மதம் என்பது நம்பிக்கை மட்டுமே சார்ந்த,மனதுக்கு ஊன்றுகோல் போன்ற வாழ்வியல் நடைமுறை. .மதம் சார்ந்த வாழ்வியல் நடைமுறைகளை இந்தியாவில் எவரும் தவிர்க்க முடியாது.பெரும்பாலானவர்கள் இந்த மதத்தில் இனத்தில் பிறந்தது அவர்கள் விருப்பத்தினால் அல்ல என்பதை உணர்ந்து கூடுமான்வரை மதம் சார்ந்த வாழ்வியல் நெறிமுரைகளை கடைபிடித்து வாழ்க்கை போராட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது உண்மை.பல்ருக்கு மதம் என்பது உண்மையா என்று தெரிவதை விட தனக்கு ஒத்துவரும் கொள்கைகளை மட்டும் பின்பற்றி ,வீண் விவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பதும் அறிந்த விஷயமே!!!!!!!.
அறிவியல் என்பது இயற்கையின் நிகழ்வுகளை அவதானித்து அதன் காரணி சக்திகளை வரையறுத்து நடக்கக் கூடிய சில சாத்திய கோட்பாடுகள் உருவாக்கப் படுகின்றன். கால்ப்போக்கில் சில ஆய்வுகள் மூலம் சில கோட்பாடுகள் மெய்ப்பிக்கப் படலாம்,அல்லது தவறென்று நிரூபிக்கப் படலாம்.இது ஒரு தொடர்கதை.மனித சமூகம் கடந்த இரு நூற்றண்டுகளில்தான் அறிவியலில் அதிக முன்னேற்றம் கண்டுள்ளது.அறிவியல் நிரூபிக்கப் பட்ட உண்மைகளை எதிர்த்து கருத்து கூறுபவர்களை உலகம் ஒதுக்கி விடும்.இத்னால் மதவாதிகள் அறிவியலை திரிக்கும் முயற்சியில் இறங்கினர்.எங்கள் மதத்தில் அப்போதே இதெல்லாம் கூறியுள்ளது நிரூபிக்கப் பட்ட ஒவ்வொரு அறிவியல் உண்மையும் எங்கள்'"மதகுரு" ஒரு விளக்கம் கூறிவிடுவார் .இது தவறென்று எளிதாக் பல பதிவுகளில் காட்டியுள்ளதால் இப்பதிவில் நண்பர் ஆஸிக் அகமது ஸ்டீபன் ஹாக்கிங் பற்றிய ஒரு பதிவின் மீது என் விமர்சனம் மட்டும் வைக்கிறேன்.
இதில் நண்பர் ஆஸிக் அகமது ஒரு அறிவியல் விமர்சகர் என்ற வகையிலேயே என் விமர்சனத்தை வைக்கிறேன்.அவர் மத மறுப்பாளர்களை கிண்டல்டிப்பது குறித்து அவரின் நகைச்சுவை உணர்வை வியந்து பாராட்டும் பக்குவம் நமக்கு இருக்கிறது.இதே போல் வரும் எதிர்வினைகளின் மீதும் பக்குவத்தை வளர்த்தால் இன்னும் பாராட்டலாம். இவரிடைய பதிவுகளில் ஆத்திகர் என்ற நிலையில் இருந்து அனைத்து மதங்களும் ஒன்று என்ற கருத்தை வலியுறுத்தும் அவ்ருடைய மத சார்பின்மையையும் பாராட்டுகிறேன்.பிறந்த மதத்தின் பழக்கவழக்கங்களால் சில அரபி சொற்றொடர்களை ப்யன்படுத்தினாலும் அவருடைய கொள்கையான் அனைத்து ஆத்திகர்களும் ஒன்றே என்பதை வலியுறுத்தும் போது நாத்திகர்களை தாக்கினாலும் பர்வாயில்லை என்றே கூறுகிறோம்.
ஏன் தேவையில்லாமல் மத விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத சார்பின்மையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை.தெரிந்தோ தெரியாமலோ சில அறிவியல் கருத்துகளை விவாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளது இதன் மூலம் சில அறிவியல் உண்மைகளை அறிகிறோம் மற்றபடி தமிழர்களின் தனி பெருங்குணமாம் மத சார்பின்மை பாதிக்கும் படி எதுவும் சொல்லமாட்டோம் என உறுதி கூறுகிறோம்.அனைத்து மத (&உட்பிரிவு) பிரச்சாரகர்களும் நண்பர் ஆஸிக் அகமது போல் ஆத்திகர் என்னும் நிலையிலேயே ஒற்றுமையாக இருக்க விருப்பம் தெரிவித்து பதிவிற்குள் செல்வோம்.
