Showing posts with label இறை மறுப்பு. Show all posts
Showing posts with label இறை மறுப்பு. Show all posts

Wednesday, June 8, 2011

மதத்தில் அறிவியல் எப்படி யார் கொண்டு வருகிறார்கள்?.



"மரம் சும்மா இருந்தாலும் காற்று அதனை விடுவதில்லை".

மத புத்தக்த்தில் அறிவியல் என்று சொல்லும் பல விஷயங்கள் தவறு என்று நம்முடைய பதிவுகளில் சுட்டி காட்டி இருக்கிறோம்.இப்பதிவில் இந்த கருத்தாக்கம் எப்படி ,யாரால் பிரச்சாரம் செய்யப் படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

மதம் என்பது நம்பிக்கை என்னும் விஷயத்தை மட்டுமே ஆதாரமாக் கொண்ட விஷயம். அனைத்து மதங்களும் உருவாகும் போது இருக்கும் கொள்கையாக்கம் நாளடைவில பரிணாம வளர்ச்சி பெற்றே முழுமை பெறுகின்றது. எந்த மதமும் அது சொல்லும் அனைத்து விஷயங்களும் உண்மை என்று நிரூபிக்க முடியாது. இதில் சில் இஸ்லாமிய நண்பர்கள் மத பதிவுகள் எழுதுவதும்,மத புத்தக்த்தில் அனித்து பிரச்சினைகளுக்கும் தீர்வு உண்டு என‌ சொல்வதும் அனைவரும் அறிந்ததே. அந்த பதிவுகளின் மீதான விமர்சன‌ம் எழுதும் போது நேருக்கு நேர் விவாதம் வருகிறாயா எங்கள "அஆஇஈ" உடன் விவாதம் செய்ய தயாரா என்பதும் வழக்கமான நகைசுவை செய்திகளே என்றாலும் .இன்னும் சில மத வி(அ)ஞ்ஞானிகளின் பெயர் கிடைத்ததால் நமக்கு மிக்க மகிழ்ச்சி.ஒரு விவாதத்தில் கடவுள்,மத புத்தகத்தை புரிய வைப்பது என்றால் இவர்களை கல்லூரி பேராசிரியர்கள் ஆக்கினால் நாடு எங்கோ போய்விடும்.

இந்த மத வி(அ)ஞ்ஞானிகள் என்றதுமே இவர்களுக்கு மதங்கள் பற்றி கருத்து கூற வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி வருவது இயல்பாக‌. இருந்தாலும் அனைத்து இஸ்லாமிய நாடுகளும் அறிவியலில் பின் தங்கி இருப்பதும் ஒரு நகை முரணே.இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருமே ஏதோ ஒரு மத்திய கிழக்கில் நாடுகளீல் நடைபெறும் ஒரு குரானிய அறிவியல் கருத்தரங்கிலேயே இவ்விஷயங்களை பேசியுள்ளார்கள்.இத்னை ஒலி,ஒளி பதிவு செய்து யு ட்யூப் முதலான தளங்களில் இட்டு பிரச்சாரம் செய்கின்றார்.அந்த காணொளிகளை இட்டவர்கள் இது எங்கே ,எப்போது எதற்காக சொல்லப் பட்டது போன்ற எந்த விவரங்களையும் சொல்ல மாட்டார்கள்.. இந்த குரானிய அறிவியல் கருத்தரங்குகளை நடத்துபவர்கள் யார்?.அப்படி நடத்தும் ஒரு அமைப்பை பற்றி தெரிந்து கொள்வோம்.

குரான் மற்றும் சுன்னாவில அறிவியல் குறியீடுகள் அமைப்பு[he International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) ] 1984ல் சவுதி அரேபியாவில் ஷேக் அப்துல் மஜீத் அல் ஜிந்தனி என்னும் யேமன் நாட்டை சேர்ந்தவரால் உலக முஸ்லிம் கூட்டமைப்பு உதவியுடன் ஆரம்பிக்கப் பட்டது.குரான் மற்றும் சுன்னவில் அறியல் குறியீடுகளை கண்டறிந்து சொல்லும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடுவதே இத‌ன் நோக்கமாகும். இவர் யமன் நாட்டு இஸ்லாமிய சகோதர்த்துவ கட்சியின் த்லைவர்,யேமனின் அல் இமான் மத பல்கலைகழகத்தின் ஸ்தாபகர்.அமெரிக்க அரசால அமெரிக்கா வராமல் தடுக்கப் பட்ட‌ ஒரு முக்கியஸ்தர். எய்ட்ஸ்க்கு மருந்து கண்டு பிடித்தாகவும் இவர் கூறியுள்ளர்.அது எங்கிருந்து என்று தகவல் இல்லை.இவர் பற்றிய விக்கிபிடியாவில அண்ணன் பற்றி பல குறிப்பிடத் தக்க விஷயங்கள் உண்டு.(Intersting person!!!!!!!!!!!!!).

