாரம் கிடையாது என்பதை எண்ணிப் பார்க்கவும் மறுக்கின்றனர்..சமுதாயத்தின் சிக்கல்கள், குறைபாடுகள் அனைத்துக்கும் எதையாவது,எவரையாவது குற்றம் சாட்டும் மனநிலையே பெரும்பாலும் காணப்படுகின்றது. தங்கள் சமுதாய சிக்கல்களுக்கு காரணமான எதார்த்த உண்மையை அறிந்து கொள்வதை விட அனைத்துக்கும் பிற (மத) நாடுகளின் சதி என்ற சந்தேகமே கொள்கின்றனர்.  

கடந்த கால்த்தின் இஸ்லாமிய பெருமை குறித்த மாய பிம்பம அவர்கள் மனதில் வேரூன்றி விட்டது. 1947 C.E ல் பாகிஸ்தான் என்னும் நாடு இருக்குமா என்று இருந்த சூழலே இபோதும் உள்ளது.அப்போது இஸ்லாமியரல்லாதவர்கள் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு எதிராக இருந்தது போல் இப்போது இஸ்லாமிய பெருமிதவாதிகள் உள்ளனர்.சமுதாய சூழ்நிலை குறித்த அறிவு சார்ந்த எதார்த்த பார்வையோ,விமர்சனமோ இங்கு இல்லை.ஒருவரின் கல்வி,அறிவு அவருடைய சமுதாய ,அரசியல் பார்வையை தீர்மானிக்கும் என்பது உண்மைதான் என்றாலும் இம்மாதிரி சமுதாய சூழலுக்கு காரணம் என்ன?

 அரிசியில் இருந்து கல் நீக்குவது போல் முதலில் பாகிஸ்தானின் பொதுவான அரசியல் சித்தாந்தத்தை பார்ப்போம்.நம்து பள்ளி பாடநூல்களிலும்,மதசார்பின்மைக்கான விவாதங்களிலும் அரசியல் ஊர்வலங்களிலும் எதிரொலிப்பதுதான் .என்ன ஒலிக்கிறது?.[Pakistan ka matlab kiya? La illaha il lallah ] பாகிஸ்தான் என்பது என்ன?"அந்த ஏக இறைவனைத் தவிர வேறு எவரும் இல்லை " என்பதுதானே!!!!!!!!!இந்த சுலோகம் பாகிஸ்தான் உருவாக்கத்திற்கு பல காலம் கழித்தே அரசியலில் பயன்பாட்டுக்கு வந்தது,ஆனால் பாகிஸ்தான் நாடு உருவாக்கப் பாடுபட்டவர்களின் செயலாக் கூறப்படுகின்ற‌து.

மதம் என்பது ஒரு சக்தி வாய்ந்த அமைப்பு என்பதும் அதனால் பல,இன,மொழி மக்களை ஒரே தேசிய இனமாக ,நாடாக‌ திரட்ட முடியும் என்பதும் வரலாற்றில் பல முறை நிரூபிக்கப் பட்ட விஷயம்.இறைவனை மேலான சக்தியாக காட்டுவதன் மூலம் மதம தேசிய ஒருமைபாட்டை அவன் கட்டளையாக  வடிவமைக்கிறது..கிரேக்க ஆலயங்கள் கிரேக்க தேசியத்தை வழிநட்த்தியது போல்,ஐரிஸ் (Irish)  கத்தோலிக்க மத பீடம் ஐரிஸ் தேசியத்தை ஊட்டி வளர்த்தது போல்,யூத மதம் இஸ்ரேலை உருவாக்கியது போல் இஸ்லாம் பாகிஸ்தானை கட்டியமைத்தது.

தளபதி ஜியா உல் ஹக் 1977 CE ல் ஆட்சியை கைப்பற்றிய பின் மத சார்பற்ற கொள்கைகளை தவிர்த்து மத அடிப்படையிலான அரசு ஒன்றை அமைக்க முயற்சித்ததன் விளைவுதான் இன்றைய பாகிஸ்தானின் நிலைமை. அவ்ரின்  இஸ்லாமிய மயமாக்கலின் முயற்சிக்கான கொள்கையாக்கம் பள்ளி பாட புத்தகங்களில் குழந்தைகளுக்கு ஊட்டப்பட்டன.  பொ.ஆ 1977க்கு முந்தைய‌ எந்த பாட புத்தக்த்திலும் இது போன்ற‌ கொள்கையாக்கங்கள் இருக்காது.  அதிபர் ஜியா உல் ஹக் ன் உத்தரவுப்படி பாட புத்தகங்களில் பாகிஸ்தானிய தேசியம் என்பது இனம்,மொழி,இடம் சார்ந்து இல்லாமல் மதம் சார்ந்தே வரையறுக்கப் பட்டது.மாணவர்களுக்கு இக்கொள்கையாக்கத்தின் மீது பிடிப்பு வர வேண்டும் என்பதற்க்க இம்மாதிரி சுலோகங்கள் உருவாக்கப் பட்டு கட்டாயமாக்கப் பட்டன.  முழுமையான(?) இஸ்லாமிய நாடாக் பாகிஸ்தான் உருவாக வேண்டும் என்பதே அவ்ருடைய எண்ணம்.

முஸ்லிம்கள் அதிகமாக் வாழும் நாடாக் உருவாக்கப் பட்ட பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடாக் மாறத் தொடங்கியது.முற்றும் முழுதும் இஸ்லாமிய ஷாரியா சட்டம் பயன்பாட்டுக்கு வந்தது.கருத்து சுதந்திரம்,மதச்சார்பின்மைக்கு கட்டுபாடுகள் அதிகரிக்க தொடங்கின.பாகிஸ்தானின் பழமையான் வரலாறான சிந்து சம்வெளி நாகரிகம், இஸ்லாமுக்கு முந்தைய வரலாறு ஆகியவை பாட புத்தக்ங்களில் மறைக்கப் பட்டு பாகிஸ்தான் என்பது முகம்து பின் காசிமின் படையெடுப்பில்(712 C.E) தொடங்குவதாக கூறப்படுகின்ற‌து. உம்மையாது வம்சம்(661_751 C.E) ,அப்பாசித்து வம்சம்(751_1283 C.E ) போன்ற அரேபிய(இஸ்லாமிய)  வரலாறுகளே பள்ளிகளில் போதிக்கப் படுகின்ற‌ன‌. பாகிஸ்தானும் இந்தியாவும் ஒரே நாடாக இருந்தன ,ஒரே இனம்,கலாச்சாரம் கொண்டவை என்பது பாகிஸ்தான் பள்ளிக் குழந்தைகள் அறியமாட்டார்கள்.