ஏன் தேவையில்லாமல் மத விஷயங்களை பற்றி விவாதிக்க வேண்டும் என்று மத சார்பின்மையில் மூழ்கி முத்தெடுக்கும் தமிழர்களுக்கு ஒரு வார்த்தை.தெரிந்தோ தெரியாமலோ சில அறிவியல் கருத்துகளை விவாதிக்கும் வாய்ப்பு வந்துள்ளது இதன் மூலம் சில அறிவியல் உண்மைகளை அறிகிறோம் மற்றபடி தமிழர்களின் தனி பெருங்குணமாம் மத சார்பின்மை பாதிக்கும் படி எதுவும் சொல்லமாட்டோம் என உறுதி கூறுகிறோம்.அனைத்து மத (&உட்பிரிவு) பிரச்சாரகர்களும் நண்பர் ஆஸிக் அகமது போல் ஆத்திகர் என்னும் நிலையிலேயே ஒற்றுமையாக இருக்க விருப்பம் தெரிவித்து பதிவிற்குள் செல்வோம்.
**********************
முன்கதை சுருக்கம்
ஸ்டீபன் ஹாக்கிங் த்னது க்ராண்ட் டிசைன் என்னும் புத்த்கத்தில் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க கடவுள் தேவையில்லை.கவனிக்கவும் கடவுள் இருகிறாரா இல்லையென்றோ கூறவில்ல்லை.இப்புத்த்கத்தின் நோக்கம் இயற்பியல் விதிகளின் மூலம் பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்குவதே தவிர நாத்திக பிரசாரம் அல்ல.இது கொஞ்சம் விவகாரமான் விளக்கம்(உண்மை என்றாலும்) என்பதால் மதவாதிகள் விமர்சிப்பது இயல்பே.
பெரு விரிவாக்க கொள்கை
பெரு விரிவாக்க கொள்கை
இபோதைய பிரபஞ்ச்த் தோற்றத்தின் நிகழ்வுகளை வளக்கும் பெரு விரிவாக்க கொள்கை குறித்து அனைவரும் அறிவீர்கள் என்று நினைக்கிறேன்..
பெரு வெடிப்புக் கோட்பாடானது 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் வெளியான இரண்டு முக்கிய கண்டுபிடிப்புக்களின் அடிப்படையில் உருவானது. ஒன்று ஐன்ஸ்டீனுடைய பொதுச் சார்புக் கோட்பாடு (General Theory of Relativity). மற்றது அண்டவியற் கொள்கை (Cosmological Principle). பொதுச் சார்புக் கோட்பாடு, அண்டவெளியில் உள்ள பொருட்களிடையே காணப்படும் ஈர்ப்புத் தோற்றப்பாடானது மேற்படி பொருட்களின் திணிவுகளினால் பாதிக்கப்பட்டு வெளியும் (space), காலமும் (time) திரிபடைந்த ஒரு நிலையே என்று கூறுகின்றது. அண்ட வெளியில் உள்ள பொருள்கள் வெளியில் ஒரே சீராகப் பரவியிருக்கின்றன என்பதை அடிப்படையாகக் கொண்டதே அண்டவியற் கொள்கை. எளிதாக் புரிந்து கொள்ள விரும்பும் நண்பர்கள் இங்கே படியுங்கள்.
சரி பெருவிரிவாக்க கொள்கை பற்றி தெரிந்து கொண்டீர்கள்.இப்போதைய பிரபஞ்ச தோற்றம் பற்றிய நடைமுறை கொள்கை இதுதான்.ஒரு விஷய்த்தை அனைவரும் புரிந்து கொள்ள வேன்டும்.நமது பிரபஞ்சம் விரிவடைந்து கொண்டே இருப்ப்தை சான்றாக வைத்தே உலகம் ஒரு புள்ளியில் இருந்து தோன்றியிருக்கலாம் என்ற பெரு விரிவாக்க கொள்கை வடிவமைக்க படுகிறது.இந்த சான்றுகளை மெய்ய்பிக்கும் எந்த கொள்கையுமே பெருவெடிப்பிற்கு நிகரானதாக கூறலாம்.சான்றுகளின் மீதுதான் சாத்தியம் உள்ள கோட்பாடுகள் உருவாக்ப் படுகின்றன.பிறகு அதன் மீதான பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் படுகிறது.
