இஸ்ரேல் நாட்டை அனைவரும் அறிவதே அதன் சர்ச்சைகுறிய உருவாக்கமும் மற்றும் அதன் அண்டை நாடுகளோடு நட்த்திய போர்கள் என்றால் மிகையாகாது.சுமர் 250 பில்லியன் பேரல் எண்ணெய் மற்றறும் இயற்கை எரிவாயுவும் ஷெஃப்லா பகுதியில் கண்டு பிடிக்கப் பட்டதாக் கூறுகின்றனர்.
இஸ்ரேல் என்ற நாட்டின் குறிப்பிட்ட பகுதியில் உருவாக்கம் பற்றி எனக்கு எப்போதும் ஏன் என்ற கேள்வி உண்டு.ஒருவேளை எண்ணெய் வளம் இருப்பதை முன் கூட்டியே அறிந்து செய்தார்களா என்ற எண்ணமும் உண்டு.
இது உலக அரசியலின் போக்கை எப்படி மாற்றும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இன்னும் சில விவரங்கள் இங்கே காண்க
சவுதியில் 1957ஆம் ஆண்டு பிறந்த செல்வந்தரான் திரு ஒசாமா பின் லேடன் இரு நாட்களுக்கு முன் அமரிக்க இராணுவப்படையால் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.கொல்லப்பட்டது அவர்தானா என்றும் சில வதந்திகளும் வெளிவரத் தொடங்கி உள்ளது.
நம் பங்கிற்கு இந்த மரணத்தில் இருந்து நமக்கு என்ன புரிதல் ஏற்படுகின்றது என்பதை மட்டும் இப்பதிவில் பார்ப்போம்.ஒரு முக்கியமான கருத்தை மனைதில் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.அதாவது இப்போதைய கால கட்டத்தில் ஊடகங்கள் ஒரு மனிதர்,நாடு,மதம் பற்றிய பிம்பங்களை கட்டியமைப்பதில் பெரும்பங்கு ஆற்றுகின்றன.அந்த பிம்பங்கள் உண்மையாக இருக்குமா என்று சரிபார்க்கும் வாய்ப்பு எப்போதும் இருப்பதில்லை
பொதுவாக இந்த ஊடகங்கள் மூலமாகவே நாம் ஒசாமா பற்றி அறிந்துள்ளோம்.அவற்றை சுருக்கமாக கூறினால்.
1.இவர் சவுதியில் உள்ள ரியாத்தில் பிறந்தார்.சவுதி அரச குடும்பத்தோடு நெருக்கமான தொடர்புள்ள குடும்பம்.
2.சவுதி ஜெத்தாவில் உல்ல கிங் அப்துல் அஜீஸ் பல்கலைகழகத்தில் கட்டுமான பொறியியல் ப்ட்டம்(1979) பட்டம் பெற்றதாகவும்,கல்லூரி படிப்பின் போதும் மிகுந்த மத ஈடுபாட்டுடன் குறிப்பிட்ட கொள்கையாகத்திலும் பிடிப்பிலும் இருந்தார் என்றும் கூறப்படுகின்றது.இந்த கொள்கையாகக்ம் எது என்று கூற விரும்பவில்லை தேவையற்ற மறுப்புகள், விவாதங்கள் அவசியமற்றது.
3.ஒசாமா 1979 முதல் 1989 வரை பாகிஸ்தான் பெஷாவரில் தங்கி இருந்ததாகவும் ஆப்ரேஷன் சைக்லோன் என்ற அமரிக்க திட்டத்தின் படி சோவியத் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய முஜாகிதீன் என்ற ஆயுதக் குழுவிற்கு உதவி செய்துள்ளார்.ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை இஸ்லாமின் மீதான ஆக்கிரமிப்பாக காட்டி,பல இஸ்லாமிய,அரபு நாடுகளில் இருந்து பல இளைஞர்களை அழைத்து வந்து போரில் ஈடுபடுத்தியதில் இவர் முக்கிய பங்காற்றினார்.
4.1988ல் சொவியத் தன் துருப்புகளை ஆப்கனில் இருந்து வெளியேற்றியதும் தலிபானகள் ஆட்சி பொறுப்பேற்றதும் இவர் புகழ் இஸ்லாமிய நாடுகள் எங்கும் பரவியது.