இம்மாதிரி கொள்கையாக்கம் பாகிஸ்தானியர்கள் இந்திய துணைக்கண்டத்திற்கு வெளியே உள்ள நாட்டை சேர்ந்தவர் போல் வரையறுப்பதுதான் மிகப் பெரிய அடையாளச் சிக்கலை உருவாக்கியது.பல பாகிஸ்தானிய இனத்தினர் தங்கள் முன்னோர்கள் அரபுகள் என்று கூறி வருவதும் உண்டு.

வரலாற்றாசிரியர் முபாரக் அலி இது குறித்து என்ன கூறுகிறார்?

மதத்தின் மீதான வரலாறு கட்டமைப்பு தவறான் விளைவுகளையே ஏற்படுத்தும் ஏனெனில் வரலாற்றுக்கு மதம் கிடையாது.பாகிஸ்தான் என்பது 1947க்கு பிறகுதான் அதற்கு முந்தைய வரலாற்றை நம்மால் மாற்ற இயலாது.

தேசப் பிரிவினையின் போது எழுந்த மத கல்வரங்களில் பலர் பாதிக்கப்பட்டானர்.அப்போது எழுதப்பட்ட வரலாற்று புத்தகங்களில் கூட பாகிஸ்தானின் வரலாறு சிந்து சமவெளி நாக்ரிகத்தில் இருந்தே தொடங்குகிறது முகம்து பின் காசிமின் (712) படையெடுப்பில் இருந்து அல்ல‌. இன்னும் மௌரிய பேரரசு ,அசோகர் பற்றியெல்லம் கூட பாட‌ புத்தகங்களில் உண்டு.கடந்த 30 ஆண்டுகளில் பாடபுத்தகங்கள் இந்தியாவுடன் பகைமை ஏற்படுத்த வேண்டும்,அத்னை நிரந்தர எதிரியாக காட்டி அதன் மீது அரசு க்ட்டப் படவேண்டும் என்ற‌ கொள்கையாக்கத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டன.

இக்கொள்கையாக்கத்தை பாதுகாகும் பொறுப்பு இராணுவத்திடம் கொடுக்கப் பட்டது.அவர்களே மத நம்பிக்கையின் பாதுகாவலர்கள்.  பிற நாடுகளின் மீதான இஸ்லாமிய படையெடுப்புகள் பெருமைக்குறியதாகவும், அந்த படைத்தலைவர்கள் போற்றுதலுக்கு உரியவர்களாக்வும் காட்டப்படுகிறார்கள். கல்வி,மருத்துவம்,அறிவியல் முதலியவற்றில் சாத்னை புரிந்தவர்கள் பற்றி பாட புத்தகங்களில் அதிகம் கூற‌ப்படுவது இல்லை..

செப்டம்பர் 6 லாகூர் மீது இந்திய தாக்குதலை நினைவு கூறும் தினமாக கடைப்பிடிக்கப் படுகிறது.பாகிஸ்தானிய பாட புத்தகங்களில் 1965 செப்டம்பர்  6 ல் இந்தியா எந்த வித முன் அறிவிப்பின்றி லாகூரை தாக்கியது,அத்னை பாகிஸ்தான் இராணுவம் முறியடித்தது என்று இருக்கும்..ஆனால் உண்மையில் பாகிஸ்தான் 1965,ஆகஸ்ட் 5ல் தனது படைவீரர்களை காஷ்மீருக்குள் அனுப்பியதற்கு பதிலடியாக்வே இந்தியா தாக்குதல் நடத்தியது. இதன் நீட்சியே லாகூர் தாகுதல்.போர்களில் தோல்வியுற்ற ஜெர்மனி,ஜப்பான் தங்கள் தவ்றுகலை மன்ப்பூர்வமாக் ஒத்துக் கொண்டு முன்னேற்றப் பாதைக்கு வந்தது போல் இல்லாமல் பாகிஸ்தான் த்னது தவறுகளுக்கு எப்போதும் நியாயம் கற்பித்தே வருகிரது. இன மொழி பேதத்தால் ஏற்பட்ட பங்களாதேஷ் பிரிவினையை[1971] இந்திய சதி என்றே பாட புத்தகங்களில் கற்பிக்கின்றனர்.

வரலாற்றுப் புரட்டுகள் மத சிந்த்னையோடு பள்ளிக் குழந்தைகளுக்கு கற்பிக்கப் படுகின்றன. ஏழாம் வகுப்பு சமூகவியல் பாட புத்தக்த்தில் ஐரோப்பிய நாடுகள் கடந்த 300 ஆண்டுகளாக் இஸ்லாமிய உலகை சதி செய்து அடிமை படுத்த  முயல்கின்றன என்று குறிப்பிட்டு உள்ளார்கள்.புனிதப் போரைக் கைவிட்டதால்தான் உலக் முஸ்லிம்கள் அடிமைப் பட்டு கிடக்கிறார்கள் என்றும்,புனிதப்போரில் இறப்பவன் என்றும் வாழ்கிறான் என்று .வழிபாடுகளில் புனிதப் போர் புகழ்ந்து மேன்மைப் படுத்தப் படுகிறது.

இம்மாதிரி தீவிரவாதக் கருத்துகளே பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி என்னும் பெயரில் புகட்டப் படுகின்றன.முனைவர் ஹூத்பாய் பள்ளி பாடத்திட்டத்தில் உடனடி மாற்றம் தேவை என்கிறார்.மத கல்வி கற்கும் மதரஸாக்களை விட பள்ளிக் கல்வியே அதிகம் பேரை சென்றடைகிற‌து. கல்விக்கூடங்களில் அஹமதியா முஸ்லிம்கள்,இந்துக்கள், கிறித்தவர்கள் ஒதுக்கப்படுவதும்,மாணவர்கள் இல்லாத எதிரிக்காக‌ தயார் படுத்தப்படுவதும் கண்கூடான் உண்மை.பிற மதத்தை சேர்ந்தவர்களை இழிவு செய்யும் பாடங்களை கூட அவர்களும் படித்தாக வேண்டும்.எந்த விலக்கும் கிடையாது.கல்வி முறையில் கேள்வி எழுப்புவது தேசப்பற்றில் சந்தேகத்தை ஏற்படுத்தும் என்பதும் பிற மதத்தவரை சந்தேகத்துடனேயே பார்க்கவும் தூண்டுகிறது.

