முன் பதிவில் திரு மௌரிஸ் புகைலின் வாழ்க்கை குறிப்பு அவர் எழுதிய புத்தகம்,உலத்தின் தோற்றம் பற்றிய அவர் கருத்து என்பதை பார்த்தோம்.இவரை குறித்து மத பிரச்சாரகர்கள் தலை சிறந்த விஞ்ஞானி என்றும் அவர் எப்படி இஸ்லாமை குறித்து ஆய்வு செய்ய ஆரம்பித்தார் என்பதற்கு ஒரு சம்பவத்தை கூறுவார்கள்.
1981ஆம் ஆண்டு ஒரு எகிப்திய மன்னனின் மம்மி(பதப் படுத்தப் பட்ட உடல்) ப்ரான்ஸ் வந்தது.யூதர்கள் எகிப்தில் அடிமையாக இருந்த போது மூசா(மோசஸ்) என்னும் இறைத்தூதர் மூலமாக யூதர்களை எகிப்தில் இருந்து விடுவித்து அவர்களை கானான்(இபோதைய பாலஸ்தீனம்+இஸ்ரேல்) அழைத்து வந்ததாக தோரா(யூதர்களின் வேதம்),பைபிள் மற்றும் குரானில் கூறப்படுகிறது. அப்படி எகிப்தில் இருந்து வரும் போது எகிப்து மன்னர் ஃபிர் அவுன் படையோடு துர்த்தியதாகவும் ,செங்கடலை பிளந்து யூதர்களை மட்டும் பாதுகாத்த இறைவன், ஃபிர் அவுன் மற்றும் படையினரை மூழ்கடித்ததாக மூன்று புத்தகங்களும் கூறுகின்றன.
இதில் குரான் மட்டும் ஃபிர் அவுன் இறக்கும் முன் இறைவனிடம் மன்னிக்குமாறு வேண்டியதாகவும், அதற்கு அவர் உன் உடலை அத்தாட்சியாக பாதுகாப்பதாக உறுதி அளிக்கிறார்.
_________________________________________
“மேலும் இஸ்ராயீலின் சந்ததியினரை நாம் கடலைக் கடக்கவைத்தோம். அப்போது பிர் அவ்னும் அவனது படையினரும் கொடுமையும், பகைமையும் கொண்டு அவர்களை பின்தொடர்ந்தார்கள். அவன் மூழ்க ஆரம்பித்ததும் அவன் இஸ்ராயீலின் சந்ததியினர் எந்த நாயன் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்களோ அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று நானும் ஈமான் வைக்கிறேன். இன்னும் நான் அவனுக்கே முற்றும் வழிபடுபவனாக இருக்கிறேன் என்றும் கூறினான்.இந்த நேரத்தில் தானா? சற்று முன்வரை திடனாக நீ மாறு செய்துகொண்டிருந்தாய். இன்னும் குழப்பம் செய்பவர்களில் ஒருவனாகவும் இருந்தாய்.எனினும் உனக்குப் பின்னுள்ளவர்களுக்கு அத்தாட்சியாக இன்றைய தினம் நாம் உம் உடலைப் பாதுகாப்போம். நிச்சயமாக மக்களில் பெரும்பாலானோர் நம் அத்தாட்சிகளைப் பற்றி அலட்சியமாக இருக்கின்றனர்” குரான் 10: 90_92
* * *
இந்த உடலை ஆய்வு செய்யும் குழுவில் மௌரிஸ் இருந்தார் என்றும்,அது எப்படி இவ்வளவு நாட்கள் கெடாமல் இருந்தது என்று யோசித்து அதாற்காக விடையை தோரா,பைபிள் மற்றும் குரானில் தேடியதாக கூறப்படுகிறது. குரானில் சொன்ன விளக்கம் சரி என்று பட்டதால் குரானை ஆய்வு செய்து இஸ்லாமை ஏற்றுக் கொண்டார் என்று இஸ்லாமிய பிரச்சாரகர்கள் கூறுகிறார்கள்
.* * *
நான் சொன்ன இவர் இஸ்லாமை ஏற்றுக் கொண்ட கதை யுட்யூபில் கானொளியாக உள்ளது. பாருங்கள்.