பெரு வெடிப்புக் கொள்கை பிரபஞ்சம் விரிவடைதலை தெளிவாக் விள்க்குகிறது,அது பல் பரிசோத்னைகளில் உறுதிப் படுத்தப் பட்டது என்றாலும் இத்னாலும் விளக்க் முடியாத சில சான்றுகள் உள்ளது.இந்த சுட்டிகளை பாருங்கள்.
http://map.gsfc.nasa.gov/universe/bb_cosmo_infl.html
http://www.physics.fsu.edu/users/ProsperH/AST3033/cosmology/BigBangProblems.htm
http://www.physics.fsu.edu/users/ProsperH/AST3033/cosmology/BigBangProblems.htm
பல சொற்களை தமிழ் படுத்த இயலவில்லை ஆகவே சுட்டிகளாக்வே அளிக்கிறேன்.பெருவெடிப்பு பிரபஞ்ச தோற்றத்தின் அனைத்து சான்றுகளையும் மெய்பிக்க வில்லை என்பதால் இது மாற்றியமைக்க அல்லது இதற்கு பதில் வேறு கொள்கை ஏற்றுக் கொள்ளப் படும் சூழலே உருவாகியுள்ளது.
இதற்கு மாற்றாக ஸ்ட்ரிங் தியரி,இன்ஃப்ளேஷனரி, theory Multiverse கொள்கை என்ற கொள்கைகள் பல் சான்றுகளை(பெரு வெடிப்பு விளக்காத) விளக்குகின்றன் .இக்கொள்கைகளின் மீது பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதப்பட்டு மதிப்பு மிக்க சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.
இந்த எம் தியரியின் அடிப்படையில் ஸ்டீபன் ஹாக்கிங் பிரபஞ்ச தோற்றத்தை க்ராண்ட் டிசைன் புத்தகத்தில் விளக்கி எழுதியுள்ளார். அக்கோட்பாட்டில் மட்டுமல்ல அறிவியல் சார்ந்த எந்த கோட்பாட்டிலும் கட்வுள் என்று வராது.சில விதிகள் வரையறுத்து இப்படி நடந்தது என்றுதான் கூறுவார்கள்.இதுவரை எழுதப்பட்ட எந்த அறிவியல் புத்தகத்திலும் முன்னுரையிலோ ,அல்லது நன்றி என்பதற்காக் மட்டுமே இறைவன் பெயர் வரும்.இது எழுதுபவரின் நம்பிக்கை பொறுத்தது.
இதில் ஸ்டீபன் ஹாக்கிங் கடவுளை குறிப்பிடவில்லை என்பது செய்தி.இந்த புத்தக்த்தில் பெருவெடிப்பிற்கு முந்தைய சூழலும் வரையறுக்கப் படுகிறது.எம் தியரி தொடர் பதிவாக் எழுத இருக்கிறேன் வேண்டுமானால் இச்சுட்டியில் கொஞ்சம் தமிழில் தகவல் இருக்கிறது.
___________
நண்பர் ஆஸிக் அகமதுவின் பதிவின் சாராம்சம்
a). பெரு வெடிப்பிற்கு முன் ந்டந்தவற்றை விளக்க முடியாது.அப்படி சொல்லப்படும் கொள்கைகள் தவறு.(மாற்றுக் கருத்து இருந்தால் கூறலாம்)
b). இந்த க்ராண்ட் டிசைன் புத்தகம் கீழ்க்கண்ட சுட்டிகளில் விமர்சிக்கப் பட்டுள்ளது.
1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP - John Horgan, Sep 13, 2010. Scientific Amaerican.
2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu.
3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World.
நாம் எப்போதும் யார் எதை கூறினாலும் அதனை பார்த்து விட்டே முடிவு சொல்வது வழக்கம்.அந்த மூன்று இணப்புகளையும் பார்த்து அதன் மீது நம் கருத்துகள்.
__________
1. Scientific American.
. Cosmic Clowning: Stephen Hawking's "new" theory of everything is the same old CRAP - John Horgan, Sep 13, 2010. Scientific American.