5. பல இஸ்லாமிய ஆயுதக் குழுக்களுடன் தொடர்பு ஏற்பட்டது.1988ல் அல்கொய்தா இயக்கத்தை ஆரம்பித்தார்.1990ல் சவுதிக்கு திரும்புகிறார்.
6. சதாம் ஹுசைனின் குவைத் ஆக்கிரமிப்பு நிகழ்வு(ஆகஸ்ட் 2,1990) சவுதி அரசை பெரும் நிர்ப்பந்தத்தில் ஆழ்த்துகிறது.குவைத்தை கைப்பற்றிய சதாம் ஹுசைன் சவுதியையும் கைப்பற்றி விடுவாரோ என்ற அச்சம் ஏற்பட்டதும் அமரிக்கா உட்பட்ட மேலை நாடுகளின் கூட்டுப் படைக்கு த்னது நாட்டில் தளம் அமைத்து கொடுத்தது.
7. ஒசாமா ,சவுதி அரசர் ஃபாகத் ஐ சந்தித்து இஸ்லாமியரல்லாத படைகளின் உதவி வேண்டாம் ,த்னது அல் கொய்தா மற்றும்,முஜாகிதீன் உதவியுடன் சதாம் ஹுசைனை முறியடித்துவிடலாம் என்று கூறுகிறார். அரசர் ஃபாகத்திற்கு தெரியும் ஒருவேளை இதனை ஏற்று குவைத்தை மீட்டால், ஒசாமா சவுதி ஆட்சியை பிடித்து விடுவார் தன் குடும்பம அதோ கதி என்பதை உணர்ந்தார்.
8.ஆகவே அமெரிக்காவின் உதவி ஏற்றுக் கொண்டு சதாம் ஐ தோற்கடிக்க அரசர் ஃபாகத் உதவி செய்தார்.
9.ஒசாமா சவுதி அரசை குறை கூற ஆரம்பித்தார். 1992ல் சூடானுக்கு சென்று த்னது பயிற்சி கொடுக்கும் மையத்தை செயல் படுத்துகிறார்.அங்கிருந்து சவுதி அமெரிக்க ஆதரவு பெற்றதை குறை கூறி வந்ததால் சூடான் மீது சவுதி அரசியல் அழுத்தம் கொடுத்து ஒசாமாவை வெளியேற்ற முனைந்தது.
10.ஒசாமா 1995ல் சவுதி குடியுரிமை இரத்து செய்யப்பட்டது,அவர் குடும்பத்தினர் அவரோடு எந்த் தொடர்பும் கிடையாது என்று கூறிவிட்டனர்.
11. சூடானுக்கு பிரச்சினை என்பதால் 1996ல் திரும்பவும் ஆப்கானிஸ்தான் செல்கிறார் ஒசாமா.
12. 1992 முதல் 2001 வரை ஒசாம அல் கொய்தா பல குண்டு வெடிப்புகள், தாகுதல்கள் நடத்தினார். அவரை அமெரிக்க மேலை நாடுகள் தேட ஆரம்பித்தன.
14.அமெரிக்கா 2001ல் ஆப்கன் மீது தாக்குதல் நடத்தில் ,ஆட்சி மாற்றம் கொண்டு வந்தது.தலிபான்கள் தோற்கடிக்கப்பட்டாலும் இன்று வரை ஆப்கன் அரசியலில் ஒரு சக்தியாகவே இருந்து வருகின்றனர்.
15.ஆப்கன் பாகிஸ்தான் எல்லையில் ஒசாமா இருப்பதாக கூறப்பட்டதை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது.இந்த சூழ்நிலையில் மே 2 ,20011 அதிகாலையில் பாகிஸ்தானில் உள்ள அபோதாபாத் நகரில் வைத்து சுட்டு கொல்லப் பட்டதாக அறிவிக்கப் பட்டது.சில புகைப்படங்கள் மட்டும் வெளியானது.
16மரபணு பரிசோத்னை செய்து உறுதிப்படுத்தப்ப்ட்டதாகவும் செய்திகள் வந்தன.மத சடங்குகளுக்கு பின் சடலம் கடலில் வீசப்பட்டதாக கூறப்படுவது குழப்பத்தையும் சந்தேகத்தையுமே ஏற்படுத்துகிறது.
முடிவுரை
இன்னும் பல விஷயங்களை கூற முடியவில்லை ஏனெனில் இதில் பல விவரங்கள் அடங்கியுல்ளன்.