பாகிஸ்தானிலும் ,சமீபத்தில் உருவான பிற‌ நாடுகள் போல் வேலைவாய்ப்பு இன்மை, ஊழல்,பொருளாதார சிக்கல்கள் மற்றும் வன்முறை போன்றவை உண்டு.இவை அனித்துக்கும் சர்வ ரோஹ நிவாரணி மதமே என்ன்பவர்களின் பின்னால் வேலையற்ற இளைஞர்கள் திரள்கின்ற‌னர்.ஜைத் ஹமித் போன்ற முன்னாள் முஜாகிதீன்கள் இச்சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்த முயல்கின்ற‌னர்.ஜெர்மனி உலகாளும் என்று ஹிடல்ர் கூறி ஜெர்மானியர்களை போரில் ஈடுபடுத்தியது போல் இவர் பாகிஸ்தான் இந்தியா போர் தொடுத்து காஷ்மீரை விடுவிக்கவும், பிறகு,ஆஃப்கானிஸ்தான்,பாலஸ்தீனம்,செசன்யா ... என்று செல்ல வலியுறுத்துகிறார்..

முனைவர் ஹூத்பாய் கூறுகிறார்" ஒரு நல்ல் கல்வியாளரோ,அற்வியலாளரோ இறை நம்பிக்கை உடையவராக இருப்பவர்கள் ஜைத் மாதிரி ஆட்களின் பின் செல்வதில்லை,அரைகுறை கல்வி அறிவு கொண்டவர்களே ஈர்க்கப் படுகின்ற‌னர்"..

இம்மதிரி கொள்கையாக்கங்கள் ஒரு சாதாரண அமைதியான பாகிஸ்தானை தீவிரவாத நாடாக ஆக்கிவிட்டன. 2008 ல் எடுக்கப்பட்ட ஒரு கருத்துக் கணிப்பின் படி 54% தீவிர ஷாரியா சட்டம் அமலுக்கு வருவதை ஆதரிக்கின்ற‌னர். .இங்கிலாந்தில் வாழும் 18_ 29 வயதிற்குட்பட்ட 1226 பாகிஸ்தானி இளைஞர்களிடன் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில் தங்கள் அடையாளமாக முஸ்லிம்(பாகிஸ்தானி அல்ல) என்றே கூறினர். பாகிஸ்தானில் வருவாயில் 1.5% மட்டுமே கல்விக்காக் செலவு செய்யப் படுகின்றது.கல்விமுறையில்,பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டிய அவ்சியம் ஏற்பட்டுள்ளதை உணர வேன்டும். பாகிஸ்தானின் எதிர்காலம் தீவிரவாதத்திற்கும், அமைதிக்கும் இடையே ஊசலாடுவதால் இதற்கு தோழமையுடன் பலர் உதவி செய்ய முன் வர வேண்டும்.பாகிஸ்தானுக்கு கண்மூடித்த்னமான் மத அடிப்படை கல்வி தேவையில்லை.எதிர்காலத்தில் கல்வி பெறாதவன் மூடன் அல்ல.சரியான கல்வியை பெற்றுக் கொள்ள தெரியாதவனே மூடன்.
_____________________
நன்றி சகோதரி மஹீன் உஸ்மானி



Earthquake Survivors by Maheen Usmani



***********************

Monday, August 1, 2011

முதல் கலிஃபா அபுபக்கரின் தேர்வு



மத ஆய்வு என்பது பாரபட்சமின்றி,ஆதாரப் பூர்வமாக் செய்யப் படவேண்டிய விஷயம்.இதில் நம்பிக்கை என்பதை விட நேர்மை என்பதே முக்கியம்.மத நூல்களில் உள்ள கருத்து சர்ர்சைக்குறியதாக் இருக்கும் பட்சத்தில் அதனை திரித்து அர்த்தத்தை மாற்றிக் கூறுவது மத பிரச்சாரகர்களின் வழக்கம்.சரியான அர்த்தம் அப்போது எப்ப்டி கொள்ளப் பட்டது என்பதும் ஆய்வுக் குறிய விஷயம்.

இப்பதிவில் புஹாரி தொகுப்பில் உள்ள ஹதிதுகளில் திரு முகமதுவின் மரணத்தின் பின் நடந்தவற்றை குறிப்பிடும் சிலவற்றை தொகுத்து அளிக்கிறேன்.

ஒரு சில‌ வரலாற்று குறிப்புகள்.

பொ.ஆ 632: திரு முகமதுவின் மரணம்

பொ.ஆ 632_634 திரு அபுபக்கர் கலிஃபா

பொ.ஆ (634_644) திரு உமர்
644ல் தன் அடிமை ஒருவனால் கொலை செய்யப் படுகிறார்.

பொ.ஆ (644_656) திரு உத்மான்
656ல் சிலரால் கொலை செய்யப் படுகிறார். 

பொ.ஆ (656_661) திரு அலி இபின் அபுதாலிஃப்
பல வாரிசு போர்கள்(ஒட்டகப் போர்கள் என்றழக்கப் படுகின்றன).இவரும் கொலை செய்யப் படுகிறார்.
_____________
உம்மையாது ஆட்சி

அலியிடம் இருந்து ஆட்சி அபு சுஃபியானின் மகன் முவையா & இவரின் வமசம் பொ.ஆ 661_751 வரை ஆள்கின்றனர்.திரு முவையாவின் மகன் யசீதின் ஆட்சியில்தான்[பொ.ஆ 680_683] திரு முகமதுவின் பேரன்(அலி& ஃபாத்திமாவின் மகன்) குடும்பதோடு கொல்லபடுகிறார் .இது மொஹரம் என்றழைக்கப் படுகிறது.திரு முகமதுவின் வம்சத்தை சேர்ந்தவர்கள் பொ.ஆ 751 ஆட்சியை கைப்பற்றி உம்மையாதுக்களின் வமசத்தையே கொலை செய்து அப்பாசித்து வம்ச கலிஃபாக்களின் ஆட்சி அமைக்கின்றன‌ர்.இந்த அப்பாசித்து கலிஃபாக்களின் கால்த்தில்தான் அனைத்து ஹதிதுகளும் தொகுக்கப் படுகின்றன.

அப்பாசித்துகளின் ஆட்சி (750 ல் இருந்து 1258 வரை நீடித்தது.பொ.ஆ 1258ல் செங்கிஸ்கான் படையெடுத்து வம்சத்தையும்,அரசையும் அழித்தார்.பிறகு ஆட்டோமான் துருக்கியர்கள் வசம் ஆட்சி சென்றது.பொ.ஆ 1299 முதல் 1921 வரை ஆட்டோமான் சம்ம்ராஜ்யமே உலக முஸ்லிம்களின் த்லைமை அரசாக அறியப்பட்டது.ஆட்டோமான் பேரரசை தோற்கடிக்க உதவிய இபின் சவுத் அப்துல் அஜீஸ்[1876_1953] சவுதி அரச‌ராக மேலை நாடுகள் உதவி செய்தன.இபின் சவுதின் பெயரிலேயே சவுதி என்று அரேபிய நாடு அழைக்கப் படுகிறது.இவர் மகன் திரு அப்துல்லா 2005ல் இருந்து மன்னர் ஆக‌ இருக்கிறார். 
____________


மெலே கூறிய வரலாறு படித்தலே ஒரு மன்னராட்சி என்பது மாறும்போது அந்த வம்சமே அழிக்கப் பட்டு வந்தது புலனாகும்.இதுதான் நடைமுறை இஸ்லாமிய ஆட்சியாக இருந்தது.பிற மத நாடுகள் சிலவற்றிலும் இதே நடைமுறை இருந்து வந்திருக்கின்ரன என்பதையும் ஞாபகப் படுத்த விரும்புகிறேன்.