* * *
இதற்கு முந்திய பதிவில் இவர் 1975 லேயே குரான் பற்றிய ஆய்வில் வித்தகராக ஆகிவிட்டாட் என்றும்,ஒரு புத்தகம் கூட எழுதிவிட்டார் என்று பார்த்தோம். ஆனால் புத்தகத்தில் அவர் 1975 ஆம் ஆண்டு எகிப்தில் மம்மியை பார்த்ததாக கூறுகிறார். அவர் புத்தகத்தின் 170_171 ஆம் பக்கங்களில் இருந்து
In June 1975, the Egyptian high authorities very kindly allowed me to examine theparts of the Pharaoh's body that had been covered until then. They also allowed me to was in over sixty years ago, it was abundantly clear that it haddeteriorated andfragments had disappeared. The mummified tissues had suffered greatly, at the handof man in some places and through the passage of time in others.This natural deterioration is easily explained by the changes in the conditions of conservation from the time in the late Nineteenth century when it was discovered.
* * *
கண்டுபிடிக்கப்பட்ட நாளில் இருந்து அந்த உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழிவதாக கூறுகிறார். கடவுள் நீருக்குள் மட்டும் தான் பாதுகாப்பார் என்று நினைக்க வேண்டியுள்ளது.
இவரப் பற்றி கூறப்படுக் கதைகளுக்கும் இவர் புத்தகத்தில் எழுதியவைகளுக்கும் உள்ள வித்தியாசங்களை பார்த்தோம். மீண்டும் அவர் புத்தகத்தில் கூறப்பட்ட குரானிய அறிவியல் தத்துவங்களை பார்ப்போம்.
_______________________
இரண்டாம் கண்டுபிடிப்பு
இந்த வசனங்கள் பிரபஞ்சத்தின் படைப்பை கூறுவதாக கூறுகிறார்.
41:9. “பூமியை இரண்டே நாட்களில் படைத்தவனை நிராகரித்து அவனுக்கு இணைகளையும் நிச்சயமாக நீங்கள் தான் ஏற்படுத்துகிறீர்கள்? அவன் அகிலத்தாருக்கெல்லாம் இறைவன்” என்று (நபியே!) கூறுவீராக.
41:10. அவனே, அதன் மேலிருந்து உயரமான மலைகளை அமைத்தான்; அதன் மீது (சகல விதமான) பாக்கியங்களையும் பொழிந்தான்; இன்னும், அதில் அவற்றின் உணவுகளை நான்கு நாட்களில் சீராக நிர்ணயித்தான்; (இதைப் பற்றி) கேட்கக் கூடியவர்களுக்கு (இதுவே விளக்கமாகும்).
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
41:12. ஆகவே, இரண்டு நாட்களில் அவற்றை ஏழு வானங்களாக அவன் ஏற்படுத்தினான்; ஒவ்வொரு வானத்திற்கும் அதற்குரிய கடமை இன்னதென அறிவித்தான்; இன்னும், உலகத்திற்கு சமீபமான வானத்தை நாம் விளக்குகளைக் கொண்டு அலங்கரித்தோம்; இன்னும் அதனைப் பாதுகாப்பாகவும் ஆக்கினோம்; இது யாவரையும் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாகிய (இறை)வனுடைய ஏற்பாடேயாகும்.
வானம் என்பதை பூமி நீங்கலான பிரபஞ்சம் என்று கொள்கிறார்கள்.
பூமி 2 நாட்கள்
மலைகள்+இத்தியாதி=4 நாட்கள்
வானம 7 ஆக பிரித்தல் 2 நாட்கள்
மொத்தம் 8 நாட்கள்
முதலில் 6 நாட்கள் என்று சொன்னீர்களே என்றெல்லாம் யோசித்தால் அறிவியல் தெரியாது. இந்த ஒழுங்கு படுத்துதலும் இந்த நான்கு நாட்களுக்குள் அடக்கம் என்று (நாமாகவே)எண்ணி பார்த்தால் குழப்பம் நீங்கும்(?).
மௌரிஸ் கூறுகிறார் இந்த வசனங்களீன் படி பூமி,அதன் மீது மலைகள்,வானம் மற்றும் ஒழுங்கு படுத்துதல் என்று வருகிறது. இங்கே வரிசையாக நிகழ்வுகள் நடந்தது என்று என்று பார்த்தால் அறிவியல் தெரியாது.
வானம் புகையாக இருந்தது என்றால் பிரபஞ்ச பெருவெடிப்பு ஏற்பட்ட பின் வாயுக்களாக் இருந்த நிலை என்று கொண்டால் அறிவியல் தெரியும். பிரபஞ்சத்தில் பூமியும் தானே அடக்கம் அது படத்து மலைகளை கூட நட்டு வைத்தாயிற்று என்று சொன்னால் உங்களுக்கு அறிவியலில் நாட்டம் இல்லையென்று அர்த்தம்.அறிவியல் கூறும் வசனத்தின் ஒத்து வரும் பகுதியை மட்டும் எடுத்து கொள்ளுங்கள்.