இந்த கருத்தாக்க்ங்களின் பிதாகமர் மௌரிஸ் புகைல் என்றால் மிகையாகாது .இதுவரை இம்மாதிரி 8 ஆய்வரங்குகளை நட்த்தியுள்ளார்கள்.
1)1987 இஸ்லாமாபாத்
..
..
7) 2007 துபாய்
8) குவைத் (இதில் எய்ட்ஸ்க்கு மருந்து சுன்னாவில் கூறப்பட்டு உள்ளதாக கூறுகிறார்கள்.
இந்த கருத்தரங்குக‌ளின் சாராம்சத்தை ஒரு என்சைக்ளோப்பிடியா ஆக்குவ்தற்கான முயற்சிகள் அதிக பொருள் செலவில் முன்னெடுக்கப் படுகின்றது.  
அது குறித்த செய்தி இது.
______________
Online Project Spotlights Science in Qur’an, Sunnah
K.S. Ramkumar, Arab News

JEDDAH, 9 May 2006 — The International Commission on Scientific Signs in the Qur’an and Sunnah (ICSSQS) signed an agreement with the Harf, a leading IT company, Sunday night to produce an online scientific encyclopedia based on Islamic holy books.

Abdullah ibn Abdul Aziz Al-Musleh, secretary-general of the ICSSQS, told a press conference after the signing ceremony that the encyclopedia, which will contain all the scientific information referred to in the Qur’an and the Sunnah (Traditions of the Prophet, peace be upon him), aims to serve as a comprehensive reference work fulfilling the increasing demand from researchers the world over for documented information on the scientific information contained in the Qur’an and Sunnah.

“When completed the encyclopedia will be the greatest reference work on Islam from the angle of modern science,” Al-Musleh said. The encyclopedia will be distributed on CD and a website will be available both in English and Arabic.

The encyclopedia containing 8,000 pages apart from pictures and video clips will cover all the Qur’anic verses referring to scientific facts with their explanations. A team of scientists and experts in the religious studies are working on the project.

The SR2.1-million agreement stipulates that the IT company prepare 50,000 CDs of the encyclopedia and a website linked to the commission’s site www.nooran.com in addition to a print edition in 14 volumes.

The new project is part of the commission’s bid to present the shining picture of Islam to the world at large as a religion that promotes scientific research leading to contemplation about the signs of God. It also aims at familiarizing the amazing ocean of information that the Quran and Sunnah contain.

Kuwait’s Ministry of Endowments and Islamic Affairs has sponsored the project.
______________
இந்த அமைப்பின் இணைய தளம்

 இந்த கருத்தரங்கில் கட்டுரையிட்டு உரையாற்ற கீழ்க்கண்ட விதிகள் பின்பற்றப் படவேண்டும்.

1.தோராய கருத்தில்(hypothesis) இருந்து கோட்பாடாக்கப் பட்டு மிக சரியாக நிரூபிக்கப் பட்ட அறிவியல் உண்மைகள்(facts) மட்டுமே ஏற்றுக் கொள்ளப் படும்.இந்த அறிவியல் உண்மைகள் தவறென்றோ,மறுதலாகவோ ஆக்கப் படாதவையாக இருக்க வேண்டும்.(சிரிப்பு வந்தால் நான் பொறுப்பல்ல,எல்லா புகழும் இந்த விதிகளை வடிவமைத்தவருக்கே)

2.இந்த அறிவியல் உண்மை குரானிலோ அல்லது அனுமதிக்கப் பட்ட தூதர் மொழிகளில் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது என்று சான்றளிக்கப்படவேண்டும். 

3.. மேற்கூறிய இரண்டு விவரங்களுக்கும் எளிய முறையில் தொடர்பு ஏற்படுத்த வேண்டும்.

4. குரான் ,ஹதித் விளக்கமானது அராபியர்களின் பயன்பாட்டில் உள்ளபடி இருக்க வேண்டும்.ஏனெனில் அராபியர்களின் மொழியிலேயே குரான் இறங்கியது.

5.மறை பொருளாக இருந்து இறைவனுக்கு மட்டுமே தெரிந்த விஷயங்களை கூற வேண்டாம்.(குரானில் மறை பொருள் எனில் விளங்க இயலாத வசன‌ங்கள்).

6.குரான் வசனம் பிற குரான் வசனங்களாலோ,நபி மொழிகளாலோ விளக்கி அரபி மூல வார்த்தைகளின் அர்த்தம் காணப்பட வேண்டும்.

இந்த ஆய்வரங்குகளில் கட்டுரை இட வேண்டுமெனில் குரான்,ஹதிது,அரபி புல்மை அவசியம் என்பது புரிகிறது. இந்த வி(அ)ஞ்ஞானிகள் அனைவருக்கும் இவை இருக்குமா?

இப்படித்தான் குரானில் அறிவியல் என்றா கருத்தாக்கம் வளர்த்த்டுக்கப் பட்டு உலக்மெங்கும் பிரச்சாரம் செய்யப் படுகின்றது.அறிவியலால் மதத்தை தாங்கி பிடிப்பதென்றால் அறிவியல் மதத்தை விட பெரியதென்று ஒத்துக் கொள்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.அரபி பிரச்சாரகர்கள் கூட இந்த மத புத்தக்த்தில் அறிவியல் என்னும் விஷயத்தை மிகவும் ஜாக்கிரதையாக கையாளுவதை (மேற்கூறிய விதிகள்) பாருங்கள்.). ஆனால் நம்மவர்களோ அனைத்தும் தெரிந்து புரிந்தவர்கள் போல் உதார் விடுவது நகைச்சுவையே.இந்த மத அறிவியல் அமைப்பு மேற்கத்திய நாடுகளை சேர்ந்த , நிறைய படித்த,நல்ல பதவியில் இருக்கும் பிரபலமான் ,பல்கலை கழக ஆசிரியர்கள் போன்றவர்களையே தேர்ந்தெடுத்து இவ்வாறு கட்டுரை வாங்குவதும் ஒரு ஆச்சரியமான் விஷயம்தான்.