அ) இவர் ஆப்கன் சென்று அமெரிக்காவிற்கு உதவியாக சோவியத்திற்கு எதிரான முஜாகிதீன் போராட்டத்தை வெற்றி பெற்ச் செய்ததை மட்டும் செய்து விட்டு,வேறு செயல்களில் ஈடுபடாமல் இருந்திருந்தால், இன்னும் நாயகராகவே வலம் வந்து இருப்பார்.ஏதாவது நாட்டுக்கு அரசராக கூட ஆகி இருக்கலாம்.தன்னை பற்றிய கூடுதல் மதிப்பீடே காரணம் எனலாம்.இவர் எதற்காக இதையெல்லாம் செய்தார் என்பது ஒசாமாவிற்கே வெளிச்சம்.
ஆ)யார் நாயகன்,தீவிரவாதி என்பதை அமெரிக்கா ,மேலைநாடுகள் சார்ந்த ஊடகங்களே தீர்மானிக்கின்றன.
இ).பலருக்கும் இந்த மரணத்தில் நிம்மதி.
i) ஒபாமாவிற்கு மக்களிடையே மதிப்பு கூடலாம்.மீண்டும் தேர்ந்தெடுக்கப் படும் வாய்ப்பு அதிகம் ஆகலாம்.
ii)மதவாதிகளும் ஒசாமா மத கருத்துகளை தவறாக பிற்காலத்தில்(i.e அமெரிக்காவை எதிர்க்க ஆரம்பித்த பிறகு!!!!) புரிந்து செயல் பட்டவர்.அவர் செய்தது மதத்தின் படி தவறு என்று கூறி விடுவர்.
iii) சவுதி அரசு,இதர எண்ணெய் வள நாடுகள் அமெரிக்க நட்பில் ,பாதுகாப்பில் இருக்க வேண்டிய கட்டாயத்தையும் வெளிப்படுத்துகிறது.
சவுதி அரசு தனது அமரிக்க ஆதரவு போக்கை மறைக்கவே த்ன்னை ஒரு மத சார்புள்ள ,மத கோட்பாடுகளை காக்கும் நாடாக காட்டி வருகிறது.மத பிரச்சாரங்களுக்கும் பயிற்சி அளித்து உலகமெங்கும் பரப்புரை செய்கிறது.எண்ணெய் வளம் உள்ளவரை (சரியாக தெரிந்து கொள்ள இவ்விணயப் பக்கத்தின் பக்கதின் கீழ் உள்ள புவி காலக் கணக்கீட்டு அளவைகளை காணவும்.) இதுவும் தொடரும்.
முதலில் கிறித்தவர்களின் சுவிஷேஷங்களின் படி இயேசுவின் வரலாறை காலவரிசையுடன் தெரிந்து கொள்ளுவோம்
காலவரிசை (Timeline)
6-4 BC •இயேசுவின் பிறப்பு
5-4 BC • பெற்றோரால் எகிப்துக்கு கொண்டுசெல்லப்படுதல்,ஏரோது மன்னன் இயேசுவின் வயதுடைய குழந்தைகளை கொல்லுதல்.
4 BC • ஏரோதின் மரணம்.
7-8 c • ஜெருந்சலமிற்கு பயணம்.
12 c அகஸ்டஸ் சீசர் திபெரியஸை இளவரசனாக முடி சூட்டுகிறார்..
14 c • திபேரியஸ் ரோம பேரரசர் ஆகிறார்.
25 c • பிலாத்து பாலஸ்தீன அரசுபிரதிநிதியாகவும்,கைபா தலைமை மதகுருவாகவும் பதவியேற்றல்.
29 c • ஜான்(இஸ்லாமின் யாஹ்யா) ஊழியம் தொடங்குகிறார்.
29 c • இயேசுவும் ஊழியம் தொடங்குகிறார்.
31 c • திபெரியஸ் தன் தள்பதி செஜனஸுக்கு மரண தண்டனை அளிக்கிறார்.
33 c • இயேசுவின் மரணம் (வெள்ளி ,ஏப்ரல் 3, 3:00(பிற்பகல்).
36 c • பிலாத்து ,கைபா பதவி நீக்கம்.
37 c • திபெரியஸ் சீசரின் மரணம்
வரலாற்று அறிஞர் ஜோசஃபஸ்(c.37 – 100)
இவர் முதல் நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் யூதர்களின் வரலாற்றை தொகுத்தளித்தவர்களில் மிக்கியமானாராக கருதப்படுகிறார்.