இரண்டு வசனங்கள்(2:29,20:4 மட்டும் பூமி பிறகு வானம் என்று குறிப்பிடுகின்றன.
2:29. அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்
20:4. பூமியையும், உயர்வான வானங்களையும் படைத்தவனிடமிருந்து அது இறக்கி அருளப் பெற்றது.
மௌரிஸ் கூறுகிறார்
இதுஒன்றும் பிரச்சினை இல்லை ஏனெனில் இரண்டு இடத்தில்தான் பூமி பின் வானம் என்று கூறுகிறார்கள். ஆனால் 9 இடங்களில் வானம் பிறகு பூமி என்று குரான் கூறுகிறது 9>2 ஆகவே குரான் சரியா இறைவனின் வார்த்தையாகும்.1) 7:54,2)10:3,3) 11:7,4) 25:59,5) 32:4,6) 50:38,7) 57:4,8)79:27_33,9) 91: 5_ 10
அவர் கூறுவதையே அப்படியே தருகிறேன்.
(page 99)
In the two passages from the Qur'an quoted above, reference was made in one of theverses to the Creation of the Heavens and the Earth (sura 7, verse 54) , and elsewhereto the Creation of the Earth and the Heavens (sura 41, verses 9 to 12). The Qur'andoes not therefore appear to lay down a sequence for the Creation of the Heavens andthe Earth.The number of verses in which the Earth is mentioned first is quite small, e.g. sura 2,verse 29 and sura 20, verse 4, where a reference is made to "Him Who created theearth and the high heavens". The number of verses where the Heavens are mentionedbefore the Earth is, on the other hand, much larger: (sura 7, verse 54; sura 10, verse 3;sura 11, verse 7; sura 25, verse 59; sura 32, verse 4; sura 50, verse 38; sura 57, verse4; sura 79, verses 27 to 33; sura 91, verses 5 to 10).In actual fact, apart from sura 79, there is not a single passage in the Qur'an that laysdown a definite sequence; a simple coordinating conjunction (wa ) meaning 'and' linkstwo terms, or the word tumma which, as has been seen in the above passage, canindicate either a simple juxtaposition or a sequence.There appears to me to be only one passage in the Qur'an where a definite sequence isplainly established between different events in the Creation.
* ** * *
பெரு வெடிப்புகொள்கை
குரான் 21:30 பெரு வெடிப்பு கொள்கை பற்றி கூறுகிறது என்கிறார் மௌரிஸ் புகைல்.
21:30. நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?
காஃபிர்கள் பார்க்கவில்லையா என்றால் என்ன அர்த்தம்?. தூரத்தில் வானமும்(மேகம்) பூமியும் சேர்வது போல் தெரியும்,இது கடல் கரையில் நின்று பார்த்தால் நன்றாகவே தெரியும். குராஅன் பூமி தடடையாதாகவே கருதுகிறது மலைகள் அதற்கு ஊன்றுகோல்(பேப்பர் வெயிட்), வானம் அதற்கு மூடி என்றே குரான் கருதுகிறது.
தூரத்தில் வானமும் பூமியும் ஒன்று சேர்வது போல் பூமியும் வானமும் ஒன்று சேர்ந்து இருந்த்து என்று நம்புங்கள் என்றே கூறுகிறது.வானம் பூமிக்கி கூரை(மூடி) என்பதை கீழ்க்காணும் வசங்கள் உறுதி செய்கின்றன.
22:65. (நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் இப்பூமியிலுள்ளவற்றையும், அவன் கட்டளையால் கடலில் செல்லும் கப்பல்களையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான்; தன் அனுமதியின்றி பூமியின் மீது வானம் விழுந்துவிடாதவாறு அவன் தடுத்து கொண்டிருக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது மிக்க இரக்கமும், அன்பும் உள்ளவன்.
50:7. மேலும் நாம் பூமியை நீட்டி விரிவாக்கி, அதில் உறுதியான மலைகளை அமைத்துள்ளோம்; மேலும் அதில் அழகிய புற்பூண்டுகளை (ஆண், பெண் வகையுள்ள) ஜோடியாக முளைப்பிக்கவும் செய்திருக்கின்றோம்..
55:10. இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.
