Saturday, March 19, 2011

லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி?




லிபியா என்றாலே அனைஅருக்கும் ஞாபகம் வருவது பாலைவன சிங்கம் ஓமர் முக்தார்[கி.பி 1862_1931].இத்தாலி முசோலினிக்கு  எதிராக லிபிய விடுதலைக்காக அவர் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டம் அருமையான திரைப்படமாக கூட எடுக்க ப்பட்டது.முதல் உலகப்போருக்கு பின் மத்தியக் கிழக்கில் அமைந்த எல்லா அரபு நாடுகளிலுமே மன்னர்,இராணுவ அல்லது குழப்பான ஆட்சிகளே நிலவுகின்றது.நமது நாட்டில் ஆட்சி மாறினாலும் ஊழலும் ,சுரண்டலும் தொடர்வது வேறு விஷயம் என்றாலும் ஆட்சியை குப்பனிடம் இருந்து குப்பம்மாவிற்கோ அல்லது சுப்பனுக்கோ பிரசினை இல்லாமல் மாற்றுவது எளிதாக இருக்கிறது. ஜனநாயக ஆட்சியோ,ஓட்டு போட்டு பிடிக்காத ஆட்சியை மாற்றுவது என்பது மத்திய கிழக்கு நாடுகளில் சாத்தியமே இல்லை போல் தெரிகிறது. லிபியா மீது ஐ நா(என்ற போர்வையில் ஆதிக்க சக்திகள்) போர் தொடுத்ததை செய்திகளில் அறிந்திருப்பீர்கள்.இப்பதிவில் அதனை பற்றி கொஞ்சம் பார்ப்போம்.


லிபியா

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு. இதன் தலைநகர் திரிப்பொலி..ஏறத்தாழ 1,800,000 ச.கி.மீs (700,000 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும். லிபியாவின் மக்கள்தொகை 64 இலட்சம்.தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.. இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன. உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.

முவாம்மர் அல்-கடாபி 

1951ஆம் ஆண்டு லிபியா நாடு விடுதலை பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.ஏழைக் குடும்பமொன்றில் பிறந்த கடாபி, அதிகாரம் கையில் வந்தவுடன் குடும்ப அரசியலில் ஈடுபட்டு செல்வம் சேர்த்தமை, லிபிய மக்களின் எதிர்ப்புணர்வுக்கு முக்கிய காரணம். கடாபியின் குடும்பத்தினர் மட்டுமல்ல, அவரது “கடாபா” கோத்திரமும் அரசியல்- பொருளாதாரத்தில் ஆதிக்கம் செலுத்தினர். பிற அரேபியர்கள் போல, லிபிய அரேபியரும் பல கோத்திரங்களாக அல்லது இனக்குழுக்களாக பிரிந்துள்ளனர். இந்த அரபிய இனக் குழுக்களுக்கிடையே ஒற்றுமை இருப்பதில்லை என்பது மத்திய கிழக்கு நாடுகளுக்கெ உரித்தான சாபம் என்று கூறலாம்.இராணுவ ஆட்சி,மத ரீதியான சட்டங்கள் என்று லிபியாவும் மற்ற மத்திய கிழக்கு நாடுகளை போலவே ஆட்சி நடந்து வந்தது.2011ஆம் ஆண்டு துனிஷியா ,எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. முதலில் லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தன. கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே இருந்தது.ஆனால் மெதுவாக நிலைமை கடாஃபிக்கு சாதகமாக திரும்பத் தொடங்கியது.ஆதரவு படைகளிடம் இருந்து இடங்களை மீட்க ஆரம்பித்தார்.எதிர்த்தரப்பிற்கு அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சவுதி அரபிய அரசு மூலம் ஆயுதம் வழங்குவதாக குற்றம் சாட்டினார்ம கடாஃபி.லிபியா வான்வெளியில் விமானங்கள் பறக்க ஐ.நா., தடை விதித்த‌து. இந்நிலையில் போரை நிறுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

லிபியா மீதான படை நடவடிக்கை ஆரம்பம் 

லிபியா மீதான படை நடவடிக்கை ஆரம்பமாகி உள்ளது. முதற்கட்டமாக நேட்டோ படையினரின் கடற்படை கப்பல்களில் இருந்து 112 தொமகவ் குரூஸ் ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமாக பென்ரகன் தெரிவித்துள்ளது.இன்று (19-3-2011) மாலை பிரான்ஸ் நாட்டு தாக்குதல் விமானங்கள் தரையில் நகர்ந்து சென்ற லிபிய இராணுவத்தின் வாகனம் ஒன்றை தாக்கியழித்தை தொடர்ந்து அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகிய நாடுகளின் கடற்படை கப்பல்களில் இருந்து 112 ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.லிபியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைத் தொகுதிகளை தாக்கியழிக்கும் நோக்கத்துடனே 20 நிலைகள் தாக்கியளிக்கப்பட்டுள்ளதாக பென்ரகனின் படை அதிகாரி வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.லிபியாவின் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை தாக்கி அளித்த பின்னரே விமானப் பறப்புக்களை மேற்கொள்ள தாம் திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி?

கடாஃபியின் ஆட்சியில் அனைத்த்து இனக் குழுக்களுக்கும் சரியான பங்களிப்பு இல்லாததுதான் பிரச்சினைக்கு காரணம் என்றாலும் லிபியாவில் உள்ள எண்ணெய் கிணறுகள்ள் அனைத்துமே அரசுடமை ஆக்கப்பட்டு விட்டதும்,, பிற நாடுகளின்  தலையீடுகளே பிரச்சினைகளை பெரிதாக்கியது.கடாஃபி அமெரிக்கா மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தில்மிகுந்த ஈடுபாடு காட்டுவதை கடாஃபி எதிர்ப்பதும்,மத்திய கிழக்கின் அமெரிக்க நண்பன் சவுதியை விமர்சிப்பதுமே மற்ற நாடுகள் அவருக்கு விரோதமாக செயல் பட தூண்டியது. 