இவர் ரோம அரசுக்கு விசுவாசமாக இருந்தவர் என்று கூறப்பட்டாலும் இவர் எழுத்துக்கள் அதாரப்பூர்வமாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
ஜோசஃபஸ் இயேசுவின் ச்கோதனாக ஜேம்ஸ் என்பவரை குறிப்பிட்டு,ஜேம்ஸ் ஒரு யூதக்குழுவிற்கு தலைவராக இருந்ததாக குறிப்பிடுகிறார்.இயேசு,அரச பிரதிநிதி பிலாத்து,மதகுரு கைபா, யோவான்(ஜான்) ஸ்நானகனாகியோரைபற்றியும் குறிப்பிடுகிறார்.
3. Now there was about this time Jesus, a wise man, if it be lawful to call him a man; for he was a doer of wonderful works, a teacher of such men as receive the truth with pleasure. He drew over to him both many of the Jews and many of the Gentiles. He was [the] Christ. And when Pilate, at the suggestion of the principal men amongst us, had condemned him to the cross, (9) those that loved him at the first did not forsake him; for he appeared to them alive again the third day; (10) as the divine prophets had foretold these and ten thousand other wonderful things concerning him. And the tribe of Christians, so named from him, are not extinct at this day.
பிலாத்துவின் காலத்தில் இயேசு என்ற ஞானி(மனிதர் என்றே குறிப்பிடுவதில் தயக்கம் இருப்பதாக ஜோசஃபஸ் குறிப்பிடுகிறார்) ,போதகர் பல யூதர்களுக்கும்,பிறருக்கும் சத்தியத்தை போதித்து வந்தார் .பிலாத்து சிலரின் குற்றச்சாட்டுகளின் பேரில் சிலுவையில் அறைய செய்தான் என்று குறிபிடுகிறார்.அவர் வணங்கியவர்களுக்கு உயிரிடன் தெரிந்ததாகவும்,அவரை வணங்குபவர்கள்,கிறித்தவர்கள் என்றழைக்கப்பட்டார்கள் என்றெல்லாம் கூறுகிறார்.
*************
பிறகென்ன ஜோசஃபஸின் கூற்று கிறித்தவர்களின் சுவிஷேசங்களுக்கு ஒத்து போகின்றது அல்லவா,பிறகென்ன பிரச்சினை என்று கூறலாம்.
ஜோசஃபஸின் புத்தகத்தில் பல இடைசெருகல்கள் பிற்கால (கிறித்தவ)ஆட்சியாளர்களால் செய்யப்பட்டதாகவும் கருத்து உண்டு.
நாம் நடுநிலைமையோடு இந்த வரலாற்று இயேசுவை தேடும் வரலாற்றாய்வாளர்கள்,அவர்களின் எழுத்துகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோசஃபஸை பற்றி எழுதவே பல பதிவுகள் தேவைப்படும் என்பதால்,ஜோஸஃபஸ் புத்தகத்தில் இப்போதைய கிறித்தவத்திற்கு ஆதரவான கருத்துகள் இருக்கின்ற்ன என்பதை மட்டும் அறிந்து கொள்ளுங்கள்.
இன்னும் கூறினால இவர் இன்னும் ஜீஸஸ் என்ற பெயருடைய வேறு சிலரையும் குறிபிடுகிறார்.இயேசு பற்றிய இவரின் கூற்று புத்தகத்தின் கடைசியில் இருப்பதால் அறுதியிட்டு கூறமுடியாது.தேடல் அதிகம் உள்ளவர்களுக்கு அவர் எழுதிய புத்தகத்தை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு வேண்டுகிறேன்.
see page number 2030(2035 of 2609),2288(2293 of 2609),2318(2323 of 2609),2379(2384 of 2609),2525(2530 0f 2609)
குழப்பமான(எதிரான) பக்கங்கள்
2291(2296 of 2609),2296(2301 of 2609),2599_2600(2604_2605 of 2609)
இந்த பக்கங்களை பார்த்தால் ஜோசஃபஸை வைத்து மட்ட்டும் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது என்று புரியும். அடுட்த பதிவில் இயேசு பிறந்த போது இருந்த அரசியல் சூழ்நிலை பற்றி அலசுவோம்.