வானமும் பூமியும் ஒன்றாக இணைந்து இருந்தது,பிறகு இறைவனால் பிரிக்கப் பட்டது. இந்த இணைந்து இருந்தது என்று எப்போது கூறுவோம். இரு வேறு பட்ட பொருள்கள் ஒன்றாக சேர்த்தால் கூறலாம். பிரபஞ்சத்தில் அளவில் பூமியின் அள்வு மிக சிறியது என்பது குரான் மற்றும் மௌரிஸ் கணக்கிலேயே எடுத்துக் கொள்வது இல்லை. பூமிக்காகவே வானம் என்பதையே குரான் கூறுகிறது.
வானம் புகையாக இருக்கும் போதே பூமியும் அதன் மீது மலைகளுக் இருப்பதாக 41:11 கூறுகிரது.
41:11. பிறகு அவன் வானம் புகையாக இருந்தபோது (அதைப்) படைக்க நாடினான்; ஆகவே அவன் அதற்கும் பூமிக்கும்: “நீங்கள் விருப்புடனாயினும் அல்லது வெறுப்பிருப்பினும் வாருங்கள்” என்று கூறினான். (அதற்கு) அவையிரண்டும் “நாங்கள் விருப்புடனேயே வருகின்றோம்” என்று கூறின.
வானம் புகை போல் ஆகும் என்று எதிர் காலத்தில் கூறுகிறது.
44:10. ஆகவே, வானம் ஒரு தெளிவான புகையைக் கொண்டு வரும் நாளை நீர் எதிர் பார்ப்பீராக.
பெரு வெடிப்பு கொள்கையை 21:30 கூறுவது போல் தோன்றவில்லை.
* *
குரானின் வானவியல்
இந்த வசனம் கோள்களை பற்றி கூறுவதாக மௌரிஸ் கூறுகிறார்.
12:4. யூஸுஃப் தம் தந்தையாரிடம்: “என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - (இவை யாவும்) எனக்குச் சிரம் பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன்” என்று கூறியபொழுது
நட்சத்திரம்=கோள்கள்கோள்களின் எண்ணிக்கை 11(ஆகும் என்று எதிர்பார்க்கிறார்கள்)
குரானின் சார்பியல் கொள்கை
இந்த வசனம் சார்பியல் கொள்கை பற்றி கூறுவதக கூறுகிறார் மௌரிஸ்.
51:47. மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றலுடையவராவோம்.
51:48. இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.
விரிப்பதில் திறமையானவர் இறைவன் என்று கூறுவதால் விரித்து விட்டார் என்று ஆகிவிடுமா.
இந்த ஒரு வசனம் தவிர விரிந்து செல்லும் பிரபஞ்சம் பற்றி வசனம் இல்லை.
வானம் என்பது பிர பஞ்சமா? வாத்தில் இருந்து மழை பெய்ய செய்கிறார் இறைவன் என்றும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ விரிக்கும் ஆற்றலுடையவர் அல்லா,பூமியை விரித்தார்,வானத்தை விரித்தாரா இல்லையா என்பதை இவ்வசனம் கூறவில்லை.
**
இன்னும் இவர் நோவா(நூஹ்)ன் ஜல பிரளயம் அவர் வாழ்ந்த இடத்தில் மட்டும் ஏற்பட்டது.அந்த இடத்தில் வாழ்ந்த மனிதர்கள் மிருகங்கள் மட்டுமே அந்த கப்பலில் ஏறி தப்பினார்கள் என்று கூறுகிறார்.
இவருடைய சில கருத்துகளை அவர் புத்தகத்தில் இருந்தேஎ பர்ர்த்தோம். இவர் கூறிய விவரங்களை இவ்வாறு தொகுத்து கூறிவிடலாம்.
இவர் பற்றிய விவிவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்து கூறியது அல்ல.குரானின் அரபி வார்த்தைகளுக்கு பொருள் மாற்றி கூறியதுதான் என்பதே.
மருத்துவரான இவர் மருத்துவரீதியாக ஏதேனும் ஆரய்ச்சி செய்யவில்லையா குரானை வைத்து என்றால் அதுவும் இல்லை.
ஏற்கெனவே அரபி புலமை பெற்றவர்களை வைத்து இந்த வசங்களை பொருள் மாற்றி கூற முடியும் என்று கண்டு அவர்கள் கூறினால் மதிப்பு இருக்காது என்று உணர்ந்து ஒரு ஐரோப்பிய மருத்துவரை கொண்டு வெளியிட செய்து விட்டார்கள் என்பதே நமது கருத்து ஆகும்.
மௌரிஸ் புகைல் பற்றி முடிந்தது.இன்னொரு குரானிய வி(அ)ஞ்ஞானி கெய்த் மூர் பற்றி வரும் பதிவுகளில் பார்ப்போம்.