சில மதகுருக்கள் ஜனநாயகத்தை குறை சொல்வதால் 1400 வருட மத ஆட்சிகள்,ஆட்சி மாற்றங்கள் எப்படி நடந்தனை என்பதை எடுத்துக் கூற வேண்டியுள்ளது.

முகமதுவின் மரண‌த்திற்கு பின் நடந்த நிகழ்வுகள் பற்றி கூறும் ஹதிதுகளை மட்டும் தருகிறேன்.இத்ன மீது எனது கருத்துகளை கூற விரும்பவில்லை.மதம் என்பது ஆன்மீக தேடலாக ,வழிகாட்டியாக் இருப்பதில் யாருக்கும் ஆட்சேபனை இல்லை. மதரீதியான‌ சர்வ ரோஹ நிவாரன அரசை அமைப்போம் என்று மூளை சலவை செய்வதில் இருந்து தப்பிக்க வேண்டுமெனில் அக்கால்த்திலும் ,இக்காலம் போன்றே அரசியல் போட்டி,பொறாமைகள் இருந்தன என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதும். பொற்கால் ஆட்சி என்பது கானல் நீரே!!!!!!!!!!!!!!.மதத்தில் உள்ள காலத்திற்கு ஒவ்வாத விஷயங்கள் ஒதுக்கி பண்படுத்துங்கள்.அப்படி எதுவுமே இல்லை,அனைத்தும் சரி என்று கூறும் பிரச்சார பீரங்கிகளிடம் ஜாக்கிரதை.!!!!!!!!!!! .

ஆகவே உலகின் மிகப் பெரிய ஜனநாயக் மத சார்பற்ற நாட்டின் குடிமக்களாகிய நாம் ஜனநாயகம்,மதசார்பின்மை என்பது கிடைப்பதற்கரிய விஷயங்கள் என்பதை அறிய வேண்டுகிறேன்.மத குருக்களின்அரசியல் விட்டு விலகி [மதத்தில் உள்ள] நல்லவர்கள்,கற்றறிந்த அறிஞர்கள் பின் அணி திரள்வதே பயனுள்ள எதிர்கால்த்திற்கு வழி வகுக்கும்.
   
**************

1242. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்)அவர்களின் உடலைப் பார்த்துவிட்டு) அபூ பக்ர்(ரலி) வெளியில் வந்தார். அப்போது உமர்(ரலி) மக்களிடம் (கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவரை உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) உட்கார மறுத்ததும் மீண்டும் உட்காருமாறு கூறினார். உமர்(ரலி) மீண்டும் மறுக்கவே அபூ பக்ர்(ரலி) இறைவனைப் போற்றிப் புகழ்ந்து உரை நிகழ்த்தினார். உடனே, மக்கள் உமர்(ரலி) பக்கமிருந்து அபூ பக்ர்(ரலி) பக்கம் திரும்பிவிட்டனர். அப்போது அபூ பக்ர்(ரலி) 'உங்களில் முஹம்மதை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக முஹம்மத் இறந்துவிட்டார். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருப்போர் அறிந்து கொள்ளட்டும்! நிச்சயமாக அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்: மரணிக்கமாட்டான். மேலும், அல்லாஹ் கூறினான்: முஹம்மது (ஓர் இறைத்) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் (அல்லாஹ்வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றார்கள்: அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (புறங்காட்டித்) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் கால் சுவடுகளின் வழியே (புறங் காட்டித்) திரும்பினால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்துவிட முடியாது: அன்றியும் அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்" (திருக்குர்ஆன் 3:144) என்றார். 
அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூ பக்ர்(ரலி) இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை அல்லாஹ் இவ்வசனத்தை அருளியிருந்ததையே மக்கள் அறிந்திருக்கவில்லை என்பதைப் போன்றும் அபூ பக்ர்(ரலி) மூலமாகத்தான் இதையவர்கள் அறிந்ததைப் போன்றும் அங்கிருந்த ஒவ்வொருவரும் இதனை ஓதிக் கொண்டிருந்தார்கள். 
Volume :2 Book :23
******************
3667. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(என் தந்தை) அபூ பக்ர்(ரலி) (பனூ ஹர்ஸ் குலத்தாரின் இல்லங்கள் அமைந்துள்ள) 'ஸுன்ஹ்' என்னுமிடத்தில் இருந்து கொண்டிருந்தபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறப்பெய்தினார்கள். - அறிவிப்பாளர் இஸ்மாயீல்(ரஹ்), 'அதாவது ஆலியாவில்" என்று கூறினார்.
அப்போது உமர்(ரலி) எழுந்து, 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கவில்லை. என் உள்ளத்தில் அப்படித்தான் - நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்றே - தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி - ஸல்- அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும் கால்களையும் துண்டிப்பார்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, 'தங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதும் ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் இரண்டு மரணங்களை உங்களை சுவைக்கச் செய்யமாட்டார்கள்" என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள். (வெளியே வந்தபின் உமர் அவர்களை நோக்கி,) '(நபி - ஸல் - அவர்கள் இறக்கவில்லையென்று) சத்தியம் செய்பவரே! நிதானமாயிருங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) பேசியபோது உமர்(ரலி) அமர்ந்தார்கள்.
Volume :4 Book :62