இந்த இணைய தளத்தில் இம்மாதிரி ஆட்கள் அனைவரையும் வைத்து பிரச்சாரம் செய்வதை பாருங்கள்.இது ஒரு மத பிரச்சார உத்தி மட்டுமே.
______________


இதற்கு செலவு செய்யும் பொருளில் பின் தங்கிய நாடுகளில் கல்வி,சுகாதாரம் போன்ற விஷயங்களுக்கு செலவிட்டால் நலம் பயக்குமே. 

மதவாதத்தால் மட்டும்தான் போர்கள்,வன்முறை வெடிக்கிறதா கம்யுனிஸ்டுகள் போன்ற நாத்திகர்கள் கூட பல போர்கள்,கொலைகள் புரிந்துள்ளனரே என்று கேட்கும் மத பிடிப்புள்ள நண்பர்களே.கம்யூனிசம் என்பது மனிதனால் உருவாக்கப் பட்ட ஒரு வாழ்வு,அரசமைப்பு முறை,அது தவறென்றால் மாற்றப் படும்,தூக்கி எறியப் படும்.இப்போது நடைமுறையில் கம்யுனிசத்தின் தாக்கம் என்ன? Almost Nil!!!!!!!!!!!!!


ஆனால் மதத்தின் எந்த தவறுமே நியாயப் படுத்தப் படும்.இப்போதைய உலகில் மூன்றாம் உலகப் போர் என்பது மத அடிப்படையில் அமையலாம் என்று பல அனுமானங்கள் கூறுகின்றன. என் மதமே சரியானது , பிற மதங்கள் அனைத்தும் தவறு என்பது நிச்சயமாக மனித நேயத்தை வளர்க்காது.மத ரீதியான சட்டங்களும்,பிற‌ மதத்தினரை கட்டுப் படுத்தி ஆள்வதுமே பல பிரசினைகளின் சிக்கல்கள். மத ரீதியான உணர்வுகள் கட்டுக்குள் இருக்க அதன் எல்லைகளை புரிந்து கொள்ளுதல் அவசியம். மத நம்பிக்கைக்கு எல்லை உண்டு.நம்ப முடியும் ஆனால் விளக்க முடியாது.

மதம் பிடித்தால் பின்பற்றுங்கள்,மத ரீதியான நடைமுறைகளில் காலத்திற்கேற்றபடி மாறுதல்கள் கொண்டு வருவது அந்த சமுதாயத்திற்கு நல்லது.பல எடுத்துக் காட்டுகள் தர இயலும்.வேண்டுமென்றே தவிர்க்கிறேன்.மதத்தில் அறிவியல் என்பது வார்த்தை விளையாட்டு மட்டுமே.மதத்தின் பயன்பாட்டில் ,மனிதம் வளருங்கள் மதம் தானாய் வளரும். 

<Western Scientists Comment on their alleged Support for Scientific Miracles in Koran

Friday, May 20, 2011

ஜாதக கணிப்புகள் உண்மையாகும் வாய்ப்பு என்ன?



ஒரு பிரபலமான மனிதரின் ஜாதகத்தை கணிக்கிறேன் என்று பலர் வதந்திகளை பரப்புவதால் நம்க்கு இது குறித்து ஆய்வு செய்யலாம் என்ற எண்னம் ஏற்பட்டு, சோதிடம் பற்றி தெரிந்து கொள்ள்வும் அதனை உங்களோடு பகிரவுமே இப்பதிவில் முயற்சிக்கிறேன்.ஜாதகத்தில் என்க்கு நம்பிக்கை இல்லை.ஆனால் பலர் நம்புகிறார்கள்.பலர் தங்களின் உண்மையான ஜாதகத்தை வெளியே காட்ட மாட்டார்கள்.அவ்வளவு பயம்!!!!!!!!!!!!!!!.. 