ஆங்கில நாட்காட்டிகள் உலக வரலாற்றையே இரு பிரிவாக கி.மு(கிறிஸ்துவுக்கு முன் ),கி.பி(கிறிஸ்துவுக்கு பின் )என்று பயன்படுத்தி வருவ்து அனைவரும் அறிந்ததே. இந்த கிறிஸ்து என்னும் சொல்லுக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர்,மீட்பர்(மேசியா) என்று பொருள்..
Christ is the English term for the Greek Χριστός (Khristós) meaning "the anointed one". It is a translation of the Hebrew מָשִׁיחַ (Māšîaḥ), usually transliterated into English as Messiah. In popular modern usage—even within secular circles—the term usually refers explicitly to Jesus of Nazareth.
இது ஜீஸஸ்,இயேசு,ஈசா என்று பலவாறாக அழைக்கப்படும் கிறித்தவ மதத்தின் கடவுளாக(மகன்) கருதப்படும் ஒருவரைக் குறிக்கிறது. இவரின் வாழ்க்கை வரலாறு கிறித்தவர்களின் வேதமான புதிய ஏற்பாட்டின் சுவிஷேசங்களான மத்தேயு,மாற்கு,லூக்கா மற்றும் யோவான்(ஜான்) ஆகியவற்றில் குறிப்பிடப்படுகிறது.
இவர் கன்னித்தாய்க்கு பிறந்த்தாகவும்,பல அற்புதங்கள் செய்ததாகவும் இந்த சுவிஷேசங்கள் கூறுகின்றன.யூதர்களால் சிலுவையில் அறைப்பட்டு இறந்தார்,ஆனால் மூன்று நாட்கள் கழித்து உயிரோடு திரும்பினார் என்றெல்லாம் கூறபடுகிறது.
இஸ்லாமியர்களின் வேதமான குரானிலும் இவர் ஈசா என்ற பெயரின் இறைத்தூதராக அறியப்படுகிறார்.கன்னித்தாயின் மகன்,அற்புதஙகள் இங்கும் கூறப்படுகிறது.ஆனால் இவர் ஒரு இறைத்தூதர் மட்டுமே.கடவுளின் அவதாரமில்லை.
கிறித்தவம்,இஸ்லாமின் ப்ல பிரிவினர் இவர் மீண்டும் மறுமை நாளில் வருவார் என்று நம்புகின்றனர்..இந்த விஷயங்களை வரலாற்றின் மூலம் உறுதி செய்ய முடியுமா?.இந்த குறிப்புகள் வரலாற்று ஆதாரம் உடையனவா என்பதை குறித்து சேகரித்த விவரங்களை இந்த தொடர் பதிவுகளில் எழுத இருக்கிறேன்.
இப்பதிவு ஏன் எழுதவேண்டுமெனில ஏற்கெனவே ஆங்கிலத்தில் இது குறித்து பல் கட்டுரைகள்,புத்தகங்கள் வெளிவந்துள்ளன.தமிழர்களுக்கும் அது குறித்து சில தகவல்கள் சொல்லவேண்டும்.தொடரின் உள்ள சந்தேகங்கள்,விளக்கங்கள் கூடுமானவரை எளிமை படுத்த முயற்சிக்கிறேன்.
புதிய ஏற்பாடு புத்தகங்கள் பற்றி சில குறிப்புகள்
பதிய ஏற்பாடு அல்லது கிரேக்க விவிலியம் என்பது கிறித்தவர்களின் புனித நூலான விவிலியத்தின் இரண்டாவது பகுதியாகும் . முதல் பகுதி பழைய ஏற்பாடு என்று அழைக்கப்படுகிறது.
கிறித்துவின் காலத்திலும் அவர் இறந்த ஒரு நூற்றாண்டுக்குள்ளும் எழுதப்பட்ட புனித நூல்தொகுப்பு புதிய ஏற்பாடு என்று வழங்கப்படுகிறது.புதிய ஏற்பாடு பல நூல்கள் அடங்கிய தொகுப்பு ஆகும். இது பல எழுத்தாளர்களாலும் குழுமங்களாலும் கி.பி. 45க்குப் பின்னும் கி.பி. 140க்கு முன்னும் எழுதப்பட்டு சிறுக சிறுக சில நூற்றாண்டுகளாக ஒன்று சேர்க்கப்பட்டு, கிறித்தவ திருச்சபையால் அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டது. விவிலியத்தின் பகுதியாக இந்நூல்கள் கி.பி. முதல் நூற்றாண்டிலிருந்தே ஏற்கப்பட்டன. 397இல் கார்த்தேசு (Carthage) நகரில் நடந்த சங்கத்திலும், பின்னர் திரெந்து சங்கத்திலும் (கி.பி. 1546) இவை விவிலியத் திருமுறை நூல்களாக அதிகாரப்பூர்வமாக ஏற்கப்பட்டன..
