இப்போது இணையத்திலும்,தொலைக்காட்சியிலும் எங்கள் மத புத்தகத்தில் அறிவியல் கோட்பாடுகள் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை அனைவ்ரும் அறிவோம்.இதில் ஆபிரஹாமிய மதங்களே இப்படிமத பரப்புரையில் ஈடுபடுகின்ற்ன. தமிழர்களில் கிறித்தவ,இஸ்லாமிய மதத்தவர் இக்கூற்றுகளை தமிழில் பரப்பி வருகின்றனர்..கிறித்தவர்களின் வேத தமிழ் மொழி பெயர்ப்பை படித்தாலே அவர்கள் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதை எளிதாக சரிபார்க்கலாம்.
குரான் அரபியில் இருப்பதாலும்,மொழி பெயர்ப்புகள் வித்தியாசமாகவும் குழப்பமாகவும் இருப்பதாலும் குரானில் குறிப்பிடப்படும் பல விஷயங்கள் யார் எங்கே ,எப்போது என்று அறுதியிட்டு கூறவே முடியாது குரான்,இஸ்லாம் விமர்சிக்க படுவது அதுவே இறுதி உண்மையான நெறி(மத வாதிகளின் கூற்று) ,பிற மதத்தினரின் சதி என்பது தவறு.இஸ்லமை ஆன்மீக கொள்கையாக கொண்டு மரணத்திற்கு பின் அழிவற்ற வாழ்க்கையும், எல்லையற்ற பேரின்பமும் அடைய விரும்பினால் யாருக்கும் ஆட்சேபனை இல்லை.
ஆனால் இஸ்லாமின் மத அடிப்படைவாத சட்டமான் ஷாரியா,இஸ்லாமிய நாடுகளில் வாழும் பிற மதத்தவர் நிலைமை, மற்றும் உலகம் முழுதும் இஸ்லாமிய அரசு அமைத்தல் என்ற விஷயங்க்ளே இஸ்லாமை,முஸ்லிம்களை பிற மதத்தவரின் விமர்சனத்திற்கு உள்ளாக்கியது.நமது சகோதர நாடான பாகிஸ்தான்,பங்களா தேஷ் ஆகியவ்ற்றில் நடைபெறும் நிலையற்ற ஆட்சி,மனித உரிமை மீறல்கள் அனைத்துமே மத ரீதியான ஆட்சியால் இந்த் கால கட்டத்திற்கு பொருந்தக்கூடிய ஆட்சிமுறையை வழங்க முடியாது என்பதையே காட்டுகிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் காணப்படும் மக்கள் எழுச்சியும் கூட ஜனநாயகத்தை நோக்கிய ஒரு போராட்டமே.மத ரீதியான ஆட்சி நடத்துதுவதாக காட்டிக் கொள்ளும் அரசர்கள் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளாக நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்க உதவுவதும்,இதனை மறைக்க மத பிரச்சாரங்களுக்கு பொருளுதவி செய்வதும்,உலகளாவிய மத தலைவராக முயல்வதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயங்களாகும்.
இந்த மத பரப்புரைகள் எந்த சூழ்நிலையில் வளரும் நாடுகளில் உள்ள மக்களை நோக்கி செய்யப்படுகின்றன என்பதை பார்த்தோம். மதம் ஆன்மீகமாக இல்லாமல் சர்வ ரோஹ நிவாரணி என்னும் மாயவலையில் ம்தத்திற்காக எதையும் செய்ய வேண்டுமென்ற மன்நிலைக்கு ஒரு சாதாரண மனிதனை ஆளாக்க கூடாது.இந்தியாவில்,பிற மத நாடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறதா என்றால் பிற மத நாடுகளில் பேரளவிலாவது ஜனநாயகம் இருக்கிறது. ஜனநாயகம்,மதமற்ற அரசியல் போன்றவை இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகளில் மிக அரிது.ஒன்ற்ரண்டு விதி விலக்குகள் இந்தோநேசியா,மலேசியா போன்ற நாடுகள் இருக்கலாம். அவையும் இந்த பரப்புரையில் விழுவதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆட்சி மாற்றத்திற்கு மனித உயிர்கள் பலையாவதும் மத்திய கிழக்கில் வழக்கமான் செயல் ஆகிவிட்டது. மதத்தின் ஒரு குறிப்பிட்ட ரீதியான விளக்கம்,மதம் சார்ந்த்த அரசியல் என்பதே இப்பரப்புரைகளின் நோக்கமாகும் என்பதில் ஐயம் இருந்தால் இந்த பரப்புரையாளர்களிடம் ஷாரியா சட்டம் இல்லாமல் இஸ்லாம் இருக்க முடியுமா என்று கேளுங்கள்.ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