நமது நாட்டிலும் சரி,பல நாடுகளிலும் சரி நம்முடைய எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை பலருக்கு உண்டு.இந்த எதிர்காலத்தை அறியும் பல முறைகள் இருப்பதாக நம்பப் படுகின்றது. ஒருவர் பிறந்த நேரம் ,தேதி ,கைரேகை,கால் ரேகை,பெயர், உடலமைப்பு போன்றவற்றை வைத்து ஒருவரிடைய குணாதிசயங்கள்,எதிர்காலம் முதலியற்றை கணிக்கும் முறை வழக்கத்தில் உண்டு.இதில் இந்த ஜாதகம் ,கைரேகை என்பவை மிக பிரபல்மான முறைகள் ஆகும்.இப்பதிவில் ஜாதகம் என்பதை பற்றி மட்டும் பார்ப்போம்..எதை ஆராய்ச்சி செய்தாலும் அந்த முறை வரலாற்று ரீதியாக எப்போது,எவ்வாறு பயன் பாட்டில் உள்ளது,அதன் ஆதார மூலங்கள் என்ன என்பதை பார்ப்பது நல்லது.பொதுவாக இறை நம்பிக்கை உள்ளவர்களே  இம்மாதிரி செயல்களை நம்புவதால் இக்கலை இறைவனால் அவன் அடியார்களுக்கு வழங்கியதாகவும்,அதனை அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாய்மொழியாக பாதுகாத்து ,போதித்தி,பயன் படுத்து வந்ததாகவும் அவ்ற்றில் சில நூல்கள் வடிவிலும் உள்ளது என்று கூறுவது வழக்கம்.நம் முந்தைய பதிவுகளை படித்த நண்பர்களுக்கு வேறு விஷயங்கள் ஞாபகம் வந்தால் அவ்ர்களை பாராட்டுகிறேன். 

மனித மனம் மிகவும் விந்தையானது.தனக்கு சரி என்று தோன்றும் சூழ்நிலை,சிந்தனை,செயலிலேயே நிலைத்திருக்க முயல்கிறது.பிறந்த சமூக பொருளாதார‌ சூழ்நிலை, வளர்ப்பு அனுபவங்களே ஒருவருடைய நம்பிக்கைகளை தீர்மானிக்கிறது.எதிர்காலத்தை கணிப்பது என்பது உலகில் உள்ள அனைவருக்கும் பொருந்துமா என்று யோசித்தாலேயே இதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு முடிவுக்கு வந்து விடலாம்.  

இன்னும் ப்ல மனித சமுதாயங்கள் ஆதிவாசிகளாகவே வாழ்கின்றனர்.அவர்கள் குடும்ப அமைப்பு கூட வித்தியாசமாக் இருக்கிறது.இனக்குழுக்களாக வாழும் அவர்கள் கிடைக்கும் பொருள்களை பகிர்ந்து வாழ்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால் அவர்களின் வாழ்வு ஒரே மாதிரியாக இருக்கும்.ஒருவரின் பிறப்போ இறப்போ கூட விளைவுகளை ஏற்படுத்தாது.தனிப்பட்ட ,தனிக்குடும்ப அமைப்பு இல்லாத சமுகத்தில் இந்த சோதிடத்திற்கு வாய்ப்பு இல்லை.விலங்குகளுக்கும் சோதிடம் பொருந்தாது. மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்த விலங்கு என்றால் அவ்னுக்கு பொருந்துமா என்பதை உங்களின் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.சோதிடம் உண்மையாக வேண்டுமென்றால் கடவுள் உலகத்தை படைத்தார் என்பது உண்மையானால் மட்டுமே வாயப்பு உள்ளது.ஆக சோதிடம் பரிணாம கொள்கைக்கு எதிரானது.சோதிடம் என்பது என்ன ?அது எவ்வாறு கணிக்கப்படுகின்றது? அது உண்மையாகும் வாய்ப்பு எவ்வளவு? என்பதை இப்பதிவுகளில் பார்ப்போம்.(இந்திய சோதிடம் என்பது கிரேக்கத்தில் இருந்தே வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.அலெக்சாண்டரின் படையெடுப்பும்,பல கிரேக்கர்கள் இங்கேயே தங்கி விட்டதும் இக்கலையை இங்கு பரப்பியிருக்க வேண்டும்.யவனஜாடகா(சாண்டில்யன் யவன ராணி ஞாபகம் வருகிறதா?) என்னும்( பொ.மு 200 ல்) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் இந்திய சோத்டத்தில் மிக பழமையானதாகும். கிரகங்கள் ஆண் பெண் என்று பிரிப்பது கூட கிரேகக புராண் கதைகளை அடிப்படையாக கொண்டதாகும்.(.தென்)இந்திய சோதிடம் அல்லது வேத ஜாதக முறை என்பது வராக மிகிரார்(பொ.ஆ 505_587)  எழுதிய ப்ரஹா சம்ஹிதா என்னும் சம்ஸ்கிருத நூலை ஆதாரமாக கொண்டது.அதற்கு முன் எகிப்து,மெசபடோமிய ,கிரேக்க நாகரிகங்களிலும் சோதிடம் இருந்தமைக்கு ஆதாரங்கள் உண்டு.

சோதிடம் உண்மையாக வேண்டுமெனில் இவையும் நிரூபிகப்படவேண்டும்.

1.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன்,பரிணாமக் கொள்கை தவறு.

2.கிரேக்க,இந்திய புராணக் கதைகள் அனைத்தும் வரலாறு ஆகும்.

3. இந்த சோதிட நூல்களில் சொல்லப்படும் வானவியலே சரியானது.

4.இது நாகரிகமடையாத ஆதிவாசி இனக்குழுக்களுக்கு பொருந்தாது. 