சரி ஒரு கொள்கையை விமர்சிப்பவர்கள் அது குறித்த வித்தகர்களாக் இருக்கவேண்டியது இல்லை .என்றாலும் இந்த எம் தியரி குறித்து விமர்சிக்க அது அல்லது அதற்கு எதிரான் அறிவியல் கொள்கை உடைய விஞ்ஞானியாக் இருப்பது அவசியம் என்றே கருதுகிறேன்.
திரு ஜான் ஹோகன் ஒரு பத்திரிக்கயாளர்.ஆன்மிக அறிவியல் பற்றி பல் புத்த்கங்கள் எழுதியுள்ளார்.இவர் எம் தியரி பற்றி எழுதுவதி விட எமன் பற்றிய தியரிகளே நன்றாக் எழுதுவார்.!!!!!!!!!!!!!!.
திரு ஜான் ஹோகன் எழுதிய இணயப் பக்கத்தின் (ச்கோ சுட்டின அதே பக்கம்) கீழ் உள்ள விமர்சனங்களை பார்த்தால் மிக அருமையாக் இருக்கிறது ஆக்வே பின்னூடங்களை பார்க்கும் படி வேண்டுகிறேன். பார்த்தால் பின்னூடத்தில் அவரை மிகவும் விமர்சித்து இருந்தார்கள்.அவர் ஏற்கெனவே எழுதிய கட்டுரையை மாற்றி எழுதியதும் தெரிந்தது.
பின்னூட்டத்தில் பலரும் விமர்சித்தாலும் கொஞசமும் கவலைப்ப்டாமல் பதில் அளிக்காமல் இருக்கும் அவருடைய இணையப்பக்கம் சென்று பாருங்கள். அதிக நேரம் பார்க்க வேண்டாம் சிக்கலில் இழுத்து விட்டு விடுவார்கள். ஆன்மீகத்தையும் அறிவிய்லை கலந்து குழப்பும் இவர் மாதிரி ஆட்கள் நம் ஊரில் நிறையப்பேர் இருக்கிறார்கள்.
இவர் சொல்வதையும் பின்பற்றி மதச்சார்பின்மை வளர்க்கும் சகோ ஆத்திகர் ஆஸிக் அக்மதுக்கு பாராட்டுகள். நாளைக்கு நித்யானந்தா இப்புத்தக்த்தை விமர்சித்தாலும் பாராட்டப்படுவார்.அவ்வளவுதான்.
இவர் சொல்வதையும் பின்பற்றி மதச்சார்பின்மை வளர்க்கும் சகோ ஆத்திகர் ஆஸிக் அக்மதுக்கு பாராட்டுகள். நாளைக்கு நித்யானந்தா இப்புத்தக்த்தை விமர்சித்தாலும் பாராட்டப்படுவார்.அவ்வளவுதான்.
__________________
2. Columbia university
Hawking Gives Up - Peter woit, September 7, 2010. math.columbia.edu. link
அடுத்தவர் சகோ ப்யன்படுத்தும் பெயர் திரு பீட்டர் வொய்ட் கொலம்பிய பல்கலைகழகத்தில் கணித்ப் பேராசியராக பணிபுரிகிறார்.இவர் குவாண்டம் ஃபீல்ட் தியரி என்னும் முறையை இந்த எம் தியரிக்கு மாற்றாக கொண்டுவர முயற்சிப்பவர்.இதுவும் ஐன்ஸ்டின் சார்பிய&குவாண்டம் இயற்பியலை இணைக்கும் முயற்சியே.இவரும் இயற்கை வழி வாழ்பவர்(நாத்திகர்களில் கொஞ்சம் ஸ்பெசல்) என்னும் போது இவரை அறிமுகப் படுத்திய சகோ ஆஸிக்கிற்கு நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை.இவர் கூறுவதை பாருங்கள்.பீட்டர் வொய்ட்டின் விமர்சனம் இரு நாத்திகர்களுக்கிடையேயான் போட்டி.இதில் ஆத்திகர்கள் வேடிக்கை பார்க்கலாம்.
/I’m in favor of naturalism and leaving God out of physics as much as the next person, but if you’re the sort who wants to go to battle in the science/religion wars, why you would choose to take up such a dubious weapon as M-theory mystifies me./
இதைத்தானே ஸ்டீபனும் சொன்னாரு!!!!!!!!!!