*************
3668. அப்போது, அபூ பக்ர்(ரலி) அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போன்றிவிட்டு, 'முஹம்மத்(ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தவர், முஹம்மத்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தவர்' அல்லாஹ் (என்றும்) உயிர் வாழ்பவன்; அவன் இறக்கமாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்" என்று கூறினார்கள். மேலும், 'நபியே! நீங்களும் இறப்பவர் தாம்; அவர்களும் இறப்பவர்களே' என்னும் (திருக்குர்ஆன் 39:30-ம்) இறை வசனத்தையும், 'முஹம்மது ஓர் இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன்னரும் கூட பல இறைத்தூதர்கள் (வந்து) சென்றிருக்கிறார்கள். எனவே, அவர் இறந்துவிட்டாலோ, (போரில்) கொல்லப்பட்டுவிட்டாலோ நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிச் சென்று விடுவீர்களா? (நினைவிருக்கட்டும்:) எவன் அவ்வாறு திரும்பிச் செல்கிறானோ அவனால் அல்லாஹ்விற்கு எத்தகைய தீங்கும் செய்துவிட முடியாது. நன்றி செலுத்தி வாழ்பவர்களுக்கு அல்லாஹ் அதற்குரிய பிரதி பலனை மிக விரைவில் வழங்குவான்' என்னும் (திருக்குர்ஆன் 03:144-ம்) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள். அன்சாரிகள் (தம்) 'பனூ சாஇதா' சமுதாயக் கூடத்தில் ஒன்று கூடி (தம் தலைவர்) ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம், 'எங்களில் ஒரு தலைவர்; உங்களில் ஒரு தலைவர் (ஆக இருவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வோம்' என்று முஹாஜிர்களிடம் சொல்வோம்)" என்று பேசிக்கொண்டார்கள். அப்போது அபூ பக்ர், உமர் இப்னு கத்தாப், அபூ உபைதா இப்னு ஜர்ராஹ்(ரலி) ஆகியோர் (ஆட்சித் தலைவரை முடிவு செய்ய) அன்சாரிகளிடம் வந்தனர். உமர்(ரலி) பேசப் போனார்கள். உடனே அவர்களை அபூ பக்ர்(ரலி) மெளனமாக இருக்கச் சொல்லிவிட்டார்கள். (இதைப் பிற்காலத்தில் நினைவு கூரும் போது) உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பேச முயன்றது எதற்காக என்றால், நான் எனக்குப் பிடித்த பேச்சு ஒன்றைத் தயாரித்து வைத்திருந்தேன். அபூ பக்ர் அவர்கள் அந்த அளவிற்குப் பேச மாட்டார்கள் என்று நான் அஞ்சினேன். எனவேதான் நான் பேச முயன்றேன்' என்று கூறி வந்தார்கள். 

பிறகு, அபூ பக்ர்(ரலி) பேசினார்கள். மக்களிலேயே உரை நயம் மிக்கவர்களாக அவர்கள் பேசினார்கள். அவர்கள் தம் பேச்சில், '(குறைஷிகளாகிய) நாங்கள் ஆட்சித் தலைவர்களாயிருப்போம்; (அன்சாரிகளான) நீங்கள் அமைச்சர்களாயிருங்கள்' என்று கூறினார்கள். உடனே, (அன்சாரியான) ஹுபாப் இப்னு முன்திர்(ரலி),*/ 'இல்லை! அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் இதற்கு ஒப்புக் கொள்ள மாட்டோம். எங்களிடையேயிருந்து ஒரு தலைவரும (தேர்ந்தெடுத்துக் கொள்வோம்) என்று கூறினார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி), 'இல்லை; நாங்களே தலைவர்களாயிருப்போம். நீங்கள் அமைச்சர்களாயிருங்கள். ஏனெனில், குறைஷிகள் தாம் அரபுகளில் சிறந்த ஊரை (மக்காவை)ச் சேர்ந்தவர்களும், சிறந்த செயல்திறன் மிக்கவர்களும்ஆவர். எனவே, உமர் இப்னு கத்தாப், அல்லது அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள்" என்று கூறினார்கள். அப்போது உமர்(ரலி), 'இல்லை" நாங்கள் உங்களிடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்களில் சிறந்தவர்; எங்களிடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள்" என்று சொல்லிவிட்டு, அவர்களின் கரத்தைப் பிடித்து அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். அப்போது ஒருவர், 'ஸஅத் இப்னு உபாதா அவர்களை(ப் புறக்கணித்து அவரின் கருத்தை) நீங்கள் கொன்று விட்டீர்கள்" என்று கூறினார். அதற்கு உமர்(ரலி), 'அல்லாஹ் தான் அவரைக் கொன்றுவிட்டான்" என்று பதில் கூறினார்கள். 
Volume :4 Book :62
*************
6830. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். 
நான் முஹாஜிர்களில் சிலருக்குக் குர்ஆனை ஓதிக் கொடுத்துவந்தேன். அவர்களில் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்களும் ஒருவராவார். (இந்நிலையில் ஒரு நாள்) நான் 'மினா' பெருவெளியில் அவரின் முகாமில் இருந்து கொண்டிருந்தபோது அவர் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்களிடம் இருந்துவிட்டு என்னிடம் திரும்பிவந்தார். இது உமர்(ரலி) அவர்கள் செய்த இறுதி ஹஜ்ஜின்போது (ஹிஜ்ரி 23ஆம் ஆண்டு) நடந்தது. 

(திரும்பி வந்த) அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: உங்களுக்குத் தெரியுமா? இன்று ஒருவர் இறைநம்பிக்கையாளர்களின் தலைவர் (கலீஃபா உமர்(ரலி) அவர்களிடம் சென்று, 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உமர் அவர்கள் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (முதல் கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாக நடைபெற்று முடிந்தது என்று கூறிய இன்னாரைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார். இதைக் கேட்ட உமர்(ரலி) அவர்கள் கோபப்பட்டார்கள். பிறகு, 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) இன்று மாலை நான் மக்கள் முன் நின்று, தங்களுக்கு சம்பந்தமில்லாத விஷயங்களில் தலையீடு செய்ய நினைக்கும் இவர்களை எச்சரிக்கை செய்யப் போகிறேன்' என்றார்கள். உடனே நான், 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! அவ்வாறு செய்யாதீர்கள். ஏனெனில், ஹஜ் பருவ காலத்தில் (நல்லவர்களுடன்) விவரமற்ற மக்களும் தரம் தாழ்ந்தோறும் குழுமுகின்றனர். நீங்கள் (உரையாற்றுவதற்காக) மக்கள் முன் நிற்கும்போது அவர்கள்தாம் உங்களுக்கருகே மிகுதியாக இருப்பர். நீங்கள் எழுந்து நின்று ஏதோ ஒன்றைச் சொல்ல, அதற்கு உரிய பொருள் தந்து முறையாக விளங்காமல் அவரவர் (மனம்போன போக்கில்) தவறாகப் புரிந்துகொள்வார்களோ என நான் அஞ்சுகிறேன். எனவே, நீங்கள் மதீனா சென்று சேரும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், மதீனாதான் ஹிஜ்ரத் மற்றும் நபிவழி பூமியாகும். நீங்கள் (அங்கு சென்று) மார்க்க ஞானம் உடையவர்களையும் பிரமுகர்களையும் தனியாகச் சந்தித்து நீங்கள் சொல்ல வேண்டியதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னால், அறிவுபடைத்தோர் உங்கள் கூற்றை அறிந்து அதற்கு உரிய இடமளிப்பார்' என்று சொன்னேன். அதற்கு உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக! இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) நான் மதீனா சென்ற பின் முதலாவது கூட்டத்திலேயே இதைப் பற்றிப் பேசப் போகிறேன்' என்றார்கள். 