கிரகங்களின் நகர்வுகள் ஒவ்வொரு மனிதர்களையும் கட்டுப்படுத்துகிறது என்னும் போது மனிதனுக்கு சுய சிந்தனை(self will) செயலாற்றல் உண்டா என்னும் கேள்வியும் வருகின்றது.பொதுவாக சோதிடம் என்பதும், கடவுள் ஏற்கெனவெ எல்லாவற்ரையும் தீர்மானித்து விட்டார் அதன்படி மட்டுமே நம்மால் நடக்க முடியும் என்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியவில்லை..சோதிடத்தில் கடவுள்(கள்)ன் இருப்பு அவசியமா என்பதும் சிந்திக்கப் பட வேண்டிய விஷயமே.


இந்த காணொளிகள் வேத சோதிடத்தை பற்றி ஒரு நடுநிலையான ,விளக்கமான் குறிப்புகளை தருகின்றன. இதனை பார்த்தால் சோதிடத்தின் மீதுள்ள‌ நம்பிக்கை ஒழியாது போனாலும் அதன் எல்லைகளை உணர முடியும்.பொழுது போகவில்லை என்றால் சும்மா பாருங்கள். சோதிடத்தில் நம்பிக்கை இருப்பவர்கள் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.கற்றுக் கொண்ட பின் பலருக்கு கணித்து பிற கணிப்புகளோடு ஒப்பிட்டு பாருங்கள். சோதிடத்தை மட்டும் வைத்து எதையும் முடிவு செய்யாதீர்கள் என்பதே என் வேண்டுகோள். 
http://mathinamaideen.webs.com/




Is Your Destiny in the Stars Horoscope Astrology

Friday, May 13, 2011

கடல் நீர் எரிபொருள் ஆகுமா? கடல் தீப்பற்றி எரியுமா?












எரிபொருள் என்பது நவீன உலகில் மிக அதிகமாக தேவைப்படும்,பயன் படுத்தப்படும் ஒன்றாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டது.எண்ணெய் என்பதே முக்கியமான் எரிபொருள் ஆக இருப்பதால் ,இவ்வளம் பொருந்திய நாடுகள் சார்ந்த அரசியல் உலகில் முக்கிய இடம் வகிக்கிறது.உலகின் எண்ணெய் இருப்பு சுமார் 1.2 ட்ரில்லியன் பேரல் ஆகும்.தினமும் சுமார் 80_90 மில்லியன் பேரல் எண்ணெய் எடுக்கப்படுகிறது.இந்த எண்ணெய் வளம் 40_50 வருடம் மட்டுமே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அது எப்படி எனில் சின்ன கணக்குதான்!!!

1.2*1000*1000/(80*365)=41 வருடம்==15000 நாட்கள்

இச்சூழ்நிலையில் ஒரு தமிழ் பதிவு படிக்க நேர்ந்தது. அதில் கடல் நீரை எரிபொருளாக மாற்றும் முறையை ஒரு பொறியாளர் கண்டுபிடித்தார் என்றும், வழக்கம் போல் இது அன்றே எங்கள் மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்ற பல்லவி பாடப்ப்ட்டும் இருந்தது..
அந்த பொறியாளர் பற்றியும்,அந்த முறை பற்றி இப்பதிவில் பார்ப்போம்.
திரு ஜான் கான்ஞியஸ்( அமெரிக்கவில் உள்ள ஃப்ளோரிடா மநிலத்தை சேர்ந்தவர்.மார்ச் 1,1944ல் பிறந்த்வர்.மிண்ணனுவிய்ல் பொறியாளரான இவர்  மின் காந்த அலைகள் மூலம் கேன்சரை குணப்படுத்தும் முறை ஒன்றை கண்டு பிடித்ததாக கூறப்படுகின்றது. கேன்சர் என்றால் கட்டுப்பாடற்ற‌,தேவையற்ற உடல் செல் வளர்ச்சி[uncontrolled growth of abnormal cells] என்று வரையறுக்கலாம்.இவர் வடிவமைத்த கருவி மூலம் மி.கா அலைகளை உருவாக்கி அதனை கேன்சர் உள்ள உடல் பகுதியின் மீது செலுத்தும் போது அச்செல்கள் இறந்து விடும் என்பது இவருடைய கண்டு பிடிப்பு.இதற்கு காப்புரிமை பெற்றுள்ளார்.இதன் பயன் பாடுகள் குறித்து விவாதிக்காமல் இந்த கருவியின் இன்னொரு பயன்பாடான கடல் நீரை எரிபொருள் ஆக மாற்றும் முறை பற்றியே விவாதிப்போம்..
இக்காணொளி பாருங்கள்!!!!



இந்த மின் காந்த அலைகலை கடல்நீரின் மீது செலுத்தினால் அது எரிபொருள் ஆகிறது என்பதே இவரின் கண்டுபிடிப்பு.உண்மையில் இவருடைய கண்டுபிடிப்பு உப்பு நீர் எரிபொருளாக் மாறுவதை கூறுகின்றது ,அத்னை  ஊடகங்கள் கடல் நீர் என்று கொஞ்சம் மிகைப்படுத்தி சொல்லிவிட்டன.இதுவும் சரிதான் என்பதால் கடல் நீர் மட்டுமல்ல உப்பு நீரும் எரிபொருளாக மாற்ற முடியும் என்பதே திரு கான்ஞியஸின் கண்டுபிடிப்பு ஆகும்.


