Wednesday, March 2, 2011

வரலாற்று இயேசுவை தேடி


ஆங்கில நாட்காட்டிகள் உலக வரலாற்றையே இரு பிரிவாக கி.மு(கிறிஸ்துவுக்கு முன் ),கி.பி(கிறிஸ்துவுக்கு பின் )என்று பயன்படுத்தி வருவ்து அனைவரும் அறிந்ததே. இந்த கிறிஸ்து என்னும் சொல்லுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர்,மீட்பர்(மேசியா) என்று பொருள்..

Christ is the English term for the Greek Χριστός (Khristós) meaning "the anointed one". It is a translation of the Hebrew מָשִׁיחַ (Māšîaḥ), usually transliterated into English as Messiah. In popular modern usage—even within secular circles—the term usually refers explicitly to Jesus of Nazareth.

இது ஜீஸஸ்,இயேசு,ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ‌ மதத்தின் கடவுளாக(ம‌கன்) கருதப்படும் ஒருவரைக் குறிக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு,மாற்கு,லூக்கா மற்றும் யோவான்(ஜான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும் இந்த சுவிஷேசங்கள் கூறுகின்றன.யூதர்களால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார்,ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது.

இஸ்லாமியர்களின் வேதமான குரானிலும் இவர் ஈசா என்ற பெயரின் இறைத்தூதராக அறியப்படுகிறார்.கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே.கடவுளின் அவதாரமில்லை.

கிறித்தவம்,இஸ்லாமின் ப்ல பிரிவினர் இவர் மீண்டும் மறுமை நாளில் வருவார் என்று நம்புகின்றனர்..இந்த விஷயங்களை வரலாற்றின் மூலம் உறுதி செய்ய முடியுமா?.இந்த குறிப்புகள் வரலாற்று ஆதாரம் உடையனவா என்பதை குறித்து சேகரித்த விவரங்களை இந்த தொடர் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.

இப்பதிவு ஏன் எழுதவேண்டுமெனில ஏற்கெனவே ஆங்கிலத்தில் இது குறித்து பல் கட்டுரைகள்,புத்தகங்கள் வெளிவந்துள்ளன.தமிழர்களுக்கும் அது குறித்து சில தகவல்கள் சொல்லவேண்டும்.தொடரின் உள்ள சந்தேகங்கள்,விளக்கங்கள் கூடுமானவரை எளிமை படுத்த முயற்சிக்கிறேன்.

 புதிய ஏற்பாடு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள் 

பதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும் . முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது.

கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.புதிய ஏற்பாடு பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன..
புதிய ஏற்பாட்டின் மூல நூல் (செப்துவசிந்தா) ] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது..கீறிதவத்தை விமர்சிக்கும் பல இஸ்லாமிய தளங்களில் புதிய ஏற்பாடு மூலம் அரமைக்(இயேசுவின் தாய்மொழி) மொழி என்று தவறாக குறிப்பிடுகிறார்கள்..

பொதுவாக கிறித்தவ மத சார்பு ஆய்வாளர்கள் ஜோசபஸ்(கி.பி 37_100) என்ற யூத வரலாற்று அறிஞர் இயேசுவை பற்றி குறிப்பிடுவதாக கூறுவர்.அடுத்த பதிவில்.இவர் என்ன கூறினார்,அதன் ஆதாரங்கள் பற்றி ஆய்ந்து,தொடர்ந்து தேடுவோம்.
http://en.wikipedia.org/wiki/Josephus_on_Jesus
(தொடரும்)3 comments:

 1. "கிறித்தவம்,இஸ்லாமின் ப்ல பிரிவினர் இவர் மீண்டும் மறுமை நாளில் வருவார் என்று நம்புகின்றனர்" it is not the right information. only christians expeting Jesus's second coming. (or, can you prove that it has been mentioned in Holy Quran?)

  kannan from abu dhabi.
  http://samykannan.blogspot.com/

  ReplyDelete
 2. சார்வாகன்!

  அருமையான ஒரு பதிவை தொட்டுருக்கிறீர்கள். தொடர்ந்து பதிவை நானும் பார்க்கிறேன். கண்ணனுக்கு ஒரு குர்ஆன் வசனம்.

  'வேதமுடையோரில் ஒவ்வொருவரும் ஏசு மீண்டும் வந்து மரணிப்பதற்கு முன் அவரை நம்பாமல் இருக்க மாட்டார்கள். உலக முடிவு நாளில் அவர் அவர்களுக்கு எதிரான சாட்சியாக இருப்பார்'
  -4:159

  ReplyDelete