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அவ்வாறே நாங்கள் துல்ஹஜ் மாதத்தின் பிந்திய பகுதியில் மதீனா வந்து சேர்ந்தோம். வெள்ளிக்கிழமை (ஜுமுஆ நாள்) அன்று சூரியன் நடுவானிலிருந்து சாய்ந்தபோது (பள்ளிவாசலை நோக்கி) நான் விரைந்தேன். அப்போது 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களை சொற்பொழிவு மேடையின் (மிம்பர்) ஓர் ஓரத்தில் சாய்ந்து அமர்ந்திருக்கக் கண்டேன். உடனே நான் அவர் அருகில் என் முட்டுக்கால் அவரின் முட்டுக்காலைத் தொட்டுக் கொண்டிருக்கும் வண்ணம் அமர்ந்துகொண்டேன். சிறிது நேரம் தான் கழிந்திருக்கும்; அதற்கும் உமர் இப்னு அல்கத்தாப்(ரலி) அவர்கள் (சொற்பொழிவு மேடையை நோக்கி) வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட நான் 'ஸயீத் இப்னு ஸைத் இப்னி அம்ர் இப்னி நுஃபைல்'(ரலி) அவர்களிடம், 'உமர்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் அமர்த்தப்பட்ட நாளிலிருந்து (இந்த நேரம் வரை எப்போதுமே) சொல்லியிராத ஒன்றை இன்று மாலை சொல்ல இருக்கிறார்கள்' என்று கூறினேன். அதற்கு ஸயீத் அவர்கள் 'அப்படியெல்லாம் எதையும் உமர் கூறுவதற்கில்லை' என்று கூறி என்னிடம் மறுத்தார்கள். .

அப்போது உமர்(ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். பாங்கு சொல்பவர் பாங்கு சொல்லி மெளனமானதும் உமர்(ரலி) அவர்கள் எழுந்து இறைவனை அவனுக்குத் தகுதியான பண்புகளைக் கூறி புகழ்ந்தார்கள். பிறகு, 'நான் (இன்று) எதைச் சொல்ல வேண்டுமென்று ஏற்படுத்தப்பட்டுள்ளதோ அதை நான் உங்களுக்குச் சொல்லவிருக்கிறேன். இது என் இறப்புக்கு சமீபத்திய பேச்சாக இருக்கக்கூடும்; (உறுதியாக) எனக்குத் தெரியாது. இதை (கேட்டு) விளங்கி நினைவில் நிறுத்திக் கொள்கிறவர் தம் வாகனம் செல்லும் இடங்களிலெல்லாம் இதை எடுத்துரைக்கட்டும்! இதை(ச் சரியாக) விளங்க முடியாது என அஞ்சுகிற (அவர் மட்டுமல்ல் வேறு) யாரும் என் மீது பொய்யுரைப்பதை நான் அனுமதிக்கமாட்டேன்' (என்று கூறிவிட்டுப் பின்வருமாறு பேசினார்கள்:) .

நிச்சயமாக அல்லாஹ், முஹம்மத்(ஸல்) அவர்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பினான். மேலும், அவர்களுக்கு குர்ஆன் எனும்) வேதத்தையும் அருளினான். அல்லாஹ் அருளிய (வேதத்)தீல் கல்லெறி தண்டனை (ரஜ்கி) குறித்த வசனம் இருந்தது. அதை நாங்கள் ஓதியிருக்கிறோம். அதைப் புரிந்து மனனமிட்டுமிருக்கிறோம். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மண முடித்தவர் விபச்சாரம் புரிந்தால் அவருக்குக்) கல்லெறி தண்டனை (ரஜ்கி) நிறைவேற்றியுள்ளார்கள். அவர்களுக்குப் பிறகு நாங்களும் அந்தத் தண்டனையை நிறைவேற்றியுள்ளோம். காலப்போக்கில் மக்களில் சிலர் 'அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவேதத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனத்தை நாங்கள் காணவில்லை' என்று கூறி, இறைவன் அருளிய கடமை ஒன்றைக் கைவிடுவதன் மூலம் வழி தவறிவிடுவார்களோ என நான் அஞ்சுகிறேன். மணமுடித்த ஆணோ, பெண்ணோ விபசாரம் புரிந்து அதற்கு சாட்சி இருந்தாலோ, கர்ப்பம் உண்டானாலோ, ஒப்புதல் வாக்குமூலம் அளித்தாலோ அவருக்குக் கல்லெறி தண்டனை உண்டு என்பது இறை வேதத்தில் உள்ளதாகும். பிறகு, நாங்கள் ஓதிவந்த இறைவேதத்தில் இதையும் ஓதி வந்தோம்: உங்களுடைய (உண்மையான) தந்தையரைப் புறக்கணித்து(விட்டு வேறொரு வரை தந்தையாக்கிவிடவேண்டாம். அவ்வாறு உங்கள் தந்தையரைப் புறக்கணிப்பது நன்றி சொல்லலாகும். 

அறிந்துகொள்ளுங்கள்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மர்யமின் புதல்வர் ஈசா எல்லை மீறிப் புகழப்பட்டதைப் போன்று என்னை நீங்கள் எல்லை மீறிப் புகழாதீர்கள். மாறாக, (என்னைக் குறித்து நான்) அல்லாஹ்வின் அடிமை என்றும் அவனுடைய தூதர் என்றும் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். 
மேலும், உங்களில் ஒருவர், 'அல்லாஹ்வின் மீதாணையாக! உமர் இறந்துவிட்டிருந்தால் இன்னாருக்கு நான் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்திருப்பேன்' என்று கூறுகூதாக எனக்குச் செய்தி எட்டியது. '(கலீஃபா) அபூ பக்ர்(ரலி) அவர்களின் வாக்களிப்புப் பிரமாணம் அவசரக் கோலமாகத்தான் நடைபெற்று முடிந்தது' என்று கூறி எந்த மனிதரும் தம்மைத்தாமே ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். ஆம்! அது எப்படி (அனைவரிடமும் ஆலோசிக்காமல் அவசரமாக)த்தான் நடந்தது. ஆனால், அதன் தீமைகளிலிருந்து அல்லாஹ் (நம்மைப்) பாதுக்காத்துவிட்டான். உங்களில் ஒட்டகங்களில் அதிகமாகப் பயணிக்கும் (-அரபுகள்) எவரும் (மூப்பிலும் மேன்மையிலும்) அபூ பக்ர்(ரலி) அவர்களைப் போன்று இல்லை.44 முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின் ஒரு மனிதருக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுக்கிறவரும் அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்பட மாட்டார்கள். எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம். 