அது எப்படி மின் காந்த அலைகளை உப்புநீரில் செலுத்தினால் எரிபொருள் ஆகும் என்று கேட்கிறீர்கள்.நல்லது. அறீவியலில்(மின் வேதியியல்) மின் பகுப்பு என்று ஒரு செயல் பற்றி படித்ததை நினைவு கூறுவோம். நீரில் இரு மின் முனைகள்(Electrodes) இட்டு அதில் முறையே நேர்,எதிர் மின்னூட்டங்க்களை செலுத்தினால் நீரானது ஹைட்ரஜன்,ஆக்ஸிஜன் ஆக பிரியும் என்பதுதான் மின் பகுப்பு எனப்படுகிறது. இது நீருக்கு மட்டுமல்ல எந்த ஒரு கரைசலுக்கும் பயன்படுத்த முடியும் என்றாலும் அது இப்பதிவிற்கு தேவையற்றது என்பதால் நீரை மின் பகுப்பு செய்தால் கிரடைக்கும் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் ஆகும் என்பதையே விவாதிப்போம்..
இந்த மின் பகுப்பின் எதிர்வினைஃபுயல் செல்(Fuel cell) என்படும் மின் வேதி மாற்றம் ஆகும்.அதாவது ஹைட்ரஜனையும்,ஆக்ஸிஜையும் சரியான விகிதத்தில் கல்ந்து ,சில வினைகளுக்கு உட்படுத்தினால் மின்சாரமும்,(தூய்மையான்) நீரும் கிடைக்கும்.ஆஆக்வேதான் ஹைரட்ரஜன் தயாரிக்க அறிவியலாளர்கள் அரும்பாடு படுகிறார்கள்.ஆகவே கடல் நீரில் இருந்து ஹைட்ரஜன்(எரிபொருள்) என்பது ஒரு கல் இரு மாங்காய் (மின்சாரம்+குடி நீர்).
இப்போது மின்பகுப்பு மூலம் கடல்நீரை பிரித்து ஹைடரஜன் தயாரித்தால் போகிறது என்று சொல்கிறீர்களா? அப்புறம் ஒரு கல் இரண்டு மாங்காய் எளிதில் அடிக்கலாம் என்றா?.
Life is not that much simple!!!!!!!!!
 10 யூனிட் மின்சாரம் செலவு செய்து மிபகுப்பினால் ‘X’ அளவு ஹைட்ரஜன் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.அந்த “X” அளவு ஹைட்ரஜனை கொண்டு ஃப்யல் செல் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பொது 10 யூனிட்டை விட அதிகமாக மின்சாரமும், அந்த உபரி அளவு இந்த முறைக்கான செலவை எவ்வளவு வருடங்களில் ஈட்டும் என்பதே பிரச்சினை.
இதுவரைக்கும் திருப்தியான முடிவு எட்டப்படவில்லை என்பதே உண்மை.ஆகவே ஹைட்ரஜனை மின் பகுப்பு அல்லாமல் வேறு முறைகளில் குறைந்த செலவில் தயாரிக்க ஆய்வுகள் உலகெங்கும் நடை பெறுகிறது.
இப்போது திரு கான்ஞியஸ் கூறுவது என்ன?


உப்பு நீரில் மின்காந்த அலைகளை செலுத்தினால் எரிபொருள் உண்டாகும் (மைக்ரோ வேவ் ஓவன் மாதிரியா!!!) என்று.அவர் அவருடைய முறையை சரியாக விளக்கவில்லை.எரிபொருள் என்பது ஹைட்ரஜன் மட்டுமே வாய்ப்பு உண்டு.நேரடியாக மின்சரம்(மின் பகுப்பு) இல்லாமல் மின்காந்த அலைகளாக மாற்றி உப்பு நீரில் செலுத்தும் போதும் ஹைட்ரஜனாக மாறலாம்,அது எரியவும் செய்யலாம்.ஹைட்ரஜன் இலேசாக இருப்பதால் அவர் பயன் படுத்திய சோத்னைக் குழாயின் மேல் பகுதிக்கு வந்து எரிவது நம்ம எரிவாயு அடுப்பு மாதிரிதான்.
இங்கும் அவருடைய கருவிக்கு பயன் படுத்தப்படும் மின்சாரத்தின் அள்வுக்கும்,ஹைட்ரஜன் தயாரிப்புக்கும் என்ன விகிதமோ,அது சாதாரண மின்பகுப்பு முறையை விட அதிகமாக இருந்தால் மட்டுமே பலன்.
முடிவுரை
1.நிச்சயமாக இலாபகரமாக்(efficient) இருக்காது என்று ஒரு மின்னியல் பொறியாளனாக என்னால் கூற முடியும்.எப்படி என்று விவாதிக்கும் நண்பர்களுக்கு கூறுகிறேன்.
2. இதன் மூலம் பெரிய அளவில் ஹைட்ரஜன் தயாரிக்க முடியாது.மின் காந்த அலைகளின்மின் சக்தி எவ்வளவு என்று யோசித்தால் உங்களுக்கு இது புரிந்து விடும்.
3.ஆகவே இது கொஞ்சம் சோத்னை குழாயில்(சரி போனால் போகுது ஒரு பெரிய பீப்பாய்) நீரை எடுத்து ஹைட்ரஜனாக மாற்றி எரித்து விளையாட்டு காட்ட முடியுமே தவிர பெரிய அளவில கடலையே மின் காந்த அலைகளால் பகுத்து எரிபொருளாக மாறி எரிய வைக்க முடியுமா என்று யோசித்து கொள்ளுங்கள்.இந்த செயல்ஒரு மூடப்பட்ட கொள்கலனில் மட்டுமே நடத்த முடியும் திறந்த கடல் பரப்பின் மீது மி.கா அலைகளை செலுத்தி ஹைட்ரஜன் உருவாக்க‌ முடியுமா என்றுகான்ஞியஸ் கூறவேயில்லை.இது மிகைபடுத்தப்பட்ட மத வி(அ)ஞ்ஞான கற்பனை.ஏன் இப்படி அபசகுனமாய் பேசுகிறீர்கள் ஒரு விஞ்ஞான கண்டுபிடிப்பையே மறுக்கிறீர்களே என்கிறீர்களா.!!!!.