அப்படி அவர்கள் ஷாரியாவின் மீதான இஸ்லாமிய அரசு இப்போதைய சட்டங்களை விட எப்படி சிறந்தது என்று சொல்ல மாட்டார்கள்,அதை விவாதிக்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குரானில் அறிவியல் உள்ளது ஆகவே இது இறைவனின் வார்த்தை ,ஷாரியாவும்,இஸ்லாமிய அரசும் இறைவனின் கட்டளைகள் என்று மெதுவாக கருத்தாக்கம் செய்வார்கள். இஸ்லாமிய நாடுகளின் கல்லெறிந்து கொல்லுதல்,சவுக்கடி,கையை வெட்டுதல் என்பதெல்லாம் பிற நாடுகளில் மனித உரிமை மீறலாக கருதப்படுவதும் அறிந்ததே. இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தினர் மட்டுமல்ல,பிற் பிரிவு இஸ்லாமியர்,நடு நிலைமையான இஸ்லாமியர்கள் கூட பாதிக்கப்படுகின்றனர். மாற்றுக் கருத்தானது வன்முறை கொண்டே எதிர்க்கப்படுகின்றது.பதிவை படிக்கும் நண்பர்கள் இது மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கத்திற்கு எதிரானது மட்டுமே,தனிப்பட்ட தமிழ்(இந்திய) இஸ்லாமியர்களின் மதம்,ஆன்மீகத்தில் இருந்து தொடர்பு அற்றது என்பதை அறிந்து கொள்ளுமாறு வேண்டுகிறேன்.
இஸ்லாமிய மத பரப்புரைகளை எப்படி சரி பார்ப்பது,அவர்களின் கூற்றுகளை எப்படி மறுப்பது என்பதற்காக இந்த பதிவு.
குரானே தன்னிடத்தில் புரியாத வசனங்கள் உண்டு என்றே கூறுகிறது.
3:7. அவன்தான் (இவ்) வேதத்தை உம்மீது இறக்கினான். இதில் விளக்கமான வசனங்களும் இருக்கின்றன. இவை தான் இவ்வேதத்தின் அடிப்படையாகும். மற்றவை (பல அந்தரங்கங்களைக் கொண்ட) முதஷாபிஹாத் (என்னும் ஆயத்துகள்) ஆகும்; எனினும் எவர்களுடைய உள்ளங்களில் வழிகேடு இருக்கிறதோ அவர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக முதஷாபிஹ் வசனங்களின் விளக்கத்தைத் தேடி அதனைப் பின்பற்றுகின்றனர். அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் அதன் உண்மையான விளக்கத்தை அறியமாட்டார்கள். கல்வியில் உறுதிப்பாடு உடையவர்கள் அவை அனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான். நாங்கள் அதை நம்பிக்கை கொள்கிறோம், என்று அவர்கள் கூறுவார்கள். அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.
Yusuf Ali: He it is Who has sent down to thee the Book: In it are verses basic or fundamental (of established meaning); they are the foundation of the Book: others are allegorical. But those in whose hearts is perversity follow the part thereof that is allegorical, seeking discord, and searching for its hidden meanings, but no one knows its hidden meanings except Allah. And those who are firmly grounded in knowledge say: "We believe in the Book; the whole of it is from our Lord:" and none will grasp the Message except men of understanding.
_______________
இப்பதிவில் உலகம் உருண்டை என்று எங்கள் புத்தகத்தில் அன்றே கூறப்பட்டுள்ளது என்று கூறுவதை எடுத்துக் கொள்வோம்.
இந்த யு டியூபிலும் இந்த பரப்புரைகள் அதிகமாக கிடக்கின்றன.இந்த காணொளியில் குரான் 79.30 ல் பூமி நெருப்புக் கோழி முட்டை போல் உள்ளது என்று கூறுவதை கேளுங்கள்.
1.முதலில் யாரேனுமிந்த வசனத்தில் அறிவியல் இருக்கிறது என்று கூறினால் உடனே அவ்வசனத்தை குறித்து கொள்ளுங்கள்..