மேலும், அல்லாஹ் தன் தூதரை இறக்கச் செய்தபோது நம்மிடையே நடந்த சம்பவங்களில் ஒன்று: அன்சாரிகள் நமக்கு மாறாக பனூசாஇதா சமுதாயக் கூடத்தில் அனைவரும் ஒன்று திரண்டனர். (ஆனால், முஹாஜிர்களான) அலீ(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோரும் அவர்களுடன் வேறு சிலரும் நமக்கு மாறுபட்ட நிலையை மேற்கொண்டனர். (நம்முடன் அந்த அரங்கிற்கு அவர்கள் வரவில்லை.) முஹாஜிர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் போய் ஒன்று கூடினர். நான் அபூ பக்ர்(ரலி) அவர்களிடம், 'அபூ பக்ர் அவர்களே! நம் சகோதரர்களான அன்சாரிகளிடம் நாம் செல்வோம்' என்று கூறிவிட்டு, அவர்களை நாடிச் சென்றோம். 
அன்சாரிகளை நாங்கள் நெருங்கியபோது அவர்களில் இரண்டு நல்ல மனிதர்கள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிருவரும் (அன்சாரி) மக்கள் (தங்களில் ஒருவரான ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கு வாக்களிப்பதென) ஒரு மனதாக முடிவு செய்திருப்பது குறித்து தெரிவித்துவிட்டு, 'முஹாஜிர்களே! நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு நாங்கள், 'எங்கள் சகோதரர்களான அன்சாரிகளை நோக்கிச் செல்கிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் இருவரும், 'அவர்களை நீங்கள் நெருங்க வேண்டாம். உங்கள் நிலையை நீங்கள் (இங்கேயே) தீர்மானித்துக்கொள்ளுங்கள். (அதுவரை பொறுமையைக் கடைபிடியுங்கள்)' என்றார்கள். உடனே நான், 'அல்லாஹ்வின் மீதாணையாக! கட்டாயம் நாங்கள் அவர்களிடம் செல்லத்தான் போகிறோம்' என்று கூறிவிட்டு நடந்தோம். பனூசாஇதா சமுதாயக் கூடத்திலிருந்த அன்சாரிகளிடம் சென்றோம். 

அங்கு அவர்களின் நடுவே போர்வை போர்த்திய மனிதர் ஒருவர் இருந்தார். நான், 'இவர் யார்?' என்று கேட்டேன். மக்கள், 'இவர் தாம் ஸஅத் இப்னு உபாதா?' என்று பதிலளித்தனர். 'அவருக்கென்ன நேர்ந்துள்ளது?' என்று கேட்டேன். மக்கள், 'அவருக்குக் குளிர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது' என்று கூறினர். நாங்கள் சிறிது நேரம் அமர்ந்திருந்தபோது அன்சாரிகளின் பேச்சாளர் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனுக்குத் தகுதியான பண்புகளைச் சொல்லிப் புகழ்ந்துவிட்டு, 'பின்னர், நாங்கள் (-அன்சாரிகள்) இறைவனுடைய (மார்க்கத்தின்) உதவியாளர்கள்; இஸ்லாத்தின் துருப்புகள். (அன்சாரிகளை ஒப்பிடும்போது) முஹாஜிர்களே! நீங்கள் சொற்பமானோர் தாம். உங்கள் கூட்டத்திலிருந்து சிலர் இரவோடிரவாக (மதீனா) வந்துசேர்ந்தார்கள். (இன்றோ) அவர்கள் எங்கள் பூர்வீகத்தைவிட்டுமே எங்களைப் பிரித்துவிடவும், ஆட்சியதிகாரத்திலிருந்து எங்களை வெளியேற்றிவிடவும் எண்ணுகின்றனர்' என்று கூறினார். 

(உமர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:) அன்சாரிகளின் பேச்சாளர் பேசி முடித்து அமைதியானபோது நான் பேச நினைத்தேன். மேலும், நான் எனக்குப் பிடித்த ஓர் உரையை அழகாகத் தயாரித்து வைத்திருந்தேன். அதனை அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பே எடுத்துரைத்துவிடவேண்டும் என்றும், (அன்சாரிகளின் பேச்சால்) அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு ஏற்பட்டிருந்த உஷ்ணத்தில் சிறிதளவையேனும் தணித்திடவேண்டும் என்றும் விரும்பினேன். நான் பேச முற்பட்டபோது அபூ பக்ர்(ரலி) அவர்கள், 'நிதானத்தைக் கையாளுங்கள்' என்றார்கள். எனவே, நான் (அபூ பக்ர் அவர்களுக்கு மாறுசெய்து) அவர்களுக்குக் கோபத்தை உண்டாக்க விரும்பவில்லை. 

இதையடுத்து அபூ பக்ர்(ரலி) அவர்கள் பேசினார்கள். அன்னார் என்னைவிடப் பொறுமைசாலியாகவும் நிதானமிக்கவராகவும் இருந்தார்கள். நான் எனக்குப் பிடித்த வகையில் அழகுபடத் தயாரித்து வைத்திருந்த உரையில் எதையும்விட்டுவிடாமல் அதைப் போன்று அல்லது அதைவிடவும் சிறப்பாகத் தயக்கமின்றி (தங்குதடையின்றி) அன்னார் பேசி முடித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்கள் (தம் உரையில்) குறிப்பிட்டார்கள். (அன்சாரிகளே!) உங்களைப் பற்றி நீங்கள் குறிப்பிட்ட (குண) நலன்களுக்கு நீங்கள் உரியவர்களே. (ஆனால்,) இந்த ஆட்சியதிகாரம் என்பது (காலங்காலமாக) இந்தக் குறைஷிக் குலத்தாருக்கே அறியப்பட்டுவருகிறது. அவர்கள்தாம் அரபுகளிலேயே சிறந்த பாரம்பரியத்தையும் சிறந்த ஊரையும் (மக்கா) சேர்ந்தவர்கள். நான் உங்களுக்காக இந்த இருவரில் ஒருவரை திருப்திப்படுகிறேன். இவர்களில் நீங்கள் விரும்பிய ஒருவருக்கு வாக்களி(த்து ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்)யுங்கள். இவ்வாறு கூறிவிட்டு, என் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் அங்கு அமர்ந்திருந்த அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி) அவர்களின் கையையும் பற்றினார்கள். (இறுதியாக அவர்கள் கூறிய) இந்த வார்த்தையைத் தவிர அபூ பக்ர்(ரலி) அவர்கள் கூறிய வேறெதையும் நான் வெறுக்கவில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அபூ பக்ர்(ரலி) அவர்கள் போன்ற தகுதியுள்ளவர்) இருக்கும் ஒரு சமுதாயத்திற்கு நான் ஆட்சித் தலைவராகஆவதைவிட, நான் எந்தப் பாவமும் செய்யாமலேயே (மக்கள்) முன் கொண்டு வரப்பட்டு என் கழுத்து வெட்டப்படுவதையே விரும்பினேன். (இன்று வரை இதுவே என் நிலையாகும். இதற்கு மாற்றமாக) தற்போது எனக்கு ஏற்படாத ஓர் எண்ணத்தை மரணிக்கும்போது என் மனம் எனக்கு ஊட்டினால் அது வேறு விஷயம். 