இந்த செய்தியை பாருங்கள்.கான்ஞியஸ் அவர் கண்டுபிடிப்பை பற்றி என்ன கூறுகிறார்?


http://www.waterfuelcarengine.com/john-kanzius.html



Water Fuel Related Discovery:
Kanzius, later that year, stated that the same RF transmitter has the ability to actually make salt water catch fire. This revelation took place accidentally while he was trying to know if these radio waves can be used to desalinize water. He said that they were experimenting for something that might desalinize saltwater rather than an energy source, and the more they try, the saltwater gets hotter until it caught fire. At that point, this method can't be used as an energy source because it used more energy to generate the waves than the energy of the burning gas.
He didn't say that his finding would replace oil as an energy source and only described it as “interesting“. The tell tails of his process are still not published until it's patented. He explains that the energy from radio waves absorbed by the water weakens the convalent bond between oxygen and hydrogen to an extent that pairs of both hydrogen and oxygen are created, producing dihydrogen and dioxygen molecules. These newly formed molecules are also affected by the energy of the radio waves which causes them to get in a relatively close proximity in a process called reunification causing them to react together forming water molecules once again and releacing energy in the form of a flame. In other words, this process simply converts radio energy to heat and light form.

Rustum Roy, a materials scientist at Pennsylvania State University confirmed Kanzius experiment in front of the Material Science faculty using the same RF transceiver which he took from Kanzuis lab to be returned the next day. He also stated on his website that Mr. Kanzius was able to show the possibility of producing hydrogen and oxygen from saltwater with the same salt concentration of normal sea water.
He also said that the saltwater itself isn't burning as one might think. The fact is, the RF waves weakens the bonds of saltwater molecules releasing hydrogen in the process, and that what's catches fire and it will keep burning as long as the saltwater sample is exposed to these radio waves with flames varying in colors and temperature, depending on the solutions and concentration.
Philip Ball, the author of "H2O: A Biography of Water" and a consulting editor at Nature, disapproved the idea of water being used as a fuel. Even though he said that kanzius' revelation needs verification through further experiments, he is sure that water can't be a fuel and doesn't burn, and added that it's impossible to harness energy by burning hydrogen extracted from water and based his words on the laws of thermodynamics, as it would be the foundation of a never-ending cycle of motion. He also referred to the lack of information in the media when reporting about unreal science.

இக்கட சூடண்டி!!!!!!!!!!!!!!

அ) இம்முறைக்கு இதுவரை காப்புரிமை கிட்டவில்லை..

ஆ) இனியும் கிட்டாது..மதிப்பிற்குறிய‌ கான்ஞியஸ் கடந்த பிரவரி 18/2009 அன்றே இறந்துவிட்டார்.அவருடையஆய்வுகூட இணைய தளத்தில் இம்முறை பற்றி இப்போது எந்த செய்தியும் இல்லை.

மதவாதிகள் இவர் இறந்த விஷயம் கூட சொல்லாமல் கண்டுபிடிப்பின் மிகைப் ப‌டுத்தப்பட்ட செயலை ஏற்கெனவே மத புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

சரி இவர்களுக்கு உதவியாக ஏதோ செய்துவிட்டு போன அண்ணன் கான்ஞியஸ் க்காக ஒரு பிரார்த்தனை செய்தார்களா? செய்யவில்லை என்றால்  அவர்கள் மத புத்தகத்தின் பெருமை கூற உதவிய அண்ணன் கான்ஞியஸை நினைவு கூற வலியுறுத்துகிறோம்.

Saturday, May 7, 2011

(ஆ)சாமி நித்யானந்தாவின் சமாளிப்புகள்.





இந்த காணொளியை பதிவிடுவது எதற்காக என்றால் இதில் இருந்து மதவாதிகள் என்ன கையும் களவுமாக பிடிபட்டாலும்,அத்னையும் சமாளிப்பார்கள் என்பதை காட்டவே.
1. இவருக்கும் அந்த ஒலிபரப்பான கணொளிக் காட்சி தொடர்பு கிடையாது.இது விஞ்ஞான மார்ஃபிங்
2.இவரை மாட்டி விட நாத்திகர்களின் சதி.
முழு நீள நகைசுவை காணொளி. கண்டு மகிழ்க.