இவர் ஏற்கெனவே ஸ்ர்டிங் தியரி தவறு என்று ஒரு புத்த்கம் கடவுளை பற்றி எதுவும் கூறாமல் 2006 ல் எழுதி உள்ளார்.இவருக்கு 2010ல் வந்த எம் தியரி பற்றிய புத்தக்த்தை விமர்சிக்க வேண்டிய கட்டாயம் புரியும்.
இவர் தியரி கொஞ்சம் படிக்க வேண்டும்.பீட்டர் வொய்ட்டின் இயற்கை நாடினால் இது பற்றி ஒரு பதிவு எழுத் ஆசை.
___________
3. Physics World (Institute of Physics).
M-theory, religion and science funding on the BBC - Hamish Johnston, Sep 8, 2010. Physics World. link
இந்த இணப்பில் இதுவும் சகோ கொடுத்த இணைப்புதான்.ஏன் சகோ சேம் சைட் கோல் போடுரார் என்றே தெரிய மாட்டேன்& வியப்பாக உள்ளது. என்ன கூறுகிறார்கள்?
This, and other recent pronouncements from Hawking in his new book The Grand Design were debated in a separate piece on Today by brain scientist Susan Greenfield and philosopher AC Grayling. Neither seemed too impressed with many of Hawking’s recent statements and Greenfield cautioned scientists against making “Taliban-like” statements about the existence of God.
நல்ல விஷயம்தான் சொல்லி இருக்கிறார்கள்.அறிவியலாளர்கள் கடவுளை தலிபான் மாதிரி ஸ்டைலில் வ்வரையறுத்து பேசாதீர்கள் என்று!!!!!!!!.
என்னத்தை சொலரது?.இப்படி பேசுகிறார்கள் என்றுதான் இந்த மறுப்பு பதிவு..அப்புறம் இம்மாதிரி அறிவியலுக்கு அரசு பணம் கொடுக்க கூடாது என்கிறார்கள்.இம்மாதிரி கடவுளை பற்றி சொன்னால் பொதுமக்கள் கோபப்படுவார்கள் ஏனெனில் அவர்களின் வரிப்பணம்தான் இப்படி அறிவியலுக்கு நிதி ஆகிறது என்கிறார். மிக்க அன்போடு கடவுளை விட்டு விடுங்க்ள் என்று கூறுவது புரிகிறது.
நாமும் இம்மாதிரி மதவாதிகளுக்கு வரும் பணத்தை அரசுகள் கண்கானித்து வருமான வரி வசூலிக்க வேண்டும் என வேண்டுகிறோம்.
________
முடிவுரை
1.ஸ்டீபன் ஹாக்கிங் எம் தியரியை பெருவிரிவாக்கத்திற்கு மாற்றாக வைப்பது பிரச்சினையில்லை.அதன் மூலம் அனைத்தையும் விவரித்தாலும் பிரச்சினையில்லை. கடவுள் தேவையில்லை இந்த விதிகளே போதும் என்பதுதான் பிரச்சினை.எம் தியரி என்ன எந்த Z தியரியையும் மத புத்தக்க்த்தில் வரவழைக்கும் அண்னன் "அஆஇஈ" க்கு வேலை இல்லாமல் செய்யும் உலகளாவிய சதியல்லவா இது?
2.முதல் சகோ ஜான் ஹோகன் ஒரு ஆன்மீக வியாபாரி.அவர் அப்படி சொலவதில் வியப்பில்லை.
3.இரண்டாம் சகோ பீட்டர் வொய்ட் த்னது குவாண்டம் தியரியை சார்பியல்_குவாண்டம் இயற்பியலை இணைத்து பிரபஞ்ச தோர்றம் விளக்கும் ஒரு கணித மேதை.இவரும் நாத்திகர் என்பதால் நாளை இவர் புத்தக்ம் எழுதினாலும் கடவுள் என்பதை (முன்னுரை,நன்றி உட்பட) குறிப்பிடாமலே எழுதுவார் என்பது உறுதி.இப்போதுள்ள புத்த்கத்திலும் கடவுள் படைத்தார் என்று எழுதவில்லை.பெரு விரிவாக கொள்கையின் எல்லைகளை உணர்ந்து அதற்கு மாற்று கொள்கை அமைக்கும் முயற்சியில் அறிவியல் உலகம் உள்ள்து என்பதை புரிந்து கொண்டால் சரி.