புதிய ஏற்பாட்டின் மூல நூல் (செப்துவசிந்தா) ] என்னும் கிரேக்க விவிலியத்தில் உள்ளது. தொடக்க காலத்திலிருந்தே விவிலியம் இலத்தீன் மொழியில் பெயர்க்கப்பட்டது..கீறிதவத்தை விமர்சிக்கும் பல இஸ்லாமிய தளங்களில் புதிய ஏற்பாடு மூலம் அரமைக்(இயேசுவின் தாய்மொழி) மொழி என்று தவறாக குறிப்பிடுகிறார்கள்..
பொதுவாக கிறித்தவ மத சார்பு ஆய்வாளர்கள் ஜோசபஸ்(கி.பி 37_100) என்ற யூத வரலாற்று அறிஞர் இயேசுவை பற்றி குறிப்பிடுவதாக கூறுவர்.அடுத்த பதிவில்.இவர் என்ன கூறினார்,அதன் ஆதாரங்கள் பற்றி ஆய்ந்து,தொடர்ந்து தேடுவோம். http://en.wikipedia.org/wiki/Josephus_on_Jesus
கடந்த 60 வருடங்களாக உலகைல் தீர்க்கப் படாத பிரச்சினைகளுல் ஒன்றுதன் இந்த இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை.நடுநிலைமையோடு நடந்ததை சொல்லும் ஒரு முயற்சி.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரச்சினை என்பது என்ன?
சவுதி அரேபியா,எகிப்து,ஜோர்டான்,சிரிய இடையே உள்ள பகுதிக்கு யார் உரிமை உடையவர்கள் என்பதுதான் பிரச்சினை.யூதர்கள்,பாலஸ்தீன முஸ்லிம்கள் இருவருமே உரிமை கொண்டாடிவருகிறார்கள்.இப்போது யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி இஸ்ரேல் என்ற் நாடாக அறியப்படுகிறது.பாலஸ்தீன முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகள்(,மேற்கு கரை மற்றும் காசா பிரதேசம்) பாலஸ்தீனம் என்று அழைக்கப் படுகிறது.
அவற்றை பற்றி (இப்போதைய) சில விவரங்கள்
இப்பொதைய இஸ்ரேல் மற்றும் பால்ஸ்தீனத்தின் வரைபடம்
.
இஸ்ரேல்
1948ல் தனி நாடாக அங்கீகரிக்கப் பட்டது.
1.பரப்பள்வு:22,072 ச.கி.மீ (தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 ச.கி.மீ)
2.மக்கள் தொகை:73 இலட்சம்(ஐ நா 2010)
3.மொழி:ஹீப்ரூ,அரபி
4.மக்கள்
யூதர் :80%
,,பாலஸ்தீன முஸ்லிம் 17%
,,கிறித்தவர்3%
5.சராசரி ஆண்டு வருமானம்:24000$(ஒருவருக்கு)
_____
பாளஸ்தீனம்(மேற்கு கரை,காசா பகுதி)
இப்போது இஸ்ரேல் ஆக்கிரமிப்பில் உள்ளது.
1.பரப்பள்வு: 5,970 ச.கி.மீ (சேலம் மாவட்டம் பரப்பளவு 5205 ச.கி.மீ)
2.மக்கள் தொகை:44 இலட்சம்(ஐ நா 2010)
3.மொழி:அரபி,ஹீப்ரூ
4.மக்கள்:
யூதர் :5%
,பாலஸ்தீன முஸ்லிம் 90%
,கிறித்தவர் 5%
5.சராசரி ஆண்டு வருமானம்:2130 $(ஒருவருக்கு)
இந்த விவரங்கள் இப்பொதைய அரசியல் சூழ்நிலையை பிரதிபலிக்கின்றதை காட்டவே இப்பதிவில் கூறுகிறேன்.
இந்த விவரங்களை பார்த்தவுடன் இரண்டு பகுதிகளுக்கும் உள்ள வித்தியாசங்கள் எளிதாக புரியும்.