Tuesday, February 1, 2011

உலகம் அளந்த பெர்ஷிய அறிஞர் அல் பைரூனி







புவி அளவியலின்(geodesy)  தந்தை அல் பைரூனி

அல் பைரூனி என்பவர் ஒரு பெர்ஷிய நாட்டு அறிஞர்.இவர் அறிவியல்,கணிதம், உள்ளடங்கிய பல் கலைகளில் தலை சிறந்த மேதை. இவர்  973 ல் காத்,உஸ்பெக்கிஸ்தானில் பிறந்தவர். இந்தியாவின் பல்வேறு கலைகள்,வானவியல் போன்றவறை பற்றி கூட ஆய்வு செய்து 146 புத்தகங்கள் எழுதியவர்.கிரேக்க தத்துவம்,அறிவியல் முதலியவற்ரை பெர்ஷிய மொழி பெயர்ப்பு செய்தவர். 

இவரை பற்றி ஏன் இந்த பதிவு என்றால். இவர்தான் முதன் முதலில் உலக் உருண்டையின் ஆரத்தை எளிதாக கணக்கிடும் முறையை உருவாக்கியவர். இவர் கண்டுபிடித்த முறை சிறிது மாற்றங்களுடன் இன்னும் பயன் படுத்தப்படுகிறது.

இப்பதிவு பூமியின் ஆரத்தை கண்டுபிடிக்கும் அவரது முறையை பற்றித்தான்.


இதற்கு முதலிலும் சில முயற்சிகள் நடை பெற்றாலும் பூமி உருண்டையானது என்ற கருத்தின் அடிப்படையிலேயே இவரது ஆய்வு மேற்கொண்டது எனக்கு முகவும் சிறப்பான ஒரு விஷயமாக தெரிகிறது.பூமி உருண்டையானது என்ற கருத்தை த்தை கி.மு 300ல் கிரேக்க அறிவியலாளர் எரோஸ்தனிஸ் கூறி பூமியின் சுற்றளவை தோராயமாக கண்டுபிடித்தார்.


அல் பைருனியின் செயல் முறை.

1.இதற்கு ஒரு கடல் அருகில் உள்ள ஒரு மலை தேவைப்படுகிறது.

2. மலையின் கீழ் இருந்து அடிவாரத்தில் இரு இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.மலை மற்றும் தேர்ந்தெடுக்கும் இடங்கள் மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருக்க வேண்டும்.இரு இடங்களௌக்கும் உள்ள தூரம் அளக்க வேண்டும்.


3.அல் பைரூனி கண்டுபிடித்த ஒரு கருவி(ஸ்பெக்ட்ரொ மீட்ட‌ர் மாதிரி) மூலம் இரு இடங்களில் இருந்தும் மலை உச்சியின் கோணம் அளக்க வேண்டும்.
இடங்களுக்கிடையே உள்ள தூரம்,இரு கோணங்கள் மூலம் மலையின் செங்குத்து உயரம் கணக்கிடப் படுகிறது.

4.பிறகு மலையுச்சிக்கு சென்று கடலை நோக்கி அந்த கருவிஅயை திருப்பி கடலும் மேககமும் சந்திக்கும் மிக அதிக கோணத்தை அளக்க வேண்டும்.
மலையின் செங்குத்து உயரம் ,மற்றும் இப்போது அளவிட்ட கோணம் ஆகியவற்றுடன் எளிதாக பூமியின் ஆரம் கணக்கிடலாம். 



அல் பைரூனியின் இந்த கணக்கிடும் முறை மிகவும் பாராட்டத்தக்கது என்றாலும்.இவரது கண்டுபிடிப்புகளை மத வாதிகள் தங்களுக்கு சாதகமாக கூறி வருவதை தவிர்ப்பதும் இப்பதிவின் நோக்கமாகும்.

இஸ்லாமியர்களிலும் சில அறிவியலாளர்கள் இருப்பதும் இயல்பான விஷயமே அறிவியலில் மததலையீடு இல்லாத்தால்தான் இவரால் செய்ய முடிந்தது என்பதற்கும் ஆதாரம் தருகிறேன்.

இவருக்கு இந்திய கலாச்சாரம் மற்றும் சோதிடம் ஆகியவற்றிலும் ஈடுபாடு உண்டு.இதனை பற்றியும் ஒரு புத்தகம் எழுதியுள்ளார் என்பது இவர் மேல் குத்தப்படும் மத முத்திரையை உஅடைத்துவிடும் என்று கருதுகிறேன்..


அறிவியலாளர்கள் இயற்கையை அறிந்து கொள்வதிலும்,ஆய்வுகள் மூலமே முடிவுகளை எடுப்பவர்கள். அவர்கள் மத நம்பிக்கை உடையவர்களாக இருந்தாலும் மதத்தை அறிவியலில் கலக்கும் செயலை செய்ய மாட்டார்கள்.ஆய்வின் முடிவை ஆண்டவன் கூறியதாக கூற மாட்டார்கள்.