அவ்வசனத்தை தமிழிலும்,ஆங்கிலத்திலும்,வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பில் பார்த்தால் ஒரு அளவிற்கு அந்த வசனம் என்ன கூறுகிறது என்று புரியும். குரான் வசனம் சரிபார்க்க இந்த தளத்தில் பார்க்கவும்.ஆங்கில மொழி பெயர்ப்பில் திரு பித்கல்,யூசுஃப் அலி(இவர் இந்திய போஹ்ரா பிரிவு இஸ்லாமியர்) எளிதாக இருக்கும்..ஆனால் யூசுஃப் அலி மொழி பெயர்ப்பில் எப்போதும் அறிவியலை ஒத்து வருமாறே மொழி பெயர்ப்பார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.
79:30 இதன் பின்னர், அவனே பூமியை விரித்தான்.
Sahih International: And after that He spread the earth.
Pickthall: And after that He spread the earth,
Yusuf Ali: And the earth, moreover, hath He extended (to a wide expanse);
Shakir: And the earth, He expanded it after that.
Muhammad Sarwar: After this, He spread out the earth,
Mohsin Khan: And after that He spread the earth;
Arberry: and the earth-after that He spread it out,
Waalarda baAAda thalika dahaha
வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்ப்பு வேண்டுமெனில் இத்தளத்தில் கிடைக்கும்.
http://corpus.quran.com/
Waalarda -And the earth
baAAda -after
thalika -that
dahaha-He spread it.
இந்த வசனத்தை பார்த்தாலே நெருப்புக் கோழி முட்டை என்பது குறிப்பிடப்படவில்லை என்பது தெரியும்.இபோது இரண்டாவ்து கட்டத்திற்கு செல்வோம்.
2.குரான் என்பது 1400 வருடங்களுக்கு முந்தைய புத்தகம்.அது அப்போது எப்படி அர்த்தம் கொள்ளப்பட்டதோ, விளங்கப்பட்டதோ அப்படியே இப்போதும் சொல்லப்பட்டால் மட்டுமே அது உண்மையான விளக்கம்.
இதற்கு பல குரான் விளக்கங்கள்(தஃப்சீர்) உண்டு.இதில் இபின் அப்பாஸ்(முகமதுவின் உறவினர் 618_678),அல் சுயுட்டி போன்றவர்களின் விளக்கங்கள் ஒரு அளவிற்கு இந்த வசனங்கள் 6ஆல் நூற்றாண்டில் எப்படி பொருள் கொள்ளப்பட்டதோ அது போலவே இருக்கும். இந்த வசனத்தின் விளக்கத்தை பார்ப்போம்.
anwîr al-Miqbâs min Tafsîr Ibn ‘Abbâs
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }
(And after that He spread the earth) even then He spread it on the water; it is also said: 2,000 years after that He spread it on the water,
* تفسير Tafsir al-Jalalayn
{ وَٱلأَرْضَ بَعْدَ ذَلِكَ دَحَاهَا }
and after that He spread out the earth: He made it flat, for it had been created before the heaven, but without having been spread out;
படித்தால் பூமி தட்டை என்று சொல்வது போல் இருக்கிறதே என்றால் எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது.
3.மேற்கூறிய இரு செயல்களை கொண்டு இந்த பரப்புரைகளை எளிதில் மறுக்கலாம். விவாதிக்க அவசியம் இல்லையென்று நினைத்தாலும் சரி பார்த்தோம் என்ற ஒரு திருப்தி வரும். பல நண்பர்கள் யு டியூபிலும் இந்த பரப்புரைகளை மறுத்து காணொளிகளை வெளியிட்டு வருகிறார்கள்.இந்த காணொளியில் நாம் சொன்ன விஷயங்கள் அனைத்தும் செய்முறை விளக்கமாக காட்டப்பட்டுள்ளது. பாருங்கள். தெளிவு பெருங்கள்.
குரானின் பல வார்த்தைகளுக்கு பல பொருள் கூற முடியும்.அதில் ஏதாவது ஒன்றை அறிவியல் கொள்கைகளுக்கு ஏற்ற மாதிரி காட்ட முடியும்.இதில் என்ன ஏமாற்று வேலை என்றால் ஏற்கெனவே இல்லாத அர்த்தம் எல்லாம் புதிதாக கண்டுபிடித்தல், அதாவது இந்த டஹாஹ[dahaha] என்ற வார்த்தைக்கு புதிதாக நெருப்புக் கோழி முட்டை என்று ஒரு அர்த்தம் புதிதாக கண்டு பிடித்து பாருங்கள் அறிவியலை என்று கூறுவதில் இருந்து படிக்கும் நண்பர்கள் இந்த மதத்தில் அறிவியல் என்ற கருத்தாக்கம் என்பது என்ன என்பதை புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.ஜாகிர் நாயக்கின் விளக்கத்தில் இருந்து அது நன்றாக விளங்கும்.