இப்பிரச்ச்னையின் உண்மைகளை வரலாற்று ஆதாரங்களுடன் ஆய்வு செய்வோம்.
1.கி.பி 1914 க்கு முன்பு வரை பாலஸ்தின்னம்,சிரியா,ஜோர்டன்,இராஃ பற்றும் எகிப்து,சவுதி அரேபியாவின் பல பகுதிகள் ஆட்டோமான் பேரரசின் பகுதிகளாக இருந்தன.
.
2. யூதர்கள் மக்கள் தொகை இப்பகுதியில் கி.பி 1900ல் வெறும் 78,000 மட்டுமே.அவர்கள் இங்கே பலஸ்தின்னர்களுடன் அமைதியாகவே வாழ்ந்து வந்தனர்.தம் மத கலாச்சார அடையாளங்களை பேணி உரிமையுடனே வாழ்ந்து வந்தனர்.
3.முதல் உலகப்போர் கி.பி.1914_1919 நடந்த போது ஆட்டோமான் பேரரசு,ஜெர்மனை ஒரு அணியிலும் இங்கிலாந்து ,ப்ரான்ஸ் ஆகிய நாடுகள் எதிர் அணியிலும் போரிட்டன. அதில் ஆட்டோமான் பேரரசு தோற்கடிக்கப் பட்டது.இங்கிலாந்தும்,ப்ரான்சும் ஆட்டோமான் பகுதிகளை கூறுபோட்டு பங்கு பிரித்தன்ர். அப்போது இப்பகுதி இங்கிலாந்தின் ஆட்சியின் கீழ் வந்தது.
4.இரஷ்யா,ஜெர்மனை ஆகிய நாடுகளில் ஏற்பட்ட இன பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட யூதர்கள் பலர் பாலஸ்தீனத்திற்கு வர ஆரம்பித்தன்ர்.யூதர்கள் பெருமளவு நிதி திரட்டி பாலஸ்தீனர்களிடம் இருந்து நிலங்களை வாங்க ஆரம்பித்தன்ர். ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்கள் பாலஸ்தீனத்தில் யூத அரசு(இஸ்ரேல்) அமைக்க வேண்டும் என்று அரசியல் ஆதரவு திரட்ட ஆரம்பித்தன்ர்.
5.இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலாளர் ஆர்தர் ஜேம்ஸ் பெல்ஃபோர் என்பவர் இங்கிலாந்து யூத தலைவர் ரோத்சைல்ட்கு 2 நவம்பர் 1917ல் எழுதிய கடிதத்தில் யூதர்களுக்கு பாலஸ்தீனத்தில் தனி நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கிறார்.
6.யூத தலைவர் வெய்ஸ்மான் என்பவருக்கும் அமீர் ஃபைசல்(அப்போதைய அரேபியாவின் ஒரு பகுதியின் இளவரசர்) இன்னொரு உடன்படிக்கை ஏற்படுகிறது.இதிலும் பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு ஒரு நாடு ஏற்படுத்துவதாக உறுதி அளிக்கப் படுகிறது. பாலஸ்தீனர்கள் யாருமே இந்த உடன்படிக்கைகளில் பங்கேற்கவில்லை.
7.யூதர்கள் அதிக்மாக குடியேறுவதும் தனிநாட்டுக்கான வரைபடங்கள்,திட்டங்கள் முதலியவற்றால் விழிப்படைந்த பாலஸ்தீனர்கள் பிப்ரவரி 1920முதல் எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். இன கல்வரங்கள் நடப்பதும்,இரு புறங்களிலும் வன்முறைகள்,உயிரிழப்பு முழு அளவில் நடக்க ஆரம்பிக்கிறது.
8.முகமது அல் ஹுசைனி (ஜெருசலேம் மசூதி மத குரு)பாலஸ்தீனர்களின் தலைவராக உருவெடுக்கிறார்.
இவர் பாலஸ்தீனம் சிரியாவின் ஒரு பகுதியாகவும்,டமாஸ்கஸ் அதன் தலைநகராகவும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோளில் செயல் பட்டார்.
முகமது அல் ஹுசைனி.
9.அரபு தலைவர்களின் குழு கி.பி 1922ல் ஃபெல்ஃபோர் தீர்மானத்தை ஏற்க முடியாது என்று இங்கிலாந்து அரசிடம் திட்டவட்டமாக கூறுகிறது.