அப்போது அன்சாரிகளில் ஒருவர் 'நான் சிரங்கு பிடித்த ஒட்டகம் சொறிந்து கொள்வதற்கான மரக்கொம்பு ஆவேன்; முட்டுக் கொடுக்கப்பட்ட பேரீச்சமரம் ஆவேன். (அதாவது பிரச்சினையைத் தீர்ப்பவன் ஆவேன். நான் ஒரு நல்ல யோசனை கூறுகிறேன்: அன்சாரிகளான) எங்களில் ஒரு தலைவர்; குறைஷி குலத்தாரே! உங்களில் ஒரு தலைவர்' என்றார். 

அப்போது கூச்சல் அதிகரித்தது. குரல்கள் உயர்ந்தன. பிளவு ஏற்பட்டுவிடுமோ என்று நான் அஞ்சினேன். எனவே, 'அபூ பக்ர் அவர்களே! உங்கள் கையை நீட்டுங்கள். (உங்களிடம் வாக்களிப்புப் பிரமாணம் செய்கிறேன்)' என்று நான் சொன்னேன். அப்போது அபூ பக்ர்(ரலி) அவர்கள் தங்களின் கரத்தை நீட்டினார்கள். உடனே நான் அவர்களுக்கு (நீங்கள் தாம் ஆட்சித் தலைவர். உங்களுக்கு நாங்கள் கட்டுப்பட்டு நடப்போமென) வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தேன். (அவ்வாறே) முஹாஜிர்களும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்குப் பிரமாணம் செய்தனர். பிறகு, அவர்களுக்கு அன்சாரிகளும் வாக்குப் பிரமாணம் செய்து கொடுத்தனர். நாங்கள் ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களிடம் (அன்னாரைச் சமாதானப்படுத்துவதற்காக) விரைந்து சென்றோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'நீங்கள் ஸஅத் இப்னு உபாதா அவர்களை (நம்ப வைத்து)க் கொன்றுவிட்டீர்கள்' என்றார். .

உடனே நான், 'அல்லாஹ்தான் ஸஅத் இப்னு உபாதவைக் கொன்றான் (நாங்களல்ல)' என்று கூறினேன்.45 மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறந்தபோது) நாங்கள் சந்தித்த பிரச்சினைகளில் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்ததை விட மிகவும் சிக்கலான பிரச்சினை வேறெதையும் நாங்கள் கண்டதில்லை. வாக்களிப்புப் பிரமாணம் நடைபெறாத நிலையில் நாங்கள் அந்த மக்களிடமிருந்து வெளியேறிச் சென்றால் நாங்கள் சென்றதற்குப் பிறகு, தங்களில் ஒருவருக்கு அவர்கள் வாக்களிப்புப் பிரமாணம் செய்து கொடுத்துவிடுவார்கள். அப்போது ஒன்று, நாங்கள் திருப்தியில்லாமலேயே அவர்களுக்கு வாக்களிப்புப் பிராமணம் செய்து கொடுக்க வேண்டி வரும். அல்லது அவர்களுக்கு மாறாக நாங்கள் செயல்பட நேரும். அப்போது குழப்பம் உருவாகும் என்று நாங்கள் அஞ்சினோம். 

ஆக, முஸ்லிம்களின் (சம்மதம் மற்றும்) ஆலோசனையின்றி ஒருவருக்கு வாக்களிக்கிறவரும், அவர் யாருக்கு வாக்களித்தாரோ அவரும் ஏற்கப்படமாட்டார்கள் எச்சரிக்கை! அவ்விருவரும் கொல்லப்படவும் செய்யலாம். 
Volume :7 Book :86
************
2741. அஸ்வத்(ரஹ்) அறிவித்தார். 
ஆயிஷா(ரலி) அவர்களிடம் மக்கள், 'நபி(ஸல்) அவர்கள் (தமக்குப் பின் ஆட்சித் தலைமை ஏற்கும்படி) அலீ(ரலி) அவர்களிடம் இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்துவிட்டுச் சென்றார்கள். (என்று கேள்விப்படுகிறோமே)" என்றார்கள். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் எப்போது அவருக்கு வஸிய்யத் செய்தார்கள்? (நபி(ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் இருந்த போது) நான் தானே அவர்களை என் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அவர்கள் கையலம்பும் கிண்ணம் கொண்டு வரும்படிக் கேட்டார்கள். பிறகு என் மடியில் மூர்ச்சையுற்று சரிந்தார்கள். நான் அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதைக் கூட உணரவில்லை. அவ்வாறிருக்க, அவர்கள் எப்போது அவரிடம் (ஆட்சிப் பொறுப்பேற்கும்படி) வஸிய்யத் செய்திருக்க முடியும்?' என்று கேட்டார்கள். 
Volume :3 Book :55
**********************
மேற்கூறிய ஹதிதுகளை படித்தாலே முதல் கலிஃபாவின் தேர்வே குழப்பமாக் நடைபெற்று இருப்பது தெரியும்,ஷியா முஸ்லிம்கள் ஹாதிர் கும் என்னும் இடத்தில் கூறப்படும் ஹதிதில் அலி வாரிசாக அறிவிக்கப் பட்டதாக கூறுகின்றனர்.அபுபக்கருக்கு பிந்தைய உத்மான்,உமர்,அலி மூவரும் கொலை செய்யப் பட்டதும்,ஃபித்னா போர்களும் கூட கவனத்தில் கொள்ள வேண்டியவை.ஆக்வே இஸ்லாமிய பொற்கால் ஆட்சி என்பது எப்போதும் இருந்ததும் இல்லை.இருக்கப் போவதும் இல்லை.ஒருவேளை சொர்க்கத்தில் பொற்கால் ஆட்சி இருந்தால் விரும்புவோர் செல்ல முயற்சிக்கலாம்.. மதத்தை ஆன்மீகத்திற்கு மட்டும் பயன் படுத்தி மதகுருக்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு,ஜனநாயக் மத சார்பற்ற சக்திகளோடு இணைந்து போராடுவதே சிறுபானமையினருக்கு நன்மை பயக்கும்.