என்ன நடக்கப் போகிறது?.

1.மக்கள் ஜனநாயகத்திற்காக போராட எல்லா உரிமை உண்டு.மத்திய கிழக்கில் அது கானல் நீராக இருப்பதால் போராட்டம் வெடிப்பதற்கு எப்போதும் வாய்ப்பு இருக்கிறது.

2.மத்திய கிழக்கில் எண்ணெய் வளம் தொல்லை ஆகிவிட்டது.வளத்தை சுரண்டுவதற்காக தங்களுக்கு ஆதரவான ஆட்சியாளர்களையே பதவியில் அமர்த்த‌ அமரிக்க ,மேற்கத்திய நாடுகள் விரும்புகின்றன.. 

3.கடாஃபி மேற்கத்திய நாடுகளின் தாக்குதலை இஸ்லாமின் மீது கிறித்தவர்களின் தாக்குதல்,சிலுவை போர் என்று கூறி மத்திய கிழக்கில் உள்ள அரசுகள்,மக்களின் ஆதரவை பெறும் முயற்சி பலளிக்காது என்றே தோன்றுகின்றது

4.அமெரிக்கா மேற்கத்திய நாடுகள் சவுதி உட்ட்பட்ட அரபு நாடுகளில் ஆதரவான ஆட்சிகளின் மக்கள் விரோதப்போக்குகளை கண்டு கொள்ளாமல் ஆதரவு அளித்து வருவதால்,அவையும் இந்த ப்பிரச்சினையில் மேற்கத்திய ஆதரவு போக்கையே எடுக்கும்.கொஞ்ச நாட்களுக்கு முன் கடாஃபி ஆட்சியை தூக்கி எறியுமாறு ஒரு சவுதி முல்லா ஃபத்வா கொடுத்தததை அறிந்திறிப்பீர்கள்,இல்லையென்றால் இந்த சுட்டியை பார்க்கவும்.


5.லிபியாவின் சதாம் ஹுசைன் கடாஃபி ஆவாரா இல்லையா என்பது சில நாட்களில் தெரியும்.கடாஃபிக்குப் பின் ஜனநாயகம் என்ற போர்வையில் தங்களுக்கு ஆதரவான ஆட்சியாளரை பதவியில் அமர்த்தி வளங்களை சுரண்ட வேண்டியதுதான்.

பின் குறிப்பு

வெனிஜுவேலாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது.அதிபர் ஹுயுகோ அமெரிக்க எதிர்ப்பு ,பொது உடமைவாதி.ஏன் அமெரிக்கா மத்திய கிழக்கில் ஆட்சி மாற்ற‌த்தை எளிதில் ஏற்படுத்துவது போல் முடியவில்லை என்பதை உங்கள்சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.




ஓமர் முக்தார் போராடியதற்கு அர்த்தமில்லாமல் செய்த கடாஃபி போன பிறகாவது லிபியர்கள் ஒன்றுபட்டு தங்கள் நாட்டை ஆதிக்க சக்திகளில் இருந்து மீட்டு ஜனநாயக பாதைக்கு திரும்ப வேன்டும்.

ஒமர் முக்தார் படம் பார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள்(தமிழ்)
பகுதி1


பகுதி 2



பகுதி 3

4 comments:

  1. //வெனிஜுவேலாவிலும் எண்ணெய் வளம் இருக்கிறது.அதிபர் ஹுயுகோ அமெரிக்க எதிர்ப்பு ,பொது உடமைவாதி.ஏன் அமெரிக்கா மத்திய கிழக்கில் ஆட்சி மாற்ற‌த்தை எளிதில் ஏற்படுத்துவது போல் முடியவில்லை என்பதை உங்கள்சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்.//

    சிந்திக்க வேண்டிய கேள்வி! சிறந்த பதிவை தந்ததற்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நண்பர் சுவன பிரியன்,
    நம்முடைய வருத்தமெல்லாம் இந்த இயற்கை வளங்கள் நிறைந்த மத்திய கிழக்கு,ஆப்பிரிக்க நாடுகள் உள் நாட்டு பிரச்சினைகளை சுமுகமாக தீர்க்காமல், ஆதிக்க சக்திகளுக்கு இடம் கொடுப்பதே.ஒவ்வொரு நாட்டிலுமே சில அதிகாரப் பகர்வல் சிக்கல்,சிறுபான்மை,பெரும்பானமை பிரச்சினைகள் உண்டு.அதனை விவாதித்து பேசி தீர்த்து விட்டால் ஆதிக்க சக்திகளுக்கு இடமில்லாமல் போய்விடும்.இந்த நடுகளில் தேவையான சில அரசியலமைப்பு சட்ட மாற்றங்களே.எகிப்தில் தோழர்கள் ஆரம்பித்து விட்டாகள்.

    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete
  3. இது குறித்து யாராவது எழுதுவார்களா என்று காத்திருந்தேன். நன்றி. நிறைய படிக்க நிறைய தலைப்புகள் இங்கே இருக்கிறது. மீண்டும் வருகின்றேன்.

    ReplyDelete
  4. வணக்கம் தோழர் ஜோதிஜி,
    வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி

    ReplyDelete