இதற்கு சர்சில் வெள்ளை அறிக்கை இதற்கு பதிலாக 1922ல் தர்படுகிறது.அது குழப்பான வார்த்தைகளில் பாலுக்கும் காவம்,பூனைக்கும் தோழன் என்ற வகையில் இருக்கிறது.
10.பிரிட்டிஷ் தீர்ப்பு என்று பாலஸ்தீனத்தை பிரித்து அப்போதைய ஐ.நா சபையிடம் 24,ஜூலை 1922ல் ஒப்புதல் பெறுகிறது.இதன் படி மொத்த பகுதியும் பிரிட்டிஷ் பாலஸ்தீனம் மற்றும் ட்ரான்ஸ் ஜோர்டான் எனா இரு பிரிவாக பிரிக்கப் படுகிறது.
11.ஜோர்டான் சவுதி ஹாசிமைட் வம்சத்தை சேர்ந்த அரசர் வசம் ஒப்படைக்கப் படுகிறது.இந்த பிரிட்டிஷ் பாலஸ்தீனத்தில் யூத நாடு அமைக்கவும் அதில் பிற இனத்தவர்களுக்கு சம் உரிமை வழங்க வேண்டுமென்றும் கூறப்பட்டது.
12.கி.பி 1930ல் பாஸ்ஃபீல்ட் வெள்ளை அறிக்கை யூத குடியேற்றத்தை தை செய்ய சட்டம் கொண்டு வந்தது.ஆனால் யூதர்கள் சட்ட விரோதமாக குடியேறுவது தொடர்ந்தது.யூத பிரிட்டிஷ் மோதல்களும் நடந்தது.ஹகன்னா,இர்குன் போன்ற யூத ஆயுதக் குழுக்கள் வளர்ச்சி அடைய ஆஅரம்பித்தன.
13.இதன் பிறகு 1922_36 வரை இன மோதல்களே நடை பெற்று வந்தன.எந்த முன்னேற்றமும் இல்லை.கி.பி 1937ல் சமதான முயற்சி தோல்வி அடந்தது.1937_39 பல்வேறு முயற்சிகள்,ஒன்றினந்த பாலஸ்தீனம் முதல் இரு நாடு கொள்கை வரை இரு குழுக்களுமே ஒத்துழைக்கவில்லை.
14.கி.பி 1939ல் இரண்டாம் உலக்ப்போர் ஆரம்பித்தது.பாலஸ்தீன மற்றும் பல அரபுத் தலைவர்கள் பிரிட்டனுக்கு எதிரான நிலையை எடுத்தனர்.பாலஸ்தீன தலைவர் அமின் அல் ஹுசைனி ஹிடலருக்கு முழு ஆதரவு அளித்தார்.இதன் காரணமாக பிற அரபு நடுகளில் இருந்த யூதர்கள் பலரும் பிரிட்டிஷ் பாலஸ்தீனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
15.கி.பி 1945ல் போர் முடிவுக்கு வருகிறது.இங்கிலாந்து அணியினர் வெற்றி பெற்றனர்..ஜூலை 22 ,1946ல் கிங் டேவிட் ஹோடெல் இஸ்ரேலிய இர்குன் அமைப்பால் குண்டு வைத்து தகர்க்க படுகிறது.இது பிரிட்டிஷ் ஆட்சியின் அலுவல்கமாக இருந்தது.
16.பிப்ரவரி 22,1947 பிரிட்டன் ஐ நா அமைப்பிடம் இப்பிரசினையை தீர்க்க கோருகிறது.நவம்பர் 29,1947 ஐ நா சபை வாக்கெடுப்பில் இஸ்ரேலுக்கு ஆதரவு கிடைத்தது.
இஸ்ரேலில் வசித்த மக்கள் தொகை 498,000 யூதர்கள்+ 407,000 பாலஸ்தீனர்கள்
பாலஸ்தீனத்தில் வசித்த மக்கள் தொகை 10,000 யூதர்கள்+ 725,000 பாலஸ்தீனர்கள்.
ஐ நா பிரிவுக்கு பின் மே 14 முதம் 13 மாதங்கள் இஸ்ரேல் அரபு போர்கள் நடந்தது. அத்னை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
17.மே 15, 1948ல் இஸ்ரெல் சுதந்திர நாடாக பிரகடனம் செய்தது