Tuesday, January 11, 2011

மதம் சார்ந்த சட்டங்கள் தேவையா?




தெரிந்த செய்தி

தற்போது பத்திரிகைகளிலும்,இணையப் பக்கங்களிலும் அதிகமாக  விவாதிக்கப்படும் ஒரு விஷயம் பாகிஸ்தானின்ப பஞ்சாப் மாநில ஆளுநர் திரு சல்மான் தஸ்ஹீர் அவருடைய மெய்க் காப்பாளாரால் கொல்லப்பட்ட செய்தி.திரு தஸீர் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்தவர்.

  ஒரு கிறித்தவ மதத்தை சேர்ந்த பெண் மற்ற(இஸ்லாமிய) பெண்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட போது இஸ்லாமியர்களின் இறைதூதராக கருதப்படும் திரு முகமதுவை அவமதிக்கும் வார்த்தைகளை கூறினார் என்பதால் , பாகிஸ்தானின் சட்டப்படி அவருக்கு மரண தண்டனை நீதி மன்றத்தால் விதிக்கப்பட்டது. அப்பெண்ணின் ஊரை சேர்ந்த ஒருவர் கூட இத்தணடனை தவ‌று என்று கூற முன் வ்ரவில்லை.

இத்தண்டனையை மறு பரிசீலனை செய்துவந்தார் திரு தஸீர். இது பாகிஸ்தானின் மத குருமார்களையும்னை ,அவரின் எதிரிகளையும் கோபப் படுத்தியது.இச்சூழ்நிலையில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி இஸ்லாமாபாத்தில் கோசர் மார்க்கெட் என்ற ஷாப்பிங்க் கம்ப்ளெக்ஸிற்கு, நேற்று சல்மான் தசீர் சென்றிருந்தார்.

அங்கு அவரது காரில் பாதுகாப்புக்கு கமாண்டோ மெய்பாதுகாவலர்கள் நின்றுகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென சல்மானை நோக்கி சராமரியாக சுட்டதில், சம்பவ இடத்திலேயே தசீர் இரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். 26 தடவைகள் அவர் சுடப்பட்டார்.

இவரை கொன்ற மெய்க் காப்பாளன் காதருக்கு மத அடிபடைவாதிகள் ஆதரவு தெரிவித்து விடுவிக்க  கோருகின்றனர்.

_______

நடந்த சூழ்நிலை.

பாகிஸ்தானின் அரசியல் கட்சிகள் மத அடிப்படை வாதிகளின் ஆதரவை பெற அங்கு ஷாரிய சட்டத்தை அமல் படுத்தினர். மத அடிப்படைவாதிகளுக்கு அரசியல், இராணுவத்தில் நல்ல செல்வாக்கு உண்டு.

மத சிறுபான்மையினரான,இந்துக்கள்,ஷியா,அஹமதியா மற்றும் கிறித்தவர்கள் இச்சட்டத்தினால் பாரபட்சமாக நடத்தப் படுகின்றனர்.

 மத அடிப்படைவாதிகள் எப்போதும்  ஜனநாயகத்தை விட இராணுவ ஆட்சிக்கே ஆதரவு அளித்து வந்துள்ளனர்.

அங்கு இந்த மாதிரி விஷயங்கள் மிக சாதாரணமான் ஒன்று.அந்த கிறித்தவ மத பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டதாலேயே வெளியுலகத்திற்கு தெரிய வந்தது.

ஆளுநரின் கொலையாலேயே இது பரபரப்பாக விவாதிக்கப் படுகிறது.
___________________

இந்தியாவில் எதிர் வினைகள்.


பாகிஸ்தானில் நடந்தது உலகம் முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தாலும் ,இந்தியாவிலும் ,குறிப்பாக தமிழ் இணையத்திலும் அதன் பாதிப்பு அதிகம்தான்.

இந்த கொலையை அனைவரும் கண்டித்தாலும்,தமிழ் இணையத்தில் இது மூன்றுவிதமாக விமர்சிக்கப் படுகிறது.

அ) மத சார்புள்ள சட்டங்களால்  அனைவரும் குறிப்பாக மத சிறுபானமையின‌ர்
பாதிக்கப்படுகின்றனர்.மத சட்டங்கள் இன்றைய நடைமுறைக்கு ஒத்துவராது, ஆகவே மத சார்புள்ள சட்டங்களே இருக்க கூடாது என்று கூறும் பதிவர்கள் உண்டு.

ஆ).இஸ்லாமியர்கள் எபோதும் இப்படிதான் அவர்கள் மத தீவிரவாதிகள்,மத்த்திற்காக எதுவும் செய்வார்கள் ஆகவே இந்தியாவின் மத சிறுபான்மையினரான அவர்கள் பெரும்பானமையினரின் சட்டத்திற்கு உட்பட்டே நடகக‌ வேண்டும் என்று கூறும் இந்துத்தவா சார்பு பதிவர்களும் உண்டு.


இ).மூன்றாவது பிரிவான் இஸ்லாமிய மத ஈடுபாடுள்ள பதிவர்களின் கருத்துதான் இங்கே வித்தியாசமானது. அவர்கள் கூறுவதை பட்டியல் இடுகிறேன்.

1. சல்மான் தஸீர் உண்மையான இஸ்லாமியர்

2.காதர் ஒரு மத விரோதி.

3.இஸ்லாமிய மத சட்டங்கள மனித நேய மிக்கவை .அவை தவறாக பயன் படுத்த படுகின்றன.ஆகவே ஷாரியா சட்டத்தை பற்றி யாரும் குறை கூறாதீர்கள்.
____________________________

அ) வில குறிப்பிட்டதுதான் எனது கருத்து ஆகவே மற்ற இரண்டு கருத்துகளையும் விவாதிப்போம்.

ஆ) வில குறிப்பிட்டது போல் இஸ்லாம் மத சட்டங்கள் மட்டுமே தவறு என்றால் மற்ற மத சட்டங்களும் இதே அளவிற்கே மனித விரோதக் கருத்துகளையே கூறுகின்றன.

நம் நாட்டின் நடந்த இரு முக்கியமான்  மதக்கொலைகள்.

1. தேசத்தந்தை மஹாத்மா காந்தி ,கோட்சேவினால் கொல்லப் பட்டார்.

2. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க் காப்பாளரால் கொல்லப்பட்டார்.

இந்த கொலையால் சீக்கியர்களுக்கு எதிராக பெரிய வன்முறை  வெறியாட்டமே நடந்தது. 

__________________

திரு சல்மான் தஸீரின் கொலைக்கும், திருமதி இந்திரா காந்தி அவர்களின் கொலைக்கும் உள்ள ஒறுமைகள்.

1.மத அடைபடை வாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாகவே கொல்லப் பட்டனர்.

2. மெய்க் காப்பாளரால் கொல்லப் பட்டனர்.

மத க்கொலைகள் எந்த மதத்தினரால் செய்யப் பட்டாலும் தவறே.

இன்னும் நிறைய எழுதலாம். நான் சொல்லுவது இக்காலத்திற்கு மனித உரிமைகளை மதிக்க கூடிய,மத சார்பற்ற  சட்டங்கள்தான் உலகம் முழுவதும் வேண்டுமே தவிர ஏதோ ஒரு கால‌த்தில் ஏதோ ஒரு சூழ்நிலையில்,ஏதோ ஒரு குறிப்பிட்ட இனத்தவருக்காக எழுதப்பட்ட சட்டங்கள் இக்காலத்திற்கு பொருந்தாது.

மதம் என்பது நம்பிக்கை மட்டுமே அடிப்படையாக கொண்ட விஷயம்.ஆன்மீகத்தை தாண்டி மதம் அனைத்து  மனிதர்களின் வாழ்க்கைமுறையில் தலையிடும் போது எதிவினை ஆற்றியே ஆக வேண்டு.
__________________________________

இபோது மூன்றாம் கருத்துககு வருவோம்.நமது தமிழ் இஸ்லாமிய பதிவர்கள் பலர் இஸ்லாமிய சட்டமே உலகின் தலை சிறந்து என்ற நம்பிக்கை உடையவர்கள். பாகிஸ்தானில் சரியாக(?) அமல் படுத்தப் படவில்லை என்கிறார்கள்.

பல இஸ்லாமிய மத நம்பிக்கையாளர்கள் எப்போதும் உலகளாவிய  இஸ்லாமிய பொற்கால ஆட்சியில் மத சட்டங்களை எல்லாருக்கும் அமல் படுத்தும் பகல் கன்விலேயே உள்ளவர்கள்.

இந்த கொலை பற்றிய விவாதத்தால் இஸ்லாமிய ஷாரியா சட்டம் தவறானது,மனித விரோத போக்கு உரியது என்று கூறிவிடுவார்களோ என்று
எண்ணி காதர் இஸ்லாமின் விரோதி,திரு சல்மான் தஸீர்  உண்மையான முஸ்லிம் வீரர் என்கின்றனர்.


நாம் கேட்பதெல்லாம் ஒரே கேள்வி

ஷாரியா சட்டப்படி தேவ தூஷனத்திற்கு மரண தண்டனை என்பது உண்மையா?


இதனை இந்தியர்கள் இஸ்லாமிய சட்ட அனுகுமுறையின் படி கூறுகிறார்கள் என்றால்,பாகிஸ்தானின் மத வாதிகள் நேர் எதிடர்விதமாக அல்லவா கூறுகிறார்கள்.

யார் சரி? யார் தவறூ? இருவரையுமே ஒரே சட்ட அணுகுமறை எதிராக சிந்திக்க வைத்தால் அச்சட்டம் சரியானதா?இப்படி ஒரு குழப்பமான் சட்டத்தை வழங்கிய இறைவனின் தவறா?

திரு சலமான் அவர்களின் மத சட்டங்களுக்கு எதிரான வீர மரண‌த்தை மததியாகி என்றால் இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சி.மத சட்டங்கள் இக்காலத்திற்கும்,அனைவருக்கும் பொருந்துமா என்பதை நடுநிலைமையோடு சிந்திப்போம்.

No comments:

Post a Comment