4. .Physics world பிபிசி செய்திகள் அறிவுறுத்திய தலிபான் ஸ்டைலில் கடவுளை பற்றி பேசக் கூடாது என்பது மிக அருமை.இதைத்தான் நான் சொல்ல வந்தேன்.
இயற்கை விதிகளை கடவுள் படைத்து விட்டு எல்லாவற்றையும் நீயே பார்த்துக் கொள் என்று ஒதுங்கி விட்டார் என்று சொல்வது போல் மத அறிவியலாளர்களின் கருத்து இருக்கிறது.அறிந்த வரை கடவுள் என்பதை ஆய்வுப்பூர்வமாக் உணர முடியவில்லை என்பதை அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள்.ஆனால் கடந்த காலங்களில் மட்டும் சிலருக்கு உதவி,செய்தி என்று கேசுவலாக் செயல் பட்டு இருக்கிறார்.சரி அது வேண்டாம்
இப்போதைய ஆய்வுகளில் உண்ர முடியாத ஒரு பரிமாணத்தில் கடவுள் இருக்கிறார் என்றால், என்றாவது ஒரு நாள் உண்ர முடியும் என்று நம்பினால் ஆட்சேபனை இல்லை. இப்போது போல் ஒரு நாளும் உணரமுடியாது என்று நாத்திகர்களும் கூறுகிறோம்.இரு செயல்களுக்கும் உள்ள வித்தியாசம் அனைவருக்கும் புரியும் என நினைக்கிறேன்.
அறிவியல் கடவுளின் இருப்பு குறித்து எதுவும் சொல்லாது,அக்கொள்கை இயற்கை நிகழ்வுகளை விளக்க தேவையில்லை என்றே கூறுகிறது. இதே போல் கடவுள் கொள்கையாளர்களும் செய்தால் நலமாக் இருக்கும்.
இந்த பதிவு இட ஓய்வு நேரம்,இணையம், கணிணி மட்டும் போதுமென்று நான் கூறினால் எப்படியோ அது போன்றே ,பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க இயற்பியல் விதிகள் மட்டும் போதும்,கடவுள் என்னும் கருதுகோள் தேவையில்லை என்றே ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
இத்னை மறுப்ப்வர்கள் பிரபஞ்ச தோற்றம் விவரிக்கும் ஒரு புத்த்கம் கடவுளின் செய்லாக வெளியிடட்டும் வரவேற்கிறோம்!. இன்னும் கொஞ்சம் பதிவு போட உதவியாக் இருக்கும்!!!!!!!!!!..
எதற்கும் பதிவின் தொடக்கத்தில் உள்ள பட்த்தை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.
இந்த பதிவு இட ஓய்வு நேரம்,இணையம், கணிணி மட்டும் போதுமென்று நான் கூறினால் எப்படியோ அது போன்றே ,பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்க இயற்பியல் விதிகள் மட்டும் போதும்,கடவுள் என்னும் கருதுகோள் தேவையில்லை என்றே ஸ்டீஃபன் ஹாக்கிங் கூறியுள்ளார்.
இத்னை மறுப்ப்வர்கள் பிரபஞ்ச தோற்றம் விவரிக்கும் ஒரு புத்த்கம் கடவுளின் செய்லாக வெளியிடட்டும் வரவேற்கிறோம்!. இன்னும் கொஞ்சம் பதிவு போட உதவியாக் இருக்கும்!!!!!!!!!!..
எதற்கும் பதிவின் தொடக்கத்தில் உள்ள பட்த்தை ஒருமுறை பார்க்க வேண்டுகிறேன்.
இதே போல் கடவுள் என்பது உங்கள் மூளை(லை)யில் மட்டுமே இருக்கிறார் என்ற கருத்தையும் விமர்சிக்க சகோ ஆஸிக்கை ஊக்குவிக்கிறேன்.
http://www.corante.com/brainwaves/archives/2005/01/19/is_god_in_your_brain_neurotheology.php
http://www.dailymail.co.uk/sciencetech/article-1339517/God-brain-Scans-activity-religious-people-meditate.html
நன்றி சகோ ஆஸிக் அகமது.
பிரப்ஞ்ச உருவாக்கம் &பெரு விரிவாக்க கொள்கை குறித